ஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

செல்லத்துரை சுதர்சன்


“போர்க்களத்தில் உயிர்துறந்தால்
வீரமும் தியாகமும் அதற்குண்டு.
இதுபோன்ற மரணங்களுக்கு காரணம்
எதுவாக இருக்கக்கூடும்”

அண்மையில் நண்பர் குணேஸ்வரனின் தொலைபேசி அழைப்பு கொண்டுவந்த செய்தி> சாலை விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம். ”பார்வையாளனின் சோகம்” என்பது ராஜமார்த்தாண்டனின் கவிதைகளில் ஒன்று. அவரது மரணத்தைப்போலவே அதுவும் துயரம் ததும்பியது. சாலையில் நடைபெறும் விபத்தினை காணும் வழிப்போக்கனாகிய பார்வையாளனின் துயரம் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடாக அமைந்தது அக்கவிதை. மேற்குறிப்பிடப்பட்டது அக்கவிதையின் இறுதிக்கவிதையே. எழுதுகோல் மரணம் பற்றிய கவிதைகளை எவ்வளவு தீர்க்கமாக எழுதுகிறது! கவிதையோடு கவிதையாய் வாழ்ந்து> கவிதையையும்> கவிதையைப்பற்றியும் எழுதிய மனிதன் தன் கவிதை ஒன்றினைப்போலவே மரணத்தை முத்தமிட்டு அமைதியின் கீதத்திற்கு ரசிகனானான். நிகழக்கூடாத இது நிகழ்ந்தது 06-06-2009. நிகழ்ந்த போது அவருக்கு வயது 61.

அவர் விமர்சகர்> எழுத்தாளர்> கவிஞர்> தொகுப்பாளர்> பல ஆளுமை நிறைந்த ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய மட்டங்களில் சிறந்த மனிதர் என்று அறியப்பட்டவர். ஈழத்து மூத்த இலக்கியவாதிகள் இதுபற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏளிமை மிகுந்த இவர் பழகுவதற்கு இனிமையானவர். இவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் மத்தியில் இவர் ‘அண்ணாச்சி’ என்றே அழைக்கப்பட்டார். துமிழகத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள சந்தையடி. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர்> தினமணியின் முதுநிலை உதவி ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். கொல்லிப்பாவை என்ற சிற்றிதழை நடாத்தியவர். இச்சிற்றிதழ் 1976 லிருந்து வெளிவந்தது. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்> என் கவிதை> ராஜமார்த்தாண்டன் கவிதைகள்> புதுக்கவிதை வரலாறு> புதுமைப்பித்தனும் கயிற்றரவும் ஆகிய நூல்களின் ஆசிரியர். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெளியான தமிழ்க் கவிதைத் தொகுதிகள் மூன்றினதும் தொகுப்பாளர். தனது இறுதிக்காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய உலகில் அதிகபட்சம் சிறந்த கவிதை விமர்சகராகவே அவர் அறியப்பட்டிருந்தார். அவரது நிரந்தர ஓய்வு வரை அவரது எழுத்து முயற்சியும் தொடர்ந்தது. இவர் மேலான எனது கவனம் எட்டு வருடங்களுக்கும் மேலானது. கவனிப்புக்கான பிரதான காரணம் ஈழக்கவிதைகள் தொடர்பான அவரது வாசிப்புக்களே. நமது கவிதைகள் பற்றிய அவரது பதிவுகள் நுணுக்கமானவை> ஆழமானவை> வரலாற்று நோக்கு கொண்டவை> தமிழகத்தின் ஏனைய வாசிப்புக்களிலிருந்து வேறுபட்டவை. அவர் இல்லாது போன இத்தருணத்தில் ஈழக்கவிதைகள் தொடர்பான அவரது ஓட்டு மொத்தமான பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு நமது கவிதைகள் குறித்த அவரது நோக்குகளைப்பதிவு செய்து கொள்வது அவளியம். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே. இதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி.

ஈழக்கவிதைகள் தொடர்பாகப் பல தமிழக எழுத்தாளர்கள் தமது கருத்துக்களைப் பல்வேறு புரிதல்களின் அடிப்படையில் எழுதிவைத்துள்ளனர். பலர் புரியாமலும்> சிலர் புரிந்தும் புரியாமலும்> ஒரு சிலர் புரிந்துகொண்டும் தமது எழுத்துக்களை முன்வைத்துள்ளனர். வெங்கட்சாமிநாதன்> அ.மார்க்ஸ்> தமிழவன்> ஜெயமோகன்> எஸ்.வி .ராஜதுரை> அ.மங்கை> வ.கீதா> வீ.அரசு> ஜமுனா ராஜேந்திரன்> வேதசகாயகுமார்> வல்லிக்கண்ணன்> மதியழகன் முதலிய பலரும் ஈழக்கவிதைகளைப் பற்றி அறிவதிலும்> எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்> காட்டி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தத்தமது கருத்துநிலைக்கேற்ப பல்வேறு வித்தியாசமான புரிதல்களை நமதுகவிதை பற்றிக் கொண்டிருந்தனர். ஒருசிலர் காழ்ப்புணர்வு கொண்டு எழுதுபவர்கள் அவர்கள் கவிதைக்குள் புகுந்து வலிந்து பிழை தேடுபவர். இவர்களைப் போன்றவர்கள் ஈழத்திலும் இருந்தனர். இருந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரிலிருந்தும் ராஜமார்த்தாண்டன் வித்தியாசமானவர்.

“கவிதைக்குப் பல முகங்கள்> பல குரல்கள் உண்டு இது கவிஞனின் வாழ்க்கைப்பின்னணி அவனது ஆளுமை சார்ந்தது. எனினும் அந்தக்குரல் ஜீவன் மிகுந்ததாக வெளிப்பட வேண்டும். உண்மையின் குரலாக இருக்க வேண்டும். பாவனையும் பொய்மையும் கொண்ட குரல் எத்தனை தான் கவர்ச்சிகரமானதாயினும் ஒருபோதம் கவிதையாவதில்லை” என்று அவர் ஒரு இடத்தில் கூறுகின்றார். ஈழக்கவிதையை அவர் பன்முகத்தன்மையோடுதான் பார்த்தார். ஈழக்கவிதையின்; அங்கங்களையும்> முகங்களையும் அநா; விரிற்த மனத்தோடு அங்கீகாpத்தார். எனினும் அவரது பார்வை ‘நேசம் சார்ந்த லெளகீகப்பார்வை அல்ல’. மாறாக அது ‘விமர்சனம் சார்ந்த வரலாறு’.

ஈழக்கவிதை குறித்த தனது கருத்தை அவர் ஜெயமோகன் போன்ற தமிழக எழுத்தாளர்களைப்போல ஒரு மூலத்தை அடிப்படையாகக்கொண்டு ஒற்றைப்படையாக கட்டியமைக்கவில்லை. ஈழத்துக்கவிதைத்தொகுப்புக்கள்> அத்தொகுப்புகளிற்கு ஈழத்திலும் அதற்கு அப்பாலும் வெளிவந்த விமர்சனங்கள்> ஈழத்தில் கவிதை பற்றி வெளிவந்த கட்டுரைகள்> ஈழக்கவிதைகள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்> நூல்கள்> ஆய்வாளர்கள் இலக்கியவாதிகளின் நேர்காணல்கள்> ஈழம் பற்றிய சமூக> அரசியல்சார் நூல்கள்> பக்தி எழுத்துக்கள்> ஈழத்தில் வெளிவந்த பத்திரிகைகள்> சஞ்சிகைகள் இவை அனைத்தையும் சிரமப்பட்டு தேடி எடுத்து வாசித்து இவையெல்லாவற்றையும் அடிப்படையாக வைத்து தனது கருத்தை கட்டியமைத்தார். இதனால்தான் இவரது எழுத்துக்களில் அதிகளவு நேர்மைத்தன்மை இருந்து உயர்கல்விப் புலம்சார்ந்து தனது தமிழறிவை வளர்த்ததினாலும்> சிற்றிதழ்களுடன் தனது வாசிப்பு மனத்தை இறுகப்பிணைத்திருந்ததினாலும் இது அவருக்கு இயல்பாகவே சாத்தியமாயிற்று.

தமிழகச்சிற்றிதழ்களில் ஈழக்கவிதைகள்> கவிஞர்களுக்குப் பரவலான அறிமுகத்தைத் தனது எழுத்துக்கள் மூலம் ஏற்படுத்தியவர். புலம்பெயர் ஈழத்துக்கவிதை நூல்களின் விமர்சனம்> மதிப்பீடு ஈழத்தில் வெளிவருவதற்கு முன்பே அத்தொகுப்பைப்பெற்று தமிழகச்சிற்றிதழ்களில் எழுதும் வழக்கத்தையுடையவர். ஈழத்தின் எந்த ஒரு கவிதையையும் ஈழத்தின் வாழ்வியற்புலம்> சமூக> இலக்கியவரலாறு> இலக்கிய இயக்கங்களின் வரலாறு என்ற அடிப்படையில் வைத்து எழுதும் ஆய்வு மனம் அவருடையது. அத்துடன் தமிழகத்தின் கவிதைப்போக்குகளுடன் ஒப்பிட்டு ஈழக்கவிதை து}ங்கும் இடங்களையும்> துலங்கும் வெளிகளையும் அவர் காட்டினார். தமிழகக்கவிதையில் இல்லாத ஈழக்கவிதைக்கேயுரிய தனித்துவமான பக்கங்களையும் அவரது எழுத்துக்கள் குறித்துக்காட்டின.

ஈழத்தின் நவீன கதைகளையும் புதுக்கவிதையென்று கருதி எள்ளல் தன்மையான எழுத்துக்களை முன்வைக்கும் தமிழக எழுத்தாளர் பலரிலிருந்து இவர் பெரிதும் வேறுபட்டிருந்தார். இவர் நவீன கவிதை> புதுக்கவிதை என்ற இரண்டும் ஈழத்தில் எவ்வாறு மாற்றமும்> வளர்ச்சியும் பெற்றுவந்தது என்ற கதையை எவ்வித சிக்கலுமில்லாமல் எடுத்துக்கூறியவர். ஈழத்தில் நவீன கதையின் மாறுநிலையையும்> உரைநடையை வாகனமாக்கிப் புதுக்கவிதையென்ற நிலைக்கு வந்ததையும்> ஈழத்தில் புதுக்கவிதைகள் பலவற்றில் நவீன கவிதைகளின் விடுபடாத சாயலும்> விடுபட்ட தனித்துவங்களும் இருப்பதை அவர் அடையாளம் கண்டார். கவிஞனின் கவிதைக்குரலை மட்டுமல்லாது அவனது ஏனைய பதிவுகளையும் தேடிப்படித்து ஈழக்கவிதை குறித்த தனது வாசிப்பில் திருத்தங்களைச்செய்து கொண்டார். அவரது இடைவிடாத தாகம் அவரை வரதாpல் இருந்து அலரி வரையான ஈழத்துக்கவிஞா;களின் கவிதைகள் பற்றி எழுத வைத்தது.

“தமிழகத்தில் புதுக்கவிதை முன்னோடியான பிச்சமூர்த்தி 1934ல் எழுதிய காதல் என்னும் கவிதையே தமிழின் முதல்புதுக்கவிதை. தொடர்ந்து தமிழகத்தின் இலக்கிய இதழ்களில் புதியகவிதை முயற்சிகள் வெளிவந்தன. ஆனால் ஈழத்தில் 1943ல் தான் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13-06-1943ல் வெளிவந்த ஈழகேசாpயில் ‘ஓர் இரவினிலே’ என்ற நீண்ட வசன கவிதையை வரதா; எழுதியிருந்தார். ஈழத்தில் வெளிவந்த முதல் புதுக்கவிதை இது என்று கூறலாம்” என்று எழுதுகிறார். வரதாpலிருந்து துவாரகன்> அலரி வரை அவரது பார்வை நீண்டு விரிந்திருந்துது. ஈழத்தின் முக்கிய கவிஞா;கள் என்று நாம் கருதும் மஹாகவி> நீலவாணன்> முருகையன் பற்றியும்> மறுமலர்ச்சிக் கவிஞா;கள் பற்றியும் புதுக்கவிதை எழுதிய பல கவிஞா;களைப்பற்றியும் அவரது எழுத்துக்கள் எமது கவிதைச்சூழலின் தனித்துவத்தைக்காட்டின.

நவீன கவிஞரான மஹாகவி பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார்.
“மஹாகவியின் கவிதைப்போக்கு எந்தவிதமான இயக்கம் சார்ந்தோ> பழம் பெருமைகளைப்பேசுவதாகவோ> கற்பனைகளில் மிதப்பதாகவோ அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கைப்பிரச்சினைகளை> சமூக முரண்பாடுகளை யதார்த்தமாகவும் அங்கதத்துடனும் சித்தாpப்பதாக அமைந்தது. அதற்கேற்ப அவர் மரபார்ந்த செய்யுள் வடிவத்தைப் புறக்கணிக்காமல் பேச்சுவழக்குகளையும் பேச்சோசைகளையும் அதனுள் புகுத்தினார். தமிழகத்தில் கற்பனாவாத அலங்காரச் சொல்லடுக்குகளாகச் செய்யுள்களும்> பாடல்களும் எழுதப்பட்ட காலத்தில் மஹாகவி யதார்த்தமான பார்வையில் இயல்பான பேச்சு மொழி நடையில் எழுதினார்”. இதுபோலவே “ தமிழகத்திலும் ஈழத்திலும் பெருவாரியாக எழுதப்பட்டு வந்த பாரதி – பாரதிதாசன் பரம்பரைக் கவிஞா;களின் பொற்காலக்கனவுகளாகவோ> அலங்காரச் சொல்லடுக்குக் குவியல்களாகவோ இல்லாமல் புதிய விசயங்களை மிகையுணர்ச்சி இல்லாமல் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது முருகையன் கவிதைகளில் கவனத்திற்குரியதாகும்”. என்று எழுதினாலும் அவர் முருகையன் கவிதைகளை நுணுகி நோக்கிப் பின்வருமாறு எழுதினார்.

“ஈழக்கவிதைகளில் விஞ்ஞானக் கருத்துக்களைப் பொருத்தமாகக் கையாண்டிருப்பதையும்> பேச்சோசைத் தன்மையையும்> பேச்சுவழக்குச் சொற்களையும் கவிதைகளில் வெகுலாவகமாகக் கையாண்டிருப்பதையும் கைலாசபதி போன்றவர்கள் புதுமை என விதந்து கூறியதுண்டு இவையெல்லாம் கவிதையின் அமைப்பு சார்ந்த புதுமைகள் என்பது உண்மைதான் எனினும் ஒரு கவிதையின் சிறப்பம்சம்> தனித்துவம்> கலைவெற்றி இவற்றையெல்லாம் மீறிய அனுபவத்தின் தீவிரமான பதிவு சார்ந்தது. சுயமான பார்வையும் அதை வெளிப்படுத்தும் மொழி ஆளுமையும் சார்ந்தது. அவ்வகையில் முருகையன் கவிதைகள் கவித்துவமான வீர்யமான அனுபவ வெளிப்பாடுகளாக அமையவில்லை” என்று எழுதுவது எவ்வளவு யதார்த்தமானது.

எம்.ஏ.நு/மான்> சி.சிவசேகரம்> மு.பொன்னம்பலம்> வ.ஐ.ச.ஜெயபாலன்> அ.யேசுராசா> தா.இராமலிங்கம்> சேரன்> சண்முகம் சிவலிங்கம்> சு.வில்வரத்தினம் முதலிய பல முக்கிய கவிஞா;களின் கவிதைகளை அவர் நுணுக்கமாக மதிப்பிட்டார். ஒவ்வொருவரது தனித்துவமான அடையாளத்தையும் அவர் இனங்காட்டினார். ஒரு கால கட்டக்கவிதையின் பொதுத்தன்மையையும்> தனித்தன்மையையும் அவர் தெளிவுறக்காட்டினார். “ எழுபதுகள் காலகட்ட ஈழக்கவிதைகள் விவரித்துச்செல்லும் பாங்கில் நெகிழ்ச்சியான அமைப்புக்கொண்டவை. இக்காலகட்டத்தில் இப்போக்கிற்கு விதிவிலக்கானவராக யேசுராசாவையே சொல்லவேண்டும்…உரைநடையின் சாயல்கொண்ட அதேசமயம் கவிதைக்கான ஓசைநயமும் இழைந்த மொழிநடையில் தமிழகத்துப்புதுக்கவிதைகள் போலச்செறிவான அமைப்பில் அவர் எழுதத்தொடங்கினார்” என்பதை நாம் இங்கு குறிப்பிடலாம்.

ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றில் எண்பதுகள் காலகட்டம் முக்கியமானது. அரசியல் பிரக்ஞையும்> அழகியல் அம்சமும் நிறைந்த கவிதைகள் இக்காலத்தில் தோன்றின. இவற்றை விலாவாரியாக ராஜமார்த்தாண்டன் எடுத்துக்காட்டுகளுடன் எழுதுகிறார். 80களின் கவிதைப்போக்கின் முக்கிய அம்சமான பெண்ணியப் பார்வையை அவர் விதந்து எழுதுகிறார்.

“ஈழத்துப் பெண்கவிஞா;களின்; கவிதைகள் புதிய பார்வையில் வெளிப்படக்காணலாம். இந்தப் பெண்குரல்கள் தமிழகத்துப் பெண்குரல்களை விடவும் வித்தியாசமானவை. முன்னெப்போதும் கவிதைகளில் பதிவு செய்யப்படாதவை. ஆழ்ந்த சோகத்தையும்> அவலத்தையும்> விரக்தியையும் அதேசமயம் தவிர்க்க இயலாமல் தொடரும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துபவை”.

“ஆண்கவிஞா;களது கவிதை வெளிப்பாடுகளை விடவும் பெண்களின் கவிதைகள் செறிவாகவும் இறுக்கமாகவும் அமைந்தன. எண்பதுகளில் பெண்கவிஞா;களின் பங்களிப்பு ஈழத்துக்கவிதைப்போக்கில் ஒரு புதிய வெளிச்சத்தைக்காட்டியது. அந்த வெளிச்சம் தமிழகத்துக்கவிதைப் பரப்பிலும் படர்ந்து பரவியது முக்கியகான நிகழ்வாகும்”.

இவரின் இத்தகைய கணிப்பு உண்மை நிரம்பியது. வரலாற்றுப்பார்வை சார்ந்தது. 80களின் முக்கிய கவிஞா; சேரன் தான். இதில் இரண்ட கருத்திற்கு இடமில்லை என்று நம்மத்தியில் இறுகிப்போன வாய்ப்பாட்டின் மீதும் அவர் கேள்வி எழுப்பத்தயங்கவில்லை. சேரனது கவிதைகள் போரின் விளைவு> வன்முறையின் கொடூரம் முதலியவற்றை ஏனைய ஈழத்துக்கவிஞா;களின் கவிதைகளை விடவும் அதிர்ச்சியூட்டும் வகையிலும்> விமர்சனப்பாங்கிலும் வெளிப்படுத்தவல்ல ஆற்றல் கொண்டவை. சேரனின் இந்த ஆற்றல் கலை வெளிப்பாட்டின் எல்லையை சில கவிதைகளில் மீறி வெளிப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். 90களில் வெளிவந்த புதிய கவிஞா;களான பா.அகிலன் முதலியோரையும் 2000த்திற்குப் பின்வந்த கவிஞா;களையும் காலச்சூழல்> அரசியல் மாற்றம்> அழகியல் பழக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுகின்றார். உரைநடை பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில் கவிதையும் உரைநடைத்தன்மை கொண்டதாகவே வெளிப்படுத்தப்படுகிறது எனவும்> ஆனால் கவிதையில் மொழி உரைநடை அல்ல எனவும்> உரைநடையின் இயல்பை மீறிய உத்வேகமும்> உணர்ச்சியும் இயல்பான சப்த நயமுமே என அவர் முன் வைத்த கருத்துக்கள் நமது சிந்தனைக்குரியவை. இந்தக்கருத்தியலின் அடிப்படையில் தான் அவர் துவாரகனின் கவிதைகளையும் வாசிப்புக்கு உட்படுத்தினார்.

புலம்பெயர்வினால் வந்த கவிதைகளையும் உள்@ர் இடப்பெயர்வின் விளைவாகத்தோன்றிய கவிதைகளையும் அவர் ஈழத்துக்கவிதைப்பரப்பில் வித்தியாசமானவையாக அடையாளம் கண்டார். வடிவம்> கருத்தியல்> அனுபவம் முதலியவற்றில் அவை எவ்வாறு புதுமைத்தன்மை கொண்டமைந்தவை என்பதைப் பல இடங்களிலும் பதிவு செய்தார். புலம் பெயர் கவிதைகளுக்குள் பெண்கவிஞா;களின்; கவிதைகளை ஈழத்திலிருந்தும்> தனது புலத்திலிருந்தும் வித்தியாசப்படுத்திப் பார்த்து கண்டம் தாண்டிய சமூகக்கருத்தியல்கள் புதிய பகைப்புலத்தில் மாறாது வெளிப்படுவதைக் கோடிட்டுக்காட்டினார். அவர் கூறினார்.

“உலகின் எந்தக் கோடிக்குச் சென்றாலென்ன அல்லது பிரபஞ்சத்தின் எந்த எல்லைக்குச் சென்றால்தான் என்ன> நமது மக்களின் ஆழ்மனத்துள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வேர்பரப்பியுள்ள – பண்பாட்டுக் கட்டமைப்புக்களாலும்> முன்னோர்களாலும் திணிக்கப்பட்டு விட்ட சாதி> மத உணர்வுகள்> சடங்காசாரங்கள் அத்தனை எளிதாக உதிர்ந்து போய்விட> அவை என்ன ‘முட்டையின் ஓடா> புளியம்பழத்தின் தோடா? ‘ அந்நியச்சூழலில் புறவயமான மாற்றங்கங் சிலவற்றை எளிதில் சாத்தியமாக்கிக் கொண்ட போதும் அகவயமான மனம் அந்தப் புறவயமான மாற்றங்களால் சிறிதும் பாதிக்கப்படாமல் அப்படியேதான் உறைந்கிருக்கிறது”.

ஈழத்துக் கவிதை வரலாற்றில் இலக்கிய இயக்ககாரர் செய்த பாவம்களையும்> புண்ணியங்களையும் அவர் உரைக்கத் தவறவில்லை. ஈழத்தில் புதுக்கவிதை எதிர்பார்ப்பாளர்களாகப் பண்டிதா;களை மட்டுமல்லாது> கவிதை விடயத்தில் பண்டித மனோபாவம் படைத்தவர்களாகக் க.கைலாசபதி> இ.முருகையன் ஆகியோரை அவர் பெரிதும் அடையாளம் காட்டினார். இவர்கள் இருவரும் புதுக்கவிதையின் உள்ளடக்கத்ததை மட்டுமல்ல புதுக்கவிதை வடிவத்தையும் எதிர்த்ததைக்காட்டுகிறார். “ஈழத்தமிழ் விமர்சகரான க.கைலாசபதி சந்தா;ப்பம் வாய்த்த போதெல்லாம் இலக்கியப்பேட்டிகள்> கட்டுரைகள்> நூல்களில் புதுக்கவிதையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்” என்று எழுதுகிறார்.1967ல் தீபம் இதழில் கைலாசபதி புதுக்கவிதையை வெறுத்துக் கடுமையாகச்சாடி இருந்தார். இதற்குக்காரணம் கைலாசபதியைப் புடைசூழ்ந்து இருந்த கவிஞா;கள் நவீனகவிதைக்காரர்களாக இருந்தமையாகும். பின்னர் 1973ல் தமிழன்பனின் தோணி வருகிறது புதுக்கவிதைத்தொகுதியைப் பாராட்டி கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார். இதற்குக் காரணம் அப்போது சில முற்போக்குக் கவிஞா;கள் புதுக்கவிதை படைக்கத் தொடங்கி விட்டனர். கைலாசபதியின் ஆய்வறிவுப் புலமைக்கு வணக்கம் செலுத்தும் ராஜமார்த்தாண்டன் அவரது ‘லேபிள்’ பார்த்துச் சான்று வழங்கும் பழக்கத்தையும் சாடத்தவறவில்லை. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவர் கைலாசபதியை எதிர்க்கும் அதே வேகத்தோடுதான் சி.ரகுநாதன்> கு.அழகிரிசாமி> நா.பார்த்தசாரதி ஆகியோரையும் எதிர்த்தார் என்பதை கைலாசபதி தனது கட்டுரை ஒன்றில் (1979) “தருமு சிவராமு ஞானக்கூத்தன் முதலியோர் கையில் புதுக்கவிதை தன்னையே அழித்துக்கொள்ளும் பரிபக்குவ நிலையை எட்டியது” என்று எழுதியதைச்சுட்டிக்காட்டி கைலாசபதியின் இக்கருத்துக்கள் காலவோட்டத்தில் அடிபட்டுப்போனதை ஈழத்துக்கவிதை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு காட்டுகிறார்.

ஈழத்தில் வெளிவந்த பலரது கவிதைகள் அடங்கிய தொகுதிகளுள் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நு/மான் – யேசுராசா தொகுத்த பதினொரு ஈழத்துக்கவிஞா;கள்(1984) என்ற கவிதைத் தொகுதியைக் குறிப்பிடுகிறார்.

அவர் தமிழ்க்கவிதை பற்றி எழுதும் போது தமிழகக்கவிதை> ஈழக்கவிதை என்ற இரண்டினையும் அவதானித்து எழுதினார். ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளுக்கு “தமிழ்க்கவிதையும்”> “தமிழகக்கவிதையும்” ஒன்றுதான் அவர்களுக்கு எங்கும் “அத்வைதம்”தான்! இன்னும் ஈழக்கவிதைகளைப்பற்றி மட்டுமல்லாது> ஈழக்கவிதைகள் பற்றிய கட்டுரைகளையும் அவர் மதிப்பிட்டு எழுதினார். குறிப்பாகச் சண்முகம் சிவலிங்கத்தின் ‘மஹாகவியும் தமிழ்க்கவிதையும்’ கட்டுரை தொடர்பான மதிப்பீட்டைச் சொல்லலாம். ஈழத்துக்கவிஞா;கள்> ஆய்வாளர்களது ஈழக்கவிதை குறித்த கருத்துக்கள் காலம் தோறும் மாறிச்செல்வதை அவர் சுட்டிக்காட்டி வளர்ச்சியை இனங்காணுகின்றார். கவிதா நிகழ்வுகள் மூலம் நடைபெற்ற கவிதைப்பரிமாற்றம்> வளர்ச்சி பற்றி சேரனது எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்டு எழுதினார்.

ஈழக்கவிதைகள் பற்றித் தமிழக விமர்சகா;கள்> கவிஞா;களின் மெளனிக்கும் இயல்பை இடித்துரைக்கிறார். உதாரணமாக “ஈழத்தில் பெண்கவிஞா;களிடையே ஏற்பட்ட எழுச்சியின் தாக்கம் தமிழகக் கவிதைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஈழத்துக்கவிதைகளின் இந்தத்தாக்கம் தமிழகக்கவிஞா;களாலோ> கவிதைவிமர்சகா;களாலோ வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை” என்று எழுதுவதைக்குறிப்பிடலாம்.

இவரது தீவிரம் நிறைந்த தேடலும்> ஆழ்ந்த அவதானிப்பும்> விரிந்த பார்வையும்> ஆய்வு நோக்கும் ஈழக்கவிதைகள் குறித்த இவரது முடிவுகளை ஈழத்து ஆய்வாளர்களின் முடிவுகளோடும்> கருத்துக்களோடும் ஒன்றியவையாகக் காட்டின.
உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம் எம்.ஏ.நு/மான் “கவிதையின் அடிப்படை அம்சங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது உயிர்த்துடிப்பு – ஜீவன். ஈழத்துக்கவிதைகளில் சிலபோது வாசிப்பில் ஏற்படும் சலிப்புணர்வையும் ஆயாசத்தையும் மறக்கச்செய்வது கவிதையில் ஈர்ப்பை ஏற்படுத்துவது உயிர்துடிப்பான வெளிப்பாடுதான்” என்று கூறும் கருத்துடன் இவரும் ஒன்றிணைகிறார். “முக்கியமாகக் கவிதையில் வெளிப்படும் ஜீவன் – உயிர்த்துடிப்பு ஈழக்கவிதையைத் தமிழ்ப் புதுக்கவிதைப் போக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன என்று ராஜமார்த்தாண்டன் கூறுவது குறிப்பிடத்தக்கது.

ராஜமார்த்தாண்டன் இறுதியாக விமர்சனம் எழுதிய இந்தியக்கவிதைத் தொகுதி உதயநாராயண சிங்கினுடையது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி. இதன் பெயர் முன்னிலை ஒருமை.

ராஜமார்த்தாண்டன் இறுதியாக எழுதிய ஈழத்துக் கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனம் துவாரகனின் “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்“ என்பதற்குப் பிறகு அலரியின் “எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும்” என்பதாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

சமகாலத்தில் ஈழத்தில் வெளிவந்த தொகுப்புக்களில் துவாரகனின் கவிதைத் தொகுதி முக்கியமானது. இத்தொகுதியில் உள்ள பல கவிதைகள் மிகவும் வித்தியாசமானவை. ராஜமார்த்தாண்டன் “போர்ச்சூழலிலும் இயற்கையின் பால் குதித்தோடும் கவிமனம்” என்ற தலைப்பில் 101வது காலச்சுவட்டில் துவாரகனின் கவிதைகள் பற்றி எழுதியிருந்தார். அவ்எழுத்தில் அவர் இரண்டு முக்கிய அடையாளங்களை ஈழத்துத் தமிழ்க் கவிதையின் தனித்துவமாகக் காட்டுகிறார். ஒன்று இயற்கையை இயல்பாகக் கையாளும் திறன்> ஈழக் கவிதைகள் இயல்பாக கருத்தியலோடு இயற்கையைக் கலந்தவை. தமிழகத்தின் செயற்கைப் போக்கின் நின்றும் மாறுபட்டவை என்பது அவர் கருத்து. இரண்டாவது> இன்றைய கவிதைக்கான சமன் நிலை கொண்ட கவிதை மொழியைத் துவாரகனின் தொகப்பினூடு காணுதல்.

ஒரு கவிதை விமர்சகன் கவிஞனாக இருப்பது கொடுத்து வைக்கத்தக்க ஒன்று. கவிதை ஏற்படுத்தும் அனுபவங்களை அவனால் மொழியில் பரிமாற்றுவது இலகுவானது என்பதே அதற்கான காரணம். கவிதை தரும் அனுபவத்தை அப்படியே கண்டு மொழியில் வைப்பது கவிஞனாக இருக்கும் விமர்சகனுக்கு இலகுவானது>இயல்பானது> நோ;த்தியாகச் செய்யக்கூடிய ஒன்று. ராஜமார்த்தாண்டனுக்கும் இது இயல்பாயிற்று “துவாரகனின் கவிதை மொழி மிகையேதுமில்லாத உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத இன்றைய கவிதைக்கான சமன்நிலை கொண்டதாக வெளிப்படுகிறது. அதன்பின்னே சாம்பலின் கீழ் தீங்கங்குகள் போல் உணர்வலைகள் கனன்று கொண்டிருப்பதையும் கவிதைகளில் உணர முடிகிறது” என்ற பகுதியைக் குறிப்பிடலாம்.

இவர் இறுதியாக எழுதிய ஈழத்துக்கவிதைத் தொகுப்புக்கான விமர்சனம் “பறவைகள் கலவரப்படாத பறத்தல்” என்ற தலைப்பில் அமைந்தது. ‘எல்லாப்பூக்களும் உதிர்ந்து விடும்’ என்ற அலரியின் தொகுப்பை மதிப்பிடுவதற்கு அலரியின் முதல்வந்த இரு தொகுப்புக்களையும் குறிப்பிட்டு அதன் தன்மை பற்றிக் கூறி அதிலிருந்து ‘பாம்பு சட்டையை உரிப்பது போல காலந்தோறும் தன்னைப் புதிப்பித்து நகரும்’ அலரியை மூன்றாவது தொகுப்பில் காண்கிறார். ராஜமார்த்தாண்டன் எழுதிய புலம் பெயர் கவிதைத் தொகுதிக்கான இறுதிக்குறிப்பு திருமாவளவனின் ‘இருள் – யாழி’ என்ற தொகுதிக்கானது.”அன்னியனாய் அலைக்கழியும் மனத்தின் வெளிப்பாடு” என்ற தலைப்பில் அந்நூலில் அக்குறிப்பு இடம் பெற்றிருந்தது.

ஈழத்தில் மேடை விமர்சனங்கள்> இதழ்களில் வரும் விமர்சனங்கள் ‘பட்டும் படாமலும்’ என்ற நிலையில் காணப்படுகின்றன. இவற்றைவிட சில விமர்சகா;கள் தேடி அலைந்து புத்தகம் வாங்குவது இல்லை> ‘கிடைப்பதில்லை’ என்று சொல்வார்கள். தேடி வரும் புத்தகங்களுக்குக்கூட அவர்கள் குறிப்பு எழுதுவதில்லை. எழுத்தாளன் பெரும் சிரமத்தின் மத்தியில் தான் அச்சிட்ட நிலை. இவர்களுக்கு அனுப்ப இவர்கள் (வாசித்தோஈ வாசிக்காமலோ) நூல் கிடைத்தவுடன் அதில் திளைத்து மயங்கி விடுகிறார்கள். இதனால் இவர்களால் எழுத முடிவதில்லை!!! இத்தகைய சூழலில் ராஜமார்த்தாண்டன் போன்றவர்களின் மரணம் பேரிழப்புத்தான்.

ராஜமார்த்தாண்டன் ஈழப்புதுக்கவிதைகள் தொடர்பாக எழுதிய அளவிற்கு நம்மில் ஒருசிலரைத் தவிரப் பலர் எழுதவில்லை> எழுதும் எண்ணமும் இல்லை. சுந்தரராமசாமி ஒருகவிதையில் பின்வருமாறு கூறுகிறார்.

“நம் துக்கம் விமோசனத்துக்கு இட்டுச்செல்லும்
நண்ப
வருந்தாதே
வெட்கப்படாமல் துக்கப்படு”.

நன்றி :- ஞானம்> யூலை 2009> கொழும்பு.

Series Navigation

செல்லத்துரை சுதர்சன்

செல்லத்துரை சுதர்சன்