இலை போட்டாச்சு 4 – பச்சை மோர்

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

பாரதி மகேந்திரன்


4. பச்சை மோர்

தேவையான பொருள்கள்

அதிகம் புளிக்காத கூழ் மோர் – 2 கிண்ணம்
பச்சை மிளகாய் – நான்கைந்து (அல்லது தேவைப்படி)
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – இரண்டு மூடிகளின் துருவல்
கடுகு – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், கடுகு ஆகிய மூன்றையும் மின்னம்மியில் அரைத்து நன்கு கடைந்த சிறு புளிப்பிலான கூழ் மோரில் கலக்கவும். இந்த அரையலை ரொம்பவும் மையாக மசிக்கக் கூடாது. கொஞ்சம் திரி திரியாக – கரகரப்பான அரையலாக – இருப்பது நல்லது. மிகவும் மசித்தால் சுவை குறைந்து விடும். உப்புப் பொடியையும் கறிவேப்பிலைகளையும் மஞ்சள் தூளையும் சேர்த்துக் கசக்கி அதில் போட்டுக் கலக்கவும்.

விருப்பம் உள்ளவர்கள் 2 சிட்டிகை பெருங்காயத் தூள் போடலாம். இதை அடுப்பில் ஏற்றவேண்டியதில்லை யாதலால் இது “பச்சை மோர்” என்று பெயர் பெற்றது.

ஆனால் கடுகு தாளித்தால் சுவை கூடும் என்பதால், அதற்காக மட்டும் அடுப்பை ஏற்றலாம்!

இது ஓர் அவசர. மோர்க்குழம்பாகும். தயாரிக்க மிகவும் எளிதானது. எரிபொருள் செலவு அற்றது.

நேரத்தை மிச்சப்படுத்துவது.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்