இலை போட்டாச்சு ! -25 – எலுமிச்சம்பழச் சாதம்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

பாரதி மகேந்திரன்


எலுமிச்சம்பழச் சாதம்

தேவை

பச்சரிசி – அரை கிலோ
எலுமிச்சம்பழம் – 3
பச்சை மிளகாய் – 6 அல்லது தேவைப்படி
உளுத்தம் பருப்பு – 2 தே.க.
கடலைப்பருப்பு – 3 மே.க.
நிலக்கடலை (அ.முந்திரி) – 50 கிராம்
நல்லெண்ணெய் – 100 கி.
கடுகு – அரை தே.க.
கறிவேப்பிலை – 5, 6 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 3 மே.க. இலைகள்
பெருங்காயப் பொடி – அரை தே.க.
உப்பு – இரண்டரை தே.க.
மஞ்சள் பொடி – 1 தே.க.

முதலில் சமைப்பானில் உதிரி உதியாய்ச் சாதத்தைத் தயார் செய்து கொள்ளவும். பிற கலந்த சாதங்களுக்குச் சொன்னது போன்றே இரண்டு மடங்குத் தண்ணீரில் அரிசியை வேகவைக்கவேண்டும்.

நிலக்கடலை / முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்து வைக்கவும்.

கடலைப் பருப்பைக் களைந்து ஊற வைக்கவும். அரை மணி ஊறுவது நல்லது. பின்னர் கடாயில் தாளிப்பதற்கு மட்டும் சிறிது எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி அது காய்ந்ததும் கடுகைப் போட்டு அது முக்கால் பங்கு வெடித்த பின் உளுத்தம் பருப்பைப் போட்டு அது சிவந்த பின் அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஊறிய கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கடலைப்பருப்பு வதங்கி வெந்ததும் பெருங்காயம், மஞ்சள்பொடி, கொத்துமல்லித் தழை ஆகியவற்றையும் கலந்து கிளறவும்.

பின்னர், எலுமிச்சம்பழச்சாறு எடுத்து அதில் உப்புப்பொடியைப் போட்டு அது நன்றாய்க் கரைந்தபின் கடாயில் கொட்டிக் கலக்கவும். பின், சாதத்தில் அவற்றைக் கொட்டி, நிலக்கடலை / முந்திரிப்பருப்பு, மீதமுள்ள எண்ணெய் ஆகியவற்றையும் சேர்க்கவும். இதைக் கலந்தபின் குறைந்தது இரண்டு, மணி நேரமாவது அப்படியே விட்டு விடவேண்டும். இவை நன்றாய் ஊறிய பின் புளிப்புக் குறையும். தேவைப்பட்டால் மேலும் எலுமிச்சம் பழம் பிழியலாம்.

எந்தக் கலந்த சாதத்துக்கும் போல் இதற்கும் பொரித்த அப்பளம், வடகம், வறுவல் ஆகியவை ஏற்றவை. முடிந்தவர்கள் மசால் வடை அல்லது ஆமை வடை செய்துகொள்ளலாம்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்