அவல் —முக்கால் ஆழாக்கு
கடுகு —கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு —அரை ஸ்பூன்
வற்றல் மிளகாய் —2
தேங்காய்த்துருவல் —3 ஸ்பூன்
தூள் உப்பு —3/4 ஸ்பூன்
வெங்காயம் —1
முந்திரி பருப்பு —4
அவலைத் தண்ணீரில் நன்றாகக் களைந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கரண்டி நீர் விட்டு ஊற வைக்கவும். அரை மணி கழீத்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்
இவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு வெங்காயத்தைப்
போட்டு வதக்கி, பிறகு அவலையும் போட்டு உப்பு
சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து மேலும் கிளறி கீழே இறக்கிவைத்து
எலுமிச்சம்பழம் பிழீயவும்.
உருளைக்கிழங்கைச் சேர்க்கவேண்டுமென்றால் அதைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துப் பின்பு உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு கரண்டி ஜலம் விட்டு
அது நன்கு வதங்கிய பின்பு வெங்காயத்தை வதக்கியப் பின்பு அவல் சேர்க்கவேண்டும்.
- நாதரட்சகர்
- இழப்பு
- சிகுமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து:
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- இந்த வாரம் இப்படி – சூன் 3
- பிப் – ’14
- ஜீவ ராசி
- பாரத சமுதாயம்
- காதல் நதியினிலே
- சொல்லேர் உழவர்
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- அவல் உப்புமா
- அவல் கேசரி
- பால் கொழூக்கட்டை
- கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது
- கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!