புதுவை ஞானம்
வெகு சாதாரணமாக கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் ஒரு சொலவடை இது என்பது உங்களுக்குத் தெரியும். அது சுகப்பிரசவமா கருச்சிதைவா எதுவோ எப்படியோ What has been conceived has to be delivered! யாரும் இதிலிருந்து தப்பித்து ஓட முடியாது. பிரசவ வேதனை தாங்காமல் பெண்கள் மனதுக்குள் நினைப்பார்களாம் ‘இந்த சனியன் பிடித்த மனுஷனோடு இனி படுக்கவே கூடாது ‘ என்றிஇதற்குப் பெயர் பிரசவ வைராக்கியம். ஆனால் யாரும் அப்படி கணவனுடன் மீண்டும் படுக்காமல் சுகிக்காமல் இருந்ததாக சரித்திரம் கிடையாது. நானும் திண்ணைக்கு எழுதாமல் தப்பித்து செல்ல முடியாத படி வசமாக மாட்டிக் கொண்டிஇருக்கிறேன் (குறிப்பாக தோழர் K. ரவி ஸ்ரீனிவாஸ் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்). ஒரு தமிழ்ப்பற்றாளன் ஆர்வலன் என்ற நிலையில் சிலவற்றை நான் கிளப்ப ஒரு அறிவியல் ஆர்வலர் அறிஞர் என்ற முறையில் அவர் கேள்விகள் எழுப்ப அத்தகைய உராய்வுகளில் தான் (FRICTION) டைனமோ சுற்றி விளக்கு எரியும் வெளிச்சம் பிறக்கும். (ஒரு கை ஓசை பற்றிய ZEN புதிர் நினைவுக்கு வருகிறது.) ZEN AND THE ART OF MOTOR CYCLE MAINTANANCE படித்தவர்களுக்குத் தெரியும் எங்கே உராய்வு இருக்க வேண்டும் எங்கே இருக்கக் கூடாது என்பது வாகனம் பயன்படுத்தும் அனைவருக்கும் இஇது தெரியும். சைக்கிள், ஸ்கூட்டர், கார், கட்டைவண்டி, மனிதஉறவுகள் எல்லாவற்றுக்கும் இஇது பொருந்தும். ஆக அவருக்கும் மற்ற வாசர்களுக்கும் நான் முன்வைத்திருக்கும் கேள்வி அதாவது பிரதான கேள்வி ஜோசப் நீதாம் போன்று ஒருவர் வந்து இந்திய தமிழ்ப் பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பழைய ஆவணங்களை ஆய்வு செய்து உதவமாட்டார்களா என்ற ஆவலும் யாரும் முன்வரவில்லையே என்ற ஆதங்கமும் தான்.
அவர் கேட்கிற மாதிரி ஓலைச்சுவடிகளின் தொகுப்பை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் திரு. M. ராசேந்திரன் அவர்கள் வழங்க இயலும். மெக்கன்சி சுவடிகள் பற்றி ஆய்வு செய்துதான் அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அது பற்றிய ஒரு சிறிய நூலும் வெளியிட்டுள்ளார். அதில் கண்டுள்ளபடி கணிதம் பற்றி மட்டும் 122 ஓலைச்சுவடிக் கட்டுகள் உள்ளன. அவற்றை அவர் துறையின் சார்பாகவே புத்தகமாக வெளியிட்டால், கணிதம் பற்றிய ஆய்வு செய்ய ஆராய்ச்சி மாணவர்களும் கணித அறிவு பெற்றுள்ள தமிழ் அறிஞர்களும் அவருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி உடையவராயிஇருப்பார்கள். முதல் படியாக இவை வெளிவருவதும் ஏற்கனவே வெளிவந்துள்ள ஆஸ்தான கோலாகலம், கணித விளக்கம், கணக்கதிகாரம் போன்ற நூல்கள் ஆய்வு செய்யப்படுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதும் நடந்தேற வேண்டும். அப்படி நடக்குமானால் அவர் குறிப்பிட்டுள்ள THE CREST OF THE PEACOCK: THE NON EUROPEAN ROOTS OF MATHEMATICS போன்ற ஒரு நூல் நமக்கும் கிடைக்கும்.
இதில் ஒரு சுவையான விஷயம் என்னவெனில் நான் அந்த நூலையும் அதனை எழுதிய திரு. GEORGE GHEVERGHESE JOSEPH அவர்கள் திருமதி. DENNIS
F. ALMEIDA அவர்களுடன் இணைந்து ‘RACE AND CLASS ‘ 45(4) பதிப்பில் EURO CENTRISM IN THE HISTORY OF MATHEMATICS; THE CASE OF KERALA SCHOOL என்ற கட்டுரையையும் படித்துப் பார்த்ததில் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஆதாரங்களை அவர் பயன்படுத்தி இருப்பது போலத் தெரிய வருகிறது.
COLE BROOKE மற்றும் D ‘LAMBRE என்ற ஆங்கில மற்றும் பிரெஞ்சு (INDOLOGIST) ஆய்வாளர்களின் கணிதம் பற்றிய புரிதல்களை ஒப்பிட்டு திரு. DURUV RAINA எழுதிய ஒரு கட்டுரை PHILOAOPHY AND SOCIAL ACTION பத்திரிக்கையில் வந்ததை செவாலியே ஸ்ரீராம் முலம் திரு. கிரியா ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன். திரு. ஸ்ரீராம் அவர்களிடம் FRENCH INDOLOGISTகளில் யாராவது சிறந்த ஒருவரது படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். திரு. ஸ்ரீராம் அவர்கள் ஒரு கணிதப் பட்டதாரி என்ற முறையிலும் தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பதாலும் அவரும் இந்த பிரசவ வேதனையில் பங்கு கொள்ள வரவேற்கப்படுகிறார். மொழி என்பது எண்ணும் எழுத்தும் என்பதால் திரு. கிரியா ராமகிருஷ்ணனின் மொழி அறக்கட்டளையும் அவரது நண்பர் திரு. அண்ணாமலை CENTRAL INSTITUTE OF LANGUAGE, MYSORE அவர்களும் பிரசவ வார்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறேன். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். தனிமரம் தோப்பாகாது.
திரு. COLE BROOKE என்ற ஆங்கிலேயர் மொழி பெயர்த்த LILAVATHI என்ற கணித நூல் (வடமொழியில் பாஸ்கராச்சாரியா எழுதியது) கிடைத்துள்ளது. அவர் சாங்கிய தத்துவத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாக திரு. சக்கரவர்த்தி நயினார் நீலகேசி என்ற சமணநூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும்
கற்கை நன்றே ‘ என ஒளவையார் எழுதினார்.
நான் உங்களிடம் கையேந்துகிறேன். யாராவது இந்த திரு. COLE BROOKE எழுதிய அனைத்து நூல்களையும் வாங்கி கார்ல் மார்க்ஸ் நூலகம் போன்ற நூலகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தால் எதிர்காலத் தமிழ் மற்றும் அறிவியல் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் அல்லவா ? ‘ALBERUNI ‘S INDIA ‘ என ஒரு நூல் வந்திருக்கிறது. மெகஸ்தனிஸ் பாகியான் மார்க்கோபோலோ என எத்தனையோ யாத்ரீகர்கள் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. தமிழ் ஓலையைப் படிக்கவிஇயலாதவர்கள் அத்தகைய இந்தியவியல் நிபுணர்களைப் படித்து நம் தொன்மை அறிவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட ஆங்கில நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்ட சில நூல்கள் நினைவுக்கு வருகின்றன. CLAUDE ALVARES எழுதிய HOMO FABER, DHARAMPAL எழுதிய BEAUTIFUL TREE மற்றும் EIGHTEENTH CENTURY INDIAN SCIENCE, Deepak Kumar எழுதிய SCIENCE AND THE RAJ. இவற்றை எல்லாம் ஆர்வம் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆனாலும் மேலே குறிப்பிட்ட நூலாசிரியர்கள் தங்கள் சொந்த தாய் மொழியிலிருந்து எதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாக எனக்குத் தோன்றவில்லை.
D.D. Kosambi ஒரு கணித மேதையாம். அவர் கணிதம் பற்றி எழுதிய ஆங்கில நூல்களைப் படிக்கக் கொள்ளை ஆசையாகயிஇருக்கிறது. எங்கு கிடைக்கும் ?
இது ஒரு புறமிருக்க வெளிநாட்டிலிருந்து வந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்தியாவுக்கு வந்த அல்புருனி சொல்கிறார் ‘நான் மிலேச்சன் என்பதால் எனக்கு சொல்லித்தர மறுக்கிறார்கள் ‘ என்று. நமது மொழிகளை கற்று பல வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் லத்தீன் பாரசீகம் சீனம் ரஷியன் எனப் பல மொழிகளில் இந்திய கணிதம் தத்துவம் அறிவியல் போன்ற அறிவுத்திறனை மொழிபெயர்த்து சென்றிருக்கும் போது நாமும் நமது மொழியில் உள்ளவற்றை தாய்மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தவறேதும் இல்லையே! மாறாக புரிந்து கொள்ளாமல் முயற்சி செய்யாமலிருப்பது தான் அவமானம் என எனக்குத் தோன்றுகிறது. மொத்தத்தில் மானை விழுங்கிய மலைப்பாம்பு மாதிரி அல்லது கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்ட மாதிரி நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் மெல்லவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை (கார்ல்மார்க்ஸ் தனது முனைவர் பட்ட ஆய்வுரையில் சொல்கிறார்: டெமாக்ரடாஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து அணு பற்றித் தெரிந்து கொண்டு சென்றதாக அதுவும் கூட கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்).
SITUATING THE HISTORY OF SCIENCE என்ற நூலை OXFORD வெளியிட்டுள்ளது. அஇது ஜோசப் நீதாம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கியது. அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமானநூல். அதன் முன்னுரையிலிஇருந்து சில வாசகங்கள்.
‘ஒரு கலாச்சாரத்துள்ளிருக்கும் அறிவு வளங்களை ஆய்வு செய்தால் அந்த அறிவு அந்தச் சமுதாயத்துக்குள்ளிருந்தே பிறந்திருக்க முடியும் அல்லது உடனுறையும் கலாச்சாரங்களிலிருந்து பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதன்மீது செயல்பட்டிருக்கும் என்பதனை உறுதி செய்ய முடியும். (பக்-3) ‘
‘நீதாம் அறிவியல் மற்றும் சமயம் பற்றிய மனித அனுபவங்களின் பல்வேறு தளங்களை தனது அறிவியல் பணிகளுடனும் ஆசிய மற்றும் மேலைத்தேயங்களின் முற்போக்கு அரசியலுடனும் ஒருங்கிணைக்க முற்பட்டார் ‘ (பக் 4)
‘தமது அரசியல் முரண்பட்டதாக இருந்தபோதிலும் நீதாமும் பாப்பரும் பகுத்தறிவு வாதத்தையும் பாரம்பரியத்தையும் அடையாளம் காண்பதிலும் இணைப்பதிலும் ஒத்த கருத்து கொண்டிருந்தனர் என்பது ருசிகரமானதாக இருக்கிறது ‘ (பக் 5)
‘நீதாமின் ஆய்வு மற்றொரு புறத்தில் பழமைக்கு முக்கியத்துவம் இல்லை என்ற (பொருத்தப்பாடு அற்றது) கருதுகோளுக்கு எதிராக இருந்தது ‘ (பக். 7)
இந்த நூலில் The strange Quest of Joseph Needham என்ற Shiv Viswanathan எழுதியுள்ள கட்டுரை அழகென்றால் அப்படி ஒரு அழகு. மிக நுட்பமான ரசனை அவருடையது. மாதிரிக்கு சில வாசகங்கள் தருகிறேன் பாருங்கள்.
‘நான் ஒரு சீன நிபுணரும் (சீன ஆர்வலரும் அல்ல) கருவியல் ஆய்வு நிபுணரும் அல்ல அல்லது ஒரு மார்க்சிய வாதியும் அல்ல. ஆனால் அந்த முப்பெரும் பாவங்களைச் செய்வதன் மூலமாகவே நீதாமின் கேள்விகளைத் திறந்த புத்தகமாக அணுக முடியும் என நான் நம்புகிறேன் ‘ (பக்-201)
‘முழுமை என்பது அதன் பகுதிகளின் கூட்டுத்தொகையை விட அதிகமானது. அது மறைந்திருந்து வெளிப்படுவது பரிணாம வளர்ச்சி உடையது புரியாத புதிர் ‘ (பக் 199)
‘சுதேசி மார்க்சீயத்தை உருவாக்கும் தனது முயற்சியில் தன்னை ஒரு முன் மாதிரிப் பாத்திரமாகயிருத்திக்கொண்டு தோண்டுபவராகவும் சமன் செய்பவராகவும் இருதளத்திலும் செயல்பட்டார் ‘ (பக். 208)
‘வின்ஸ்லேயைப்போலவே நீதாமும் ‘இயற்கையின் ரகசியங்களை தெரிந்து கொள்வதானது கடவுளின் பணியைப்பற்றி தெரிந்து கொள்வதாகும். ஏனெனில் கடவுள் கண்ணுக்குத் தெரியும் ஒவ்வொரு பணியிலும் ஒவ்வொரு உடலிலும் இருக்கிறார் ‘ என்பதாக உணர்ந்தார் ‘ (பக் 209)
‘வரலாற்றின் இடைக்காலத்திய (கி.மு. 1100 லிருந்து கி.பி. 1100 வரை) கடவுட்பண்புகள் பற்றிய அறிவியல் ஆய்வுக்கும் நவீன அறிவியல் ஆய்வுக்கும் இடையே இருக்கிற மிகப்பெரிய வேறுபாடு என்னவெனில் முன்னது ஒழுக்கவியல் அமைப்பு ஒன்றனுள் ஒன்றுபடுத்தப் பட்டிருந்தது. பின்னது அத்தகையதொரு அமைப்பினை இன்னும் உருவாக்கவில்லை எனவும்; கம்யூனிசம் நம் காலத்திய ஒழுக்கவியல் அமைப்பினை வழங்க முடியும் எனவும் நம்பினார் நீதாம் ‘ (பக்-210) (ஒழுக்கவியல்=நன்னெறிக்கோட்பாடு)
‘சீனக் கலாச்சாரம் அறிவியல் ஒன்றுதான் மனிதப் புரிதலின் ஒரே வாகனம் என்று ஒருபோதும் நம்பியிருக்கவில்லை. அறிவியல் உண்மைகள் மட்டும் தான் உலகத்தைப்பற்றிய புரிதலைத்தரும் எனச் சொல்வது ஐரோப்பிய அமெரிக்க வியாதி தானே ஒழிய வேறொன்றுமில்லை என அவர் கருதுகிறார் ‘ (பக் 213)
‘அறிவியல் பணியாளர் என்பவர் நீதாமைப் பொறுத்தவரை இன்றைய ஆன்ம ஞானி ஆவார் ‘
(பக் – 215)
‘மார்க்சியம் இன்பது உள்ளுக்குள் உள்ள ரணத்தைக் கண்டறிதலாகும், கன்பூசியனிசமோ வெளிப் புண்ணுக்கு களிம்பு தடவுவது ஆகும். ‘ (பக்-215)
கடைசியாக MISSING PICTURE: The non emergence of Needdhamian History of sciences in India என்ற திருவாளர்கள் DURUVRAINA மற்றும் IRFANHABIB எழுதியுள்ள கட்டுரைக்கு வருவோம். அது நாம் பேசத்தொடங்கியதற்கு மிக மிக நெருக்கமான தலைப்பு ஆகும்.
வாிகளைப் படிப்பது ஒரு விதம். வாிகளுக்கு நடுவில் படிப்பது ஒரு விதம். (There is a lot of difference in reading the lines and reading in between lines) அப்படி படித்ததால் பல எதிாிகளைச் சம்பாதித்துக் கொண்டவன் நான். அத்தோடு கூட தமிழில் பொருள்கோளிலக்கணம் என ஒன்று உண்டு என்பது பலருக்கும் தொியும். அந்த இலக்கணம் தொியாவிட்டால் பாடல்களைப் படித்துப் புாிந்து கொள்வதியலாது. அப்படிப்பட்ட பொருள்கோள் முறையில் ஒன்றுதான் ‘அளைமறி பாப்புப் பொருள்கோள் ‘- அதன் பொருள் புற்றுக்குள் நுழையும் பாம்புபோல் பொருள்கொள்ள வேண்டும் என்பதாகும். புற்றுக்குள் பாம்பு நுழையும் போது தலையை வளைக்குள் நுழைத்த உடனே தலையை வெளியே பார்க்கும் விதத்தில் வளைத்து இருத்திக் கொண்டு உடலை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுக்கும். அதுபோல் பாடலின் கடைசி வரியை முதலில் படித்துப் புரிந்து கொண்டு முன்றாவது வரி இரண்டாவது வரி முதல்வாி எனப்பொருள் புாிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்டுரையின் கடைசி மேற்கோளின் கடைசிவாி என்ன சொல்கிறது தொியுமா ?
‘It is thus for the west to produce a Needhamian History of Siences of India, for the west ‘ அதன் மற்ற வாிகளைப் இபார்ப்போம்.
“பேய்லி எழுதுகிறார்: இஇஇஇந்திய கற்றலில் (அறிவில்) மதிப்புமிக்க பல பருமனான (தடித்த) புத்தகங்களும் கட்டுரைகளும் இஇஇருந்த போதிலும் ஏராளமான கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பதற்கும் குறைகளைப் போக்கி முழுமையாக்கி இஇஇந்திய அறிஞர்கள் முன் வைப்பதற்கான முக்கியமான பணிக்கும் ஒரு ஜோசப் நீதாம் இஇஇன்னும் தோன்றவில்லை. இஇஇந்தப்பாதையில் செல்லும் போதெல்லாம் இஇஇந்த நீதாமிய வரலாற்றை உருவாக்கி வெளியிடுவதற்கான பொறுப்பு மேற்கைத்தான் சாரும் என நாம் எண்ணுகிறோம். நமக்கு சீனாவைப்போலவே இஇந்தியாவிலும்இ இஇஇந்த கட்டுரை சொல்வதைப் போலவேஇ இஇந்திய அறிவியல் வரலாறு பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு நீதாமுக்கு இஇஇணையான ஒருவர் இஇஇந்தியாவுக்கு வருமுன்னே இஇஇஇருந்ததாக தொிய வருகிறது” (பக்298)
இஇஇந்த மேற்கோளுடன் தங்கள் கட்டுரையை முடிக்கிறார்கள் திருவாளர்கள் துருவ் ரெய்னாவும் இஇர்பான் அபீபும் (இஇஇவர்கள் யானையென்றால் நான் அற்பக்கொசு இவர்கள் எழுதியிருப்பது பற்றி கருத்து சொல்ல எந்த தகுதியும் இஇஇஇல்லாதவன். மிகப்பெரியதொரு விந்தை நான் என்னை அற்ப கொசு என்று எழுதிமுடித்துவிட்டு தான் இந்த Bayly யார் என்று படித்துப் பார்க்கிறேன். ‘Who discovered the cause of malaria ‘ Times literary Supplement 11 Oct 33 என்று போட்டிருக்கிறது. எனவே நான் ஒழிக்கப்படவேண்டிய மலேரியா கொசுதான். இஆனால் மொத்த விஞ்ஞான உலகமும் இஇஇன்னும் கொசுவோடு போராடவும் அது இஇஇன்னும் கடிக்கவும் காய்ச்சல் தொடர்ந்து கொண்டேதான் இஇஇருக்கிறது. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் கீழ்த்திசை பற்றி எழுதியவை எல்லாம் ORIENTALISM By Edward said, BLACK AETHENA BY MARTIN BERNAL ஆகிய நுால்களில் எவ்வாறு விமர்சிக்கப்படுகின்றனவோ அப்படி ஒரு விபத்து திரும்பவும் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் BAILYன் மேற்கோளைப் படிக்கும்போது ஏற்படுகிறது. திரு. தீபக்குமார் எழுதிய SCIENCE AND THE RAJ என்ற நூலைப் படித்துப் பாருங்கள். மேற்கத்திய அறிவியலைக் கற்றுக்கொடுக்கஇ வெள்ளையர்கள் எவ்வளவுஇ பிகு செய்தார்கள் என்பது தொியவரும். சாி கிடக்கட்டும் அப்படி ஒரு அறிவியல் வரலாற்றை இஇஇந்தியர்கள் எழுத என்ன இஇஇடைஞ்சல்கள்இஇ இஇருப்பதாக இஇஇவர்கள் கருதுகிறார்களாம். அவர்கள் எழுதுகிறார்கள்:
‘உண்மையில் சட்டோபாத்தியாவின் தொகுப்புகளில் பெரும்பகுதி; திட்டமிட்டும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மதவாதிகளாலும் பகுத்தறிவு அரசியல் ஆதாயம் தேடியவர்களாலும் அழிக்கப்பட்ட பண்டைய இந்தியாவின் பாரம்பாியமான அறிவியல் பற்றிய பட்டியலாக இஇருந்தது ‘ பக்-291
‘மேம்போக்காகச் சொல்வதானால் இஇஇந்தியாவில் நீதாமிய அறிவியல் வரலாறு எழுதப்படவில்லை எழுதப்படும் வாய்ப்பு இஇஇல்லை ‘ ‘ பக் 292
‘சோகன் என்பவர் இது ஏன் இப்படி ஆயிற்று என்பதற்கு நான்கு சாத்தியமான காரணங்களை முன்வைக்கிறார் முதலாவதாக மண்ணுக்குரிய அறிவியலைத் தவறாகப் புரிந்து கொள்ளாத கல்வியாளர் ஒருவர் இல்லாமல் போனது. இரண்டாவதும் முன்றாவதுமாக மறுஉருவாக்கம் செய்ய வரலாற்று ஆவணங்கள் போதாது. மறுஉருவாக்கம் செய்வதற்கான வரலாற்று ஆவணங்கள் இல்லை என்பதோடு இந்திய வரலாறு பற்றிய நம்பத்தகுந்த காலவாிசைப்பட்டியல் இல்லை என்ற வழக்கமான வாதத்தின் எதிரொலி: நான்காவதாக இந்திய கலாச்சாரம் இயல்கடந்தது (அப்பாலை). அறிவியல் சார்பானது அல்ல என்று பார்க்கப்பட்டது. (பக்292).
‘புதிய இந்திய அறிவியல் வரலாறு பிளாங்கின் கருதுகோளான பழைய தலைமுறையை மாற்ற முடியாது அது செத்துப்போகும் என்ற நாடகத்தைப் பார்த்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்து இருக்க வேண்டுமா ? பக் 298
இப்படியெல்லாம் (Pessimistic) நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் என்ன நிகழும் தொியுமா ?
“Nathan Sivin சொல்கிறார்: ‘ஒரு நிபுணராகும் வேட்கையில் அறிவியலின் வரலாறு பற்றிய கருத்தாக்கத்தில் குறுகிய நோக்கை மேற்கொண்ட தலைமுறை அதன் நோக்கை எட்டிவிட்டது. நிபுணர் அந்தஸ்தை எளியதொன்றாக தாமே எடுத்துக்கொண்ட அடுத்த தலைமுறை தேவையானால் கற்றுக்குட்டியாக (Amature) இருக்கும் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அத்தலைமுறை-பொதுவாக அதீத ஆர்வத்தினாலும் பிரச்சினைகள் மீதுள்ள அக்கறையாலும் அறிவியல் வரலாற்றின் மேல் செயல்படத் தயாராக உள்ளது.” (பக் 88)
‘சில பொறுப்புள்ள மனிதாின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா ‘ என்ற பட்டுக்கோட்டையின் வாிகள் நினைவுக்கு வருகிறது.
‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானுமதுவாகப் பாவித்து – தானும்
தன் பொல்லாச் சிறகை விரித்தாடுதல் போல் ‘
என்னைப்போன்ற சாமான்யர்கள் பேராசியர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கிறது. சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பொியோராயின் பொறுப்பது கடனே.
(முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமை – தமிழர்களின் அணு அறிவு – எண்கள் அளவைகள் பகுதி-I, பகுதி-II அனைத்தும் ஒரே கட்டுரையின் துணைத் தலைப்புகளே. இவற்றைத் தனித்தனியே பிரித்துப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
புதுவை ஞானம். (தொடரும்)
- பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை
- எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு
- நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்
- வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு
- ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
- ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி
- இசை அரசி எம்.எஸ்.
- ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை
- ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்
- தமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
- எம் எஸ் :அஞ்சலி
- வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்
- உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்
- அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்
- மெய்மையின் மயக்கம்-30
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை
- விடுபட்டவைகள் -1
- ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- கடிதம் டிசம்பர் 16,2004
- ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்
- டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்
- நடேசனின் இரு நூல்களின் வெளியீடு
- கடிதம் 16,2004
- மாந்தரென்றால்….
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50
- அக்கரையில் ஒரு கிராமம்
- பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி
- ஒரு சிறுவனின் கனவு
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!
- இறைத்தூதர்
- என்ன சொல்ல…. ?
- பிரியாதே தோழி
- நாற்காலி
- பூமியின் கவிதை
- அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1
- குருஷேத்ரம்
- கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- பெரியபுராணம் – 22
- பேன்
- பரமேசுவரி
- தெரு நாய்
- மண்ணெண்ணெய்
- தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு
- சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
- மலேசிய மகுடம்