இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள் – ‘கஜுராஹோ ‘, ‘இந்திய காம நூல்கள் ‘ புத்தகங்கள் விமர்சனம்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

தோலோ மித்ரா


KHAJURAHO By Devangana Desai, Oxford, Rs 395

INDIAN EROTICA By Alka Pande and Lance Dane, Roli, Rs 695

கஜுராஹோ, இந்திய எரோடிகா என்ற இரு புத்தகங்களும், காமம் சார்ந்த இந்தியக் கலைகளின் வேறு பல முகங்களை ஆராய முட்படுகின்றன. சிக்கலும், பரந்ததுமான இந்த பொருளைப் பற்றி ஆராய்வதற்கு, பல முகங்களையும், பல புரிதல்களையும் தன்னுள் கொண்டு, அதே நேரத்தில் இவற்றைக் கொச்சைப்படுத்தாமலும், எதனையும் விட்டுவிடாமலும் இருப்பதற்கும் முயற்சி செய்திருப்பதை பாராட்ட வேண்டும். மிகவும் துல்லியமான ஆராய்ச்சியின் விளைவாக உருவான இந்த புத்தகங்களும், தங்களை, இந்த துறையில், முழுமுதல் புத்தகங்களாகக் குறிப்பிட்டுக்கொள்ளாமல் இருப்பதும் பாராட்டத்தக்கது.

‘கஜுராஹோ ‘ புத்தகம் ‘ஆக்ஸ்ஃபோர்ட் பெரும் பாரம்பரியம் ‘ நூல் வரிசையின் பகுதி. இந்த வரிசையில் இந்தியாவில் இருக்கும் உலக பாரம்பரிய இடங்களாக அறியப்பட்டுள்ளவையை பற்றி விவரணங்களைத் தரும் புத்தகங்கள் வருகின்றன. கஜுராஹோவின் காமச்சிற்பங்களை, சமயம், இந்திய தத்துவ இயலில் காமத்துக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள உறவு, சமயப்புத்தகங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் தேவாங்கன தேசாய் ஆராய்கிறார்.

இந்தக் காமச்சிற்பங்களுக்கு பலவித அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. சிலர் இவற்றை, பழங்குடிக்கடவுள்களின் இனப்பெருக்கச் சடங்குகள் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், மறைந்திருக்கும் ஆன்மீக படிமப்பொருள்களை இவற்றில் பார்க்கிறார்கள். அந்தகாலத்து கட்டடக்கலை புத்தகம், ‘யந்திரா ‘ என்னும் கோவில்களைச் சுற்றி வரையப்படும் கோடுகளைப் பற்றியும், இந்தக்கோடுகள் கோவில்களை நோக்கி வரும் தீய சக்திகளை விரட்டுவதாகவும் பேசுகிறது. இந்தக்கோடுகளை காமச்சிற்பங்கள் மூலம் மறைத்து வைப்பதையும், அந்த காமச்சிற்பங்களால் சந்தோஷப்படும் பாமர மக்களிடமிருந்து கோவிலையும் அதன் ஆன்மீகத்தையும் காப்பாற்றுவதையும் பேசுகின்றன.

தேசாய் அங்கிருக்கும் எல்லா 22 கோவில்களைப் பற்றியும் ஒளிப்படங்கள் மூலமும், வரைபடங்கள் மூலமும் விளக்குகிறார். காமம்- ஆன்மீகம் என்ற த்வைதம் இவரால் இப்படி விளக்கப்படுகிறது. ‘ஆன்மீகத்தின் மூலப்பொருள் கருவறையில் நிறுவப்பட்டிருக்கிறது. காமச்சிற்பங்கள் அதனைச் சுற்றி இருக்கின்றன. மையத்தில் அத்வைதமான உருவற்றது. உயிர்மை உருவற்ற அத்வைதமான அண்டவெளியிலிருந்து வெளிவருகிறது. மனித உடல், ஆண், பெண் என்பது த்வைதத்தின் உச்சநிலை. இந்த த்வைதம் பெளதீகமான நிலையில் மீண்டும் இணைவது ஆரம்ப அத்வைத ஒருண்மையான பேரானந்தத்துக்கு திரும்பிச்செல்ல வழிவகுக்கிறது. ஆகவே காமம், ஆன்மீகத்தின் பெளதீக வெளிப்பாடு ‘

கஜுராஹோ காமச்சிற்பங்கள் பற்றிய சில பொதுவான அனுமானங்களை உதறித் தள்ளுகிறார். காபாலிகர்களின் தாந்திரீக குழுமம் இந்தக் கட்டடங்களோடு தொடர்பு கொண்டது என்பதையும் மறுக்கிறார். அதேபோல, ஆன்மீகக்கட்டங்களில் இருக்கும் காமச்சிற்பங்கள், சாதாரணர்களுக்கு காமம் பற்றி விளக்கம் தர உருவாயிற்று என்பதையும் மறுக்கிறார்.

கஜுராஹோ புத்தகம், பிரயாணிகளுக்கு உதவும் வகயிலும் எழுதப் பட்டிருக்கிறது. இங்கு வரும் பிரயாணிகளுக்குத் தேவையான விஷயங்களைச் சொல்வதோடு, இங்கு வருவதற்கான ஆர்வத்தையும் உருவாக்குகிறது.

‘இந்திய எரோட்டிகா ‘ என்ற புத்தகத்தில் அல்கா பாண்டே அவர்கள் இந்திய ஒளி ஒலி அரங்கில் காமம் எவ்வாறு காட்டப்படுகிறது என்பதை ஆராய்ந்திருக்கிறார். ‘மிகப்புராதனமான வரலாற்றுக்கு முந்தைய குறியீடுகளிலிருந்து, இன்றுவரை எல்லா அச்சு மற்றும் மின் விளம்பரங்களிலும் காமப்படிமங்கள் கூச்சலிடுகின்றன ‘

இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பம்சம் அதன் அசல்தன்மை. நவீன விளம்பரத்தின் படங்களோடு புராதனமான மண் சிற்பங்களும் ஒரே பக்கத்தில் நிறுத்தப்படுகின்றன. சினிமாவில் காட்டப்படும் காமத்தையும், புராதன தாந்திரீக மற்றும் ஆன்மீக காம படிமங்களையும் ஒரே தரத்தில் ஆய்கிறார்.

காதல்-காமம் தோய்ந்த படைப்புகளுக்கும், போர்னோகிராஃபி எனப்படும் மஞ்சள் புத்தகங்களுக்கும் உள்ள வேறுபாடும் விவாதிக்கப் படுகிறது. ‘இந்திய எரோடிகா ‘வின் தனித்தன்மை ராஜஸ்தானி சிற்றுருவப் படங்களிலும், காமசூத்ராவின் சித்தரிப்பிலும் உள்ளது. லான்ஸ் டேன்-இன் காமிரா துல்லியமாய் இவற்றை வெளிப்படுத்துகிறது.

Series Navigation

தோலோ மித்ரா

தோலோ மித்ரா