இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

முனைவர் துரை.மணிகண்டன்



பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லுரியில் தமிழ் இலக்கிய
மன்ற விழா 18.02.2009 (புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கல்லூரி முதல்வர்
பேராசிரியர் முனைவர் இரா.சுவாமி நாதன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.அவ்விழாவில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் நான்
உரையாற்றினேன்.

இணையம் என்றால் என்ன? இணையத்தில் தமிழ் எந்த அளவிற்கு
செல்வாக்குப்பெற்று வருகிறது என்பதைக் காட்சி முறை வழி
நடத்திக்காட்டினேன்.இணையத்தில் தமிழை எப்படி பதிவு செய்வது என்பதை சுரதா
எழுதிகொண்டு செயல்படுத்திக்காட்டினேன்.

தமிழ் இணையதளங்களையும் அதன் மூலம் நாம் பெரும் பலன்களையும் விரிவாக
எடுத்துக்கூறினேன். ஒருசில இணைய இதழ்களான்
திண்ணை,பதிவுகள்,முத்துகமலம்,வார்ப்பு,தமிழ்த்திணை, நிலாச்சாரல்,தமில்
நெட், தமிழ் நேசன், தமிழ்மரபு அறக்கட்டளை போன்றவைகளையும் எடுத்துக்காட்டினேன்.

தமி இணையப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் குறித்தும்,அதில் உள்ள
நூலகளினையும், கதைகள் பற்றியும் பேசினேன். மேலும் பாரதிதாசன்
பல்க்லைக்கழகத்தின் மாண்மைமிகு முனைவர்.பொன்னவைக்கோவின் தமிழ்
பற்றுக்குறித்தும், அவர்களின் தமிழ்ப்பணி இணையத்தில் எந்த அளவிற்கு
சிறந்து விளங்குகிறது என்பதையும் மாண்வர்களுக்கும், பேராசிரியர்களுக்கு
எடுத்துக்கூறினேன்.

தமிழ் விக்கிபீடியாவின் அளப்பறியா தொண்டை யும் அதில் கட்டுரை எழுதி
அனுப்பும் வழிகளையும் விளக்கினேன்.

ஒருங்குறி மூலம் தமிழைத் தட்டச்சு செய்தும் அதனை மாணவர்களுக்குப்
பயன்படுத்தியும் காட்டினேன். மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு
கடவுச்சொல்லை உருவாக்கிக் கொடுத்து அதில் அவர்களுக்கு உபயோகப்படுத்தியும்
காட்டினேன்.

சுமார் முன்று மணி நேரம் நடந்த இன் நிகழ்விழ் நூற்றுக்கும் அதிகமான தமிழ்
மாணவ மாணவியர்கள் ,தமிழ் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்

தமிழ் இணையதளத்டினை தினமும் உலகில் 10 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர்.
தமிழ் மரபு அறக்கட்டளை என்ற இணையதளத்தில் தமிழின் வரலாறும்,
தமிழ்மொழிக்கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்தும்
பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்றவர்களால்தான் கணிப்பொறியையோ, இணையத்தையோ பயன்படுத்தமுடியும்
என்ற நிலையை மாற்றி தமிழிழும் இணையத்தைப்பயன்படுத்தமுடியும் என்பதை
தெளிவாக விளக்கிக்காட்டினேன்.

சிங்கப்பூர்,மலேசியா, கணடா, தென்கொரியா,ஜெர்மனி, நார்வே, இலைங்கை போன்ற
நாடுகளில் தமிழ் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நம் தமிழ் மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக இணையத்தைப் பயன்படுத்தாமல் தமிழ்
சமுதாயத்தைப் பழுது பார்ப்பதாக இணையத்தைப் பயன்படுத்தவேண்டுகிறேன்.

சுமார் முன்று மணி நேரம் நடந்த இன் நிகழ்விழ் நூற்றுக்கும் அதிகமான தமிழ்
மாணவ மாணவியர்கள் ,தமிழ் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்

இவ்விழாவிற்கு தமிழ்த்துறையின் தலைவர் திரு. தமிழ்மாறன்,உயிர்தொழில்
நுட்பவியல் துறைத்தலைவர் திரு.ராமமூர்த்தி,மற்றும்
பிறத்துறைப்பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்