இஸ்லாம் : திண்ணை விவாதங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

கவிதா ஜெயச்சந்திரன்


ஆசிரியருக்கு,

வணக்கம். நான் தொடர்ந்து திண்ணை விவாதங்களை படித்து வருகிறேன்.

வஹ்ஹாபி நியாயமாக எழுதினாலும் இன்றைய நிலையில் அவை எல்லாம் சரி என்று (பிடி)வாதம் செய்வது அதிர்ச்சியாய் இருக்கிறது. அன்று இஸ்லாமிய மதம் சொன்னது நியாயம் என்கிறார் வஹ்ஹாபி. அன்று சரி ஆனால் இன்று தவறு என்பதை ஏன் அவர் சிந்தித்து பார்க்க மறுக்கிறார் என்று தெரியவில்லை. நேற்று டிவியில் பாம்பே நடிகர் ஒருவர் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று செய்தி சொன்னார்கள். இஸ்லாம் அடிமைகளையும் பணியாளர்களையும் ஒரே மாதிரி நடத்தச்சொல்கிறது என்று சொல்லும் வஹ்ஹாபி, இந்த நிகழ்சியோடு ஒப்பிட்டு பார்த்து எது சரி, எது தவறு என்று நியாய உணர்வுடன் சொல்லலாமே? வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. வஹ்ஹாபியின் நியாயங்களை பார்க்கும்போது அது மதத்தால்தானா என்ற சந்தேகம் மனதில் ஏற்படுகிறது. குவைத் அல்லது சவுதி அரேபியாவில் எத்தனையோ பணிப்பெண்கள் மானபங்கம் செய்யப்படுகிறார்கள் முதலாளிகளான முஸ்லீம்களால். ஆனால், ஒருவரை கூட கல்லால் அடித்து கொல்ல ஷாரியாத் இஸ்லாம் ஏன் சொல்வதில்லை? இதனால் தானோ?

நேசகுமாரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருகிறேன். நிதானமாகவும், ஆதாரபூர்வமாகவும், ஆடம்பரம் இல்லாமலும் அவர் எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது. இஸ்லாம் என்ற மதத்தில் இவ்வளவு நுணுக்கங்களா என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதியிருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது. மதவெறியர்கள் என்று ஹாமித் ஜாபரையும், வஹ்ஹாபியையும், நாகூர் ருமீயையும் சொல்லிவிட்டு ஆர்.எஸ்.எஸ் தான் நல்ல இயக்கம் என்று எழுதலாமா? நேசகுமாரின் எழுத்தில் இது ஒரு கரும்புள்ளி.

கவிதா ஜெயச்சந்திரன்


kavi.berkely@gmail.com

Series Navigation

கவிதா ஜெயச்சந்திரன்

கவிதா ஜெயச்சந்திரன்