அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

முத்து கிருஷ்ணன்


மனிதஉரிமைக்கும், பெண்ணுரிமைக்கும் குரல் கொடுக்கும் (கொடுப்பதாய் சொல்லிக்கொள்ளும்) அருந்ததிராய், கனிமொழி, ப்ருந்தாகரத், சுரையா போன்றோர் சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் இம்ரானா என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி வாய் திறவாதது ஏன்?

தன் சொந்த மருமகளையே கற்பழித்த கொடூர மாமனாரின் விலங்கு செயலை கண்டிக்காமல், அன்பு மார்க்கமான, அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் குருமார்கள் 5 குழந்தைகளுக்கு தாயான இளம் வயது இம்ரானாவை தன் கணவனுடன் சேரவிடாமல், கணவனை மகனாக பாவிக்கவேண்டும் என்கிறார்கள். கணவனை மகனாக பாவிக்க வேண்டுமென்றால், பெற்ற 5 குழந்தைகளை பேரன், பேத்திகளாக கருதவேண்டுமோ!

மனிதர்களை நாகரீகப்படுத்துவதற்காக தோன்றிய மதம் இஸ்லாம் என்று சில அன்பர்கள் கூறுகிறார்கள். நாகரீகப்படுத்துவதற்காக தோன்றிய இஸ்லாம் வந்த பின் இப்படி நடக்கிறார்கள் என்றால், தோன்றுவதற்கு முன் அந்நாட்டில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நினைக்கவே கூசுகிறது. நீதிமன்றம் அந்த மாமனாருக்கு 10 ஆண்டு தண்டனை கொடுத்த பின்னும், உள்ளூர் ஜமாத், இம்ரானாவை விவாகரத்து செய்ய கோருகிறது. இதே போல் ஒரு சம்பவம் பீகாரிலும் நடந்தேறியிருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் மனித உரிமையும், பெண்ணியமும் பேசும் அருந்ததிராய், கனிமொழி, ப்ருந்தாகரத், சுரையா போன்றவர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை? இவர்களை சொல்லி என்ன பயன்?

மனித உரிமையாம்!, பெண்ணுரிமையாம்!, அன்பு மார்க்கமாம்! வெங்காயம்!

ஆம்! இறைவன் மிகப்பெரியவன்! எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதானிருக்கிறான்.


muthush@yahoo.com

Series Navigation

முத்து கிருஷ்ணன்

முத்து கிருஷ்ணன்