இன்று நடிகர் சங்க கட்டிட நிதி – நாளை வருமான வாி பாக்கி… தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்கள் புறக்கண

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!


தங்களது சொந்த சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் தென்னிந்திய நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிக்கு மலேசிய ரசிகர்கள் ஆட்சேபம் தொிவிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு கொள்கின்றது.

இன்று சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசிய ரசிகர்களிடம் பணம் கேட்கும் இந்த நடிகர்கள், நாளை தங்களது வருமான வாி பாக்கியைச் செலுத்துவதற்கும், வீடு-நிலம் வாங்கியதற்கான கடனை அடைப்பதற்கும் தொடர்ந்து கலை நிகழ்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் பணத்தைக் கொள்ளையடிக்க வந்து விடுவார்கள் என பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாாி என். வி. சுப்பாராவ் கூறினார்.

150 பேர் கொண்ட தமிழக நடிகர் நடிகைகள், மலேசியா, சிங்கப்பூர், அமொிக்கா மற்றும் கனடா என பல வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்கப் போவதாக நடிகர் சங்கத்தினர் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

தங்களின் சொந்தக் கட்டிட கடனை அடைப்பதற்கு வெளிநாடுகளுக்குச் சென்றுதான் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமா என சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

இது என்ன போிடர் நிதியா வெளிநாடுகளில் சென்று பணம் திரட்ட என அவர் கேட்டார்.

இலட்சணக்கில் சம்பாதிக்கின்ற, நடிகர் நடிகைகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வருமானத்தில் சிறு பகுதியை நன்கொடையாக வழங்கினாலே நடிகர் சங்க கடனை அடைத்து விடலாம். அதை விடுத்து மற்றவர்களிடம் கையேந்துவது வேதனையைத் தருகின்றது என சுப்பாராவ் கூறினார். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என அவர் மேலும் கூறினார்.

நமது நாட்டிலேயே கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களும், கடனைச் செலுத்தி முடிக்க முடியாத கட்டிடங்களும், கட்ட வேண்டிய கட்டிடங்களும் பட்டியலில் இருக்கும் போது, நமக்கு தொடர்பு இல்லாத அல்லது எந்த விதத்திலும் ஆதாயம் தராத ஒரு கட்டிடத்திற்கு மலேசிய ரசிகர்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்.

மலேசிய ரசிகர்கள் விழிப்படைய வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக் கொள்கின்றது.

தமிழக கலைஞர்களுக்கு நாம் ஆதரவு தரக்கூடாது என்பதல்ல. ஆனால் எப்படிப்பட்ட காரணங்களுக்காக நாம் ஆதரவு தருகின்றோம் என்பதுதான் முக்கியம்.

தங்களின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தனிப்பட்ட ாீதியில் யாருக்கும் தொியாமல் பணம் கொடுக்கலாம். ஆனால், கலைநிகழ்ச்சி என்று போர்வையில் சொந்த கடனை அடைக்க நிதி திரட்டுவது ஏற்புடையதல்ல, இது கண்டிக்கப்பட வேண்டும்.

ஆகவே, மலேசியாவில் தென்னிந்திய நடிகர் நடிகைகளின் கட்டிட கடன் அடைப்பு கலை நிகழ்ச்சி நடத்தப்படக்கூடாது, அதற்கு மலேசிய ரசிகர்கள் ஆதரவு தரக்கூடாது என என்.வி. சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

என்.வி.சுப்பாராவ்

கல்வி அதிகாாி

***

e-mail: subba_cap@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு