உயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

மனுஷ்ய புத்திரன்



1.உயிரோசை

(www.uyirmmai.com)

வெளிவந்துவிட்டது

உயிரோசை

உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்-செப்டம்பர் 1 முதல்

உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ் தமிழில் இணைய எழுத்திற்கு இன்னொரு பரிமாணம் சேர்க்க இப்போது வெளிவருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது.

வாஸந்தி தொடர்ந்து எழுதும் அரசியல் சமூகப் பார்வைகள், சுகுமாரன் எழுதும் இலக்கியக் குறிப்புகள், மறைந்து வரும் நாட்டுப்புற மரபுகள் குறித்து ந. முருகேச பாண்டியன் எழுதும் தொடர், கழனியூரன் எழுதும் நாட்டார் கதைகள், புகழ்பெற்ற படைப்பாளிகளின் கடிதங்கள், பல்வேறு சமூக அரசியல் சமூக இலக்கிய நிகழ்வுகள் குறித்து மூத்த இளம் படைப்பாளிகள் எழுதும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகளுடன் இன்னும் பல புதிய அம்சங்களும் இடம்பெற விருக்கின்றன.

உயிரோசை உலகெங்கும் நடைபெறும் பல்வேறு கலை கலாச்சாரம் குறித்த நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிடும். நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை அச்சிட்ட அழைப்பிதழுடன் ஒவ்வொரு சனிக்கிழமை மதியத் திற்குள் மின்னஞ்சல் மூலம்அனுப்பினால் திங்கள் இதழில் பதிவேற்றம் செய்யப்படும்.

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலை இலக்கிய கலாச்சார நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பினால் உயிரோசை அவற்றை வெளியிடும்.

புத்தக அறிமுகங்கள், சிற்றிதழ் அறிமுகங்கள் தொடர்ந்து உயிரோசையில் இடம்பெறவிருக்கின்றன. புத்தகங்கள் பத்திரிகை களை உயிர்மையின் முகவரிக்கு ‘உயிரோசை’ என குறிப்பிட்டு அனுப்பலாம்.

உயிரோசை இளம் படைப்பாளிகளின் சிந்தனைகளுக்கும் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. உலகெங்கும் உள்ள படைப்பாளிகளிடமிருந்து சமூகம், அரசியல், கலைகள், வாழ்வனுபவம் சார்ந்த கட்டுரைகளையும் படைப்புகளையும் வரவேற்கிறது.

படைப்புகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதையே உயிரோசை பெரிதும் வரவேற்கிறது.. UNICODE, TSCII, TAB, TAM, BAMINI, VANAVIL, SOFT VIEW, SHREE LIPI உள்ளிட எழுத்துருக்களில் அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி அல்லது uyirosai.com@gmail.comஅல்லது uyirosai@uyirmmai.com

2. உயிர்மை பதிப்பக நூல்களை இணையத்தில் வாங்க . . .

உயிர்மையின் இணைய விற்பனைப் பிரிவு துவங்கப்பட்ட இந்த இரண்டு மாதத்தில் வாசகர்கள் காட்டும் ஆதரவும் ஆர்வமும் பெரிதும் உற்சாகம் தருகிறது. உலகெங்கும் இருந்து அன்றாடம் பெறப்படும் ஆர்டர்கள் தமிழ் வாசகப் பரப்பின் அளவுக்கும் ஆர்வத்திற்கும் ஒரு சாட்சியமாக இருக்கிறது. உயிர்மையின் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்த இணைய வாசகர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.

நூல்களை வாங்குவதற்கான அலைச்சல், காத்திருப்புகள் இனி இல்லை. உயிர்மை.காம் இப்போது உயிர்மை பதிப்பகத்தின் அனைத்து நூல்களையும் நேரடியாக வாங்கும் வசதியை அளிக்கிறது. உயிர்மை பதிப்பித்துள்ள தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளின் நூல்களை இனி நீங்கள் எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை.

1. உலகின் எந்த மூலையில் இருந்தும் கடன் அட்டை அல்லது வங்கி கணக்கு மூலமாக பாதுகாப்பாக நேரடியாக பணம் செலுத்தி நூல்களை வாங்கும் வசதி

2. நூல்களை ஆசிரியர்கள் சார்ந்தும், தலைப்பு சார்ந்தும், துறை சார்ந்தும் தேடும் வசதி

3. நூல்களைப் பற்றிய பத்திரிகை மதிப்புரைகள், கருத்துக்கள்

4. இந்தியா முழுக்க நூல்களை அனுப்பும் செலவை உயிர்மையே ஏற்றுக்கொள்கிறது. புத்தகவிலையுடன் இணைய பண பரிமாற்றத்திற்கான குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தினாலே போதும்.

5. அயலில் இருக்கும் வாசகர்களுக்கு குறைந்த அஞ்சல் கட்டணத்தில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறோம்.

6 புதிய வெளியீடுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

இன்றே வருகை தாருங்கள் உயிர்மையின் இணையப் புத்தகக் கடைக்கு.

தொடர்புகளுக்கு: sales@uyirmmai.com .

3. உயிர்மை மாத இதழின் இணைய வடிவம்

உயிர்மை மாத இதழ் இப்போது இணையத்திலும் முழுமையாக கிடைக்கிறது .உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களுடன் ரசனைக்கும் சிந்தனைக்குமான உரையாடலை நோக்கி உயிர்மையின் மதிப்பு வாய்ந்த பக்கங்கள் இப்போது விரிகின்றன.

மனுஷ்ய புத்திரன் சம கால சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து எழுதும் சிறப்பு பக்கங்கள்

பார்க்க . . . படிக்க . . . பங்கேற்க ஒரு முழுமையான இணையதளம்.

இன்றே வருகை தாருங்கள். www.uyirmmai.com


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com

Series Navigation

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்