ஐகாரஸ் பிரகாஷ்
படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத எழுத்து திரைப்படத்திலே விரிவாகச் செய்திருக்கிறார் என்று எங்கும் சொல்லவி
ல்லை. அலைபாயுதே படத்தின் ஆரம்பக் காட்சி, இரு வேறு கோணங்களில் இரண்டு முறை வரும் . ஆய்த எழுத்திலே மூன்று முறை.
ஆனால் கதைதான் ரொம்ப இடிக்கிறது. அயோக்கிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாணவர் பட்டாளத்தைப் பற்றிய கதை என்று தான் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், மேலே சொன்ன திரைக்கதை உத்தியை இன்னும் அழுத்தமாக பரிசோதனை செய்து பார்க்கிற முயற்சி என்றுதான் தோன்றுகிறது. அந்த முயற்சியிலே மாணவர்களின் அரசியல் என்பது ஒரு தன்னேர்ச்சி மட்டுமே.
ஏதாவது ஒன்றை முந்தைய படத்தில் செய்து அது திருப்தி யாகவோ அல்லது திருப்தி இல்லாமல் போனாலோ அதை அவர் மீண்டும் இன்னும் refined ஆகச் செய்வார். அவருடைய பல படங்களில் இந்த போக்கினைப்
பார்க்கலாம்.
பகல்நிலவில் வந்த உடையார் ( சத்யராஜ்), கொஞ்சம் சுத்திகரிக்கப் பட்டு நாயகனில் வேலுநாயக்கராக ஆனார். இன்னும் கொஞ்சம் மனிதத்தன்மை சேர்ந்து தளபதியிலே சூர்யாவாக ஆனார். புத்திசாலிக் குழந்தைகளும் அப்படித்தான். கீதாஞ்சலி, நாயகனில் வந்த குழந்தைகள், அஞ்சலியில் இன்னும் புத்திசாலிகளாக வந்தனர். அதே பாத்திரம் தான், ஆய்த எழுத்து படத்தின் சித்தார்த்தின் whizkid brotherஆகத் தொடர்கிறது. அவருடைய பல படங்களில் நாயகன்/நாயகியைத் துரத்தும் நாயகி/நாயகனின் உத்திகள், வசனங்களில் இந்தப் போக்கினைப் பார்க்கலாம். ஆய்த எழுத்திலும் இது தொடர்கிறது.
படத்திலே மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள்.
இன்பசேகர்( மாதவன்) பாத்திரம் highly unrealistic. நடிப்பும் எதிர்பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. இன்னொரு பிரகாஷ்ராஜ் உருவாகிக் கொண்டிருக்கிறார் ?
மைக்கேல் வசந்த் ( சூர்யா ) பாத்திரமும் ரொம்ப மிகை. ஜீனியஸ். அழகாக இருப்பார். ரெளடிகளை துவம்சம் செய்வார். ஃப்ரெஞ்ச் மொழி பேசுவார். லாக்கப் சுவற்றில் பூச்சி பூச்சியாய் தியரம் போட்டு நண்பர்களுக்கு பாடம் எடுப்பார். பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சவால் விடுவார். அமெரிக்காவில் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப் கி
டைத்தாலும் போகாமல் தமிழ்நாட்டிலேயே இருப்பேன் என்று சொல்வார். மாணவர்களையெல்லாம் ஒன்று திரட்டி எலக்ஷனில் நின்று ஜெயிப்பார். இதற்கு இடையில் ஈஷா தியோலுடன் காதல் செய்வார். ஒரே நேரத்தில் பத்து பேரை அடித்து நம்ப இயலாத உடல் வலிமையைக் காட்டும் விஜயகாந்த் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கும், எல்லா விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டாக இருந்து மூளை பலத்தைக் காட்டும் மைக்கேல் பாத்திரத்துக்கும் அதிக வித்தியாசமில்லை.
யதார்த்ததுக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லாத , ஹீரோயிசம் தூக்கலானது இந்தப் பாத்திரம். ஆனால் இது தான் பரவலான பாராட்டைப் பெறும். அதற்குக் காரணம், சூர்யாவின் நடிப்பு. அவருடைய கண்களில் தெரியும் தீவி
ரம், பாத்திரத்துக்கு ஏற்ற பாடிலேங்க்வேஜ் , வசன உச்சரிப்பு, பாத்திரத்தின் மீதான கன்விக்ஷன் என்று படம் முழுக்க சூர்யாவின் ராஜாங்கம் தான்.
அர்ஜுன் ( சித்தார்த்) பாத்திரப்படைப்பு தான் கொஞ்ச மாவது யதார்த்தத்துக்கு கிட்டே வருவது. எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்து விட்டு, ‘ஐஏஎஸ்ஸா ? ச்சீ த்தூ ‘ என்று ஒதுக்கிவிட்டு, அடுத்த வாரமே அமெரிக்கா போக ஆசைப்பட்டு , ஜெமினி ஃப்ளைஓவர் கீழே கான்ஸலேட் வாசலில் , க்யூவில் நிற்கிற இன்றைய தலைமுறையின் பிரதிநிதி. சந்தர்ப்ப சூழ்நிலைகளினால், அவரது மதிப்பீடுகள் மாறுகின்றன. நடிப்பு ஓகே ரகம்.
மூன்று கதைகளைச் சொல்லும் போதும், ஒவ்வொருத்தரின் முகத்திலும் காமிராவை ஃப்ரீஸ் செய்து, சப்டைட்டில் போட்டு, சொல்ல வேண்டிய சூழ்நிலை. மஃப்சல் ரசிகர்களுக்குப் புரியவேண்டுமே! இரண்டு கதை முடிந்த உடனே
இன்டர்வெல் விட்டாகவேண்டிய நிர்ப்பந்தம். இது போன்ற பல சமரசங்கள்.
ஏசி ரூமில் உட்கார்ந்து கதை செய்வதில் ஏற்படுகின்ற சிக்கல் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இன்றை தேதிக்கு தேர்தல் என்றால், துட்டு, பிரச்சாரம், எலக்ஷன் கமிஷன், கள்ள ஓட்டு, லஞ்சம், மூலைக்கு மூலை மைக் , கட்சிகளின் வாக்கு வங்கி, சின்னங்களின் மீதான லாயல்ட்டி, என்று ஏகப்பட்டது இருக்கிறது. அதையெல்லாம் தூக்கி கடாசி விட்டு, ஜன கன மண என்று ஊர் ஊராக, ஊர்வலமாக பாடிக் கொண்டு ஓட்டு கேட்டு
ஜெயிக்க முடியுமா ? லாஜிக்கே இல்லை.
நாயகிகளில் ஹேமமாலினி மகளும் த்ரிஷாவும் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோயின்கள். bubbly and talking strange. கொழு கொழு பொம்மை மாதிரி இருந்த மீரா ஜாஸ்மின் இத்தனை நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. புடவைத் தலைப்புதான் தோளில் நிற்காமல் ஒரே இம்சை 🙂
சாதாரண வில்லத்தனமான அமைச்சர் கேரக்டருக்கு பாரதிராஜா ஏன் என்று படம் பார்த்த பின்பு தான் புரிகிறது. டாவிக்களில் எப்படி பேசி பார்த்திருக்கிறோமோ, அதே போல உணர்ச்சி வசப்பட்டு பேசும் பாத்திரம் அவருக்கு. அவர் அவராகவே நடித்திருக்கிறார். நிஜ மனிதர்களின் சாயல் வரக்கூடாது என்பதற்காக , கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில் வந்து , மனிதர் தூள் கிளப்பி இருக்கிறார்.
மணிரத்னம் படங்களிலே, அங்கங்கே, ரசிக்கிற மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் நிறைய இருக்கும், படம் பார்த்துவிட்டு வந்து மெதுவாக அசை போட்டு பார்க்கிற மாதிரி. அதல்லாம் இதிலே மிஸ்ஸிங். கதை சொதப்பல் என்றாலும், சொன்ன விதத்துக்காக, மணிரத்னத்தின் technical prowess உக்காக படத்தை ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.
—-
icarus1972us@yahoo.com
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்