ரஷ்யாவும் ப்ரான்சும் இணைந்து விண்வெளி பயணங்களை மேற்கொள்வது பற்றி பேசி வருகின்றன. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்களை ஃப்ரான்ஸ் நாட்டின் கோரோ விண்மையத்திலிருந்து செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு புதிய துணைக்கோளை விண்ணுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த துணைக்கோளின் முக்கிய வேலை, இந்த பேரண்டம் துவங்கியபோது இருந்த மகா வெடிப்பு காலத்து பழங்கால ஒளியைச் சேகரிப்பதுதான். சென்ற சனிக்கிழமை கேப் கெனவரால் என்ற விண்மையத்திலிருந்து இது விண்ணுக்கு ஏவப்பட்டது
ஜெலட்டின் என்ற பொருள் மாடு ஆடு வீண் மாமிசத்திலிருந்து எடுக்கப்படுவது என்பது அறிந்ததே. (தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஜெலட்டின் என்பது மாமிசம் என்பது பல சைவ உணவு மக்களுக்குத் தெரியாது.) இவ்வாறு தயாரிக்கும் ஜெலட்டின் முறை வழியாக பெறும் ஜெலட்டின் வழியாக ‘மேட் கெள வியாதி பைத்திய பசு வியாதி ‘ வரும் வாய்ப்பு குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
மூளை இறந்த பிறகும் மனம் இருக்கிறது, அதில் ஞாபகம் சேர்கிறது என்று ஒரு விஞ்ஞானி சொல்கிறார். இது பலத்த விவாததுக்குள்ளாகி இருக்கிறது.
அக்குபஞ்சர் என்னும் ஊசி குத்து மருத்துவம் கழுத்து வலிக்கு மஸாஜ் பண்ணுவதைவிட நன்றாக குணப்படுத்துகிறது என்று ஜெர்மானிய மற்றும் ஸ்விஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
- முடிவின் துவக்கம்…..
- எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு (E.T)..
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- மனக்கோலம்
- இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001
- பொறாமை
- விசித்திர வதை
- இருளில் மின்மினி
- இதயம் கூடவா இரும்பு ?
- ஆயுள்
- இருதயம் எஙகே!
- காதல் சேவை
- முன்றாவது நிலவு
- தீயவனாக இரு!
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2001
- செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)