சந்திரவதனா ,யேர்மனி
தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த
கோமதிக்கு இன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது.
விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கிற நேரம் பார்த்து…. அந்தக் கடிதம் வந்ததில் இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று.
பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் எப்போதும் தானும் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு கோமதி வீட்டிலேயே நிற்பாள். போனமாதமும் ஏதோ காரணத்துக்காக பிள்ளைகளுக்கு நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. கோமதி விடுப்பு எடுத்து விட்டு வீட்டில் நின்றாள். அப்படி அவள் வீட்டில் நின்றால் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் தானும் பங்கு பற்றி விளையாடுவாள்.
அவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்… போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி, இன்னும் கொஞ்சம் வளர கேம்போய், நின்ரெண்டோ என்று அவர்களின் ஆர்வத்துக்கும் காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். இந்த விளையாட்டுக்கள் தற்போது இணையதளத்துக்கு மாறியிருந்தன.
சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் – சட்டன் – செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே கோமதியின் கடைசி மகன் மதுரனின் வேலையாக இருந்தது.
அன்றும் அப்படித்தான் கோமதி சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு
– ஷமதுரன் வா. வந்து சாப்பிடு.“ – என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தாள். மதுரன் வருவதாயில்லை. சற்றுக் கோபமாகக் கணணி இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
“அம்மா பிற்ற (தயவு செய்து) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் – என்று ஷ மூன்று பாசைகள் கலந்து மதுரன் அவளிடம் கெஞ்சினான்.
கோமதி கணணித் திரையைப் பார்த்தாள். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் சட்டன் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி www…. என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே – ஐ லவ் யூ – என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.
அவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து…. என்று உலகமெல்லாம் பொய்யும் புரட்டும் காதலுமாய்…. சட்டன் செய்து கொண்டிருந்தது கோமதிக்குச் சிரிப்பைத் தந்தது. அவளுக்கு அது சுவாரஸ்யமாகக் கூட இருந்தது. இருந்தாலும் – இப்ப வா. வந்து சாப்பிடு. – என்றாள்.
இப்போது அவன் கணணித் திரையில் அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன். – என்று எழுதி எல்லோருக்குமாக அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.
பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவன் காண்டாயையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் கோமதி. அவர்களின் கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.
நீ இப்பிடி நாள் முழுக்க – சட்டன் – செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா எல்லோ வரும். அது போக உன்ரை கண்ணுக்கும் எவ்வளவு கூடாது தெரியுமே..! கோமதி மதுரனைக் கடிந்தாள்.
என்னம்மா எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே.. ? பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது ? அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே.. ? போன கிழமை போஸ்ரிலை ஒரு சீடா வந்ததில்லோ..! இல்லையில்லை இரண்டு சீடா. அது அமெரிக்கன் ஒன்லைனிலிருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடாயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது.
சாப்பிட்டு முடிந்ததும் கோமதியும் அந்ந சீடாக்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள். மதுரன் மீண்டும் கணணி அறைக்குள் நுழைந்து கணணிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.
தொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் கோமதியின் மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. அவளுடன் சட்டன்; செய்தால் என்ன.. ? என்ற ஆசைதான் அது.
மதுரனிடம் ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டாள். அவன் கணணியை அவளுக்காக விட்டுக் கொடுக்கும் வரை அவனோடு சேர்ந்து அவளும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தாள்.
மாலை கணவர் சுந்தரேசன் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணணி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் சட்டன் செய்யத் தொடங்கினாள். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினாள்.
இடையில் சுந்தரேசர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது
கோமதி அவசரமாய் . அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே. ? என்றாள்.
சுந்தரேசருக்கும் கோமதியின் புத்திசாலித்தனத்தின் மீது நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார்.
அன்று இரவு சிவராத்திரிதான். காண்டா, மதுரன், கோமதி என்று மாறி மாறிச் சட்டன்தான்.
சுந்தரேசர்தான் இடையிடையே எழும்பி வந்து – என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு…. மனிசரை நித்திரை கொள்ளவும் விடமாட்டியள். – என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.
இன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். பிள்ளைகளோடு வெளியிலை போவமோ.. அல்லது அது செய்வமோ, இது செய்வமோ… – என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்திருந்தான்.
கோமதிக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள். ஊருக்கு அம்மாக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்.. ? பில்லைப் பார்த்தாள். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப் பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. என்னவாயிருக்கும்… கோமதிக்கு மலைப்பாய் இருந்தது.
இதுக்குள்ளை சுந்தரேசர் பில்லைப் பார்த்திட்டு கத்தத் தொடங்கி விட்டார். மனிசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்….
கோமதி ஒன்றும் செய்ய முடியாத அந்தரத்தில் கோபமாக தொலைத்தொடர்பு நிலையத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தி – ஏன் இப்படி ஒரு தவறான கணக்கு அனுப்பியிருக்கிறீர்கள்.. ? என்று கேட்டாள்.
அவர்களும் மிகவும் சங்கடப் பட்டு மன்னிப்புக் கேட்டு – பொறுங்கள்..! இரண்டு நாட்களில் பதில் தருகிறோம். – என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் அவளுக்கு அமெரிக்கன் ஒன்லைன் கிளை அலுவலகத்தின் ஞாபகம் வர சட்டன் பற்றிச் சொன்னாள்.
அப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அமெரிக்கன் ஒன்லைன் இனூடான இன்ரநெற் நுழைவு இலவசம் என்றாலும் யேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து – மறு அந்தத்தில் இருக்கும் அமெரிக்கன் ஒன்லைன் கிளை அலுவகம் உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே! –
கோமதிக்கு எங்கேயோ ஏமாந்த தனது புத்தி தன்னையே பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
—-
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்