ஸ்ரீனி
நான் ரொம்ப நாள் பள்ளி செல்லாதவன்!பாட்டி செல்லம்!
பயந்த புள்ளே இமேஜ் வேறு!எப்பவும் அக்கம் பக்கத்து வீட்டு அக்கா மாருடன் படம் பற்றிய அரட்டை!டியூஷன் வைத்து வீட்டில் சொல்லிக் கொடுத்தர்கள்.அந்த டியூஷன் ட£ச்சர்கள்கள் பாவம்!ஒரு மாதம் தான்!பாட்டி கிட்டே போட்டுக் கொடுத்து மாற்றி விடுவேன்!என்னைப்பற்றி புகார் செய்தால் அவர்கள் அவுட்!பாட்டி விட மாட்டாள்!
அது சின்னப் புள்ளை அதுக்கு என்ன தெரியும்..நீ சொல்லுறதைத்தானே சொல்லும்!
இல்லீங்கம்மா..தம்பிதான் கேட்டுச்சு…!
ட£ச்சர் முடிக்கும் முன் சீட்டு பணால்!
தம்பி கேட்டுச்சாம் இவேங்க சொல்வாங்களாம்..
நல்ல வாத்தி….பாட்டிதான்!
அப்படி என்ன தான் தம்பி கேட்டது?
காதல்னா என்ன ட£ச்சர்??!!!
இப்படியே இருந்தால் உருப்பட மாட்டேன் என்று அம்மா தீர்க்க தரிசனம் செய்து ஒரு சுப யோக தினத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்!
தம்பி உம் பேர் சொல்லுடா .
சீனி……குழந்தை முக்கி மோதி எங்க வீட்டுப் பிள்ளை நாகேஷ் போல சொல்கிறது!
வாய்ப்பாடு தெரியுமா…
பத்து வரை தெரியும்…கண்ணாடி போடாத அம்மா!
நிஜ அம்மா எல்லாம் ஏன் நம்ப பண்டரிபாய் போல இல்லை!
அப்படியா,அப்ப சொல்லு தம்பி…ஒம்போது ஓம்போது எவ்வளவு?
தம்பி முழிக்கிறது…அம்மாவைப் பார்க்க,
அம்மாவோ சொல்லுடா உனக்குத்தான் தெரியுமே நேற்றைக்குக் கூட சொன்னே!
பண்டரியின் பழி வாங்கு படலம்!
சரி ஏதாவது சொல்லுவோம்…81!நிஜமான குருட்டடி!எப்படிச் சொன்னேன் என்று இன்று வரை புரியவில்லை.போதாத காலம்தான்!!
சபாஷ்டா தம்பி!என்னங்க புள்ளை இம்புட்டு சொல்லுது..ஒண்ணாப்புலே போடணும்னு சொல்றீங்களே…நாலாப்புலே போட்டுடலாம்!
வயசு ஆறு முடியலையே.. அம்மா!
சரி…மூணாப்புலே போகட்டும்..யே புள்ளே இங்க வா
தம்பிய மூணுA க்கு கூட்டிகிட்டுப் போ!
இது தான் நம்ப படிப்புலக வாழ்வின் துவக்கம்!
தினமும் சோகப்பாட்டுதான்!அழுது கொண்டேதான் போவேன்.பின்னே சுக ஜீவனம் முடிந்த வருத்தம் இருக்காதா!.என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று
டி.ஆர்.மஹாலிங்கம் கேட்கவே இல்லை!அழுகை என்றால் அநியாய அழுகை! அம்மா கை பிடித்து ரோடேல்லாம் அழுவேன்.அப்போதெல்லாம் ஸ்கூல் பஸ்,ரிக்ஷா எல்லாம் தெரியாது! யாரவது பார்த்து காப்பாற்ற மாட்டார்களா என ஒரு நப்பாசை!யாரும் வரவில்லை!
கொஞ்ச நாளில் அழுகை மாறி விட்டது.சுஹாசினி அவர்கள் பள்ளி நாட்கள் பற்றிக் கூறும் போது சூடாமணி மிஸ் பற்றி சொல்லி இருப்பார்.அதே பள்ளி,அதே சுடாமணி மிஸ் தான் எனக்கும்!ஆங்கில மீடியம் குஞ்சுகள் தனியாக பவனி வரும்!பெரிய மனுஷாள்!நமக்கு தோது படாது.
தினத்தந்திதான் எனது தமிழ் ஆசான்.சிந்துபாது கதை எழுத்துக் கூட்டிப் படித்தே தமிழ் கற்றவன்.பின்னால் கல்கண்டு வாணன்,கண்ணன்,முத்து காமிக்ஸ்,கல்கி,ராணி,குமுதம் எல்லாம் நம் தமிழ் வளர்க்க கர சேவை செய்தன!
குமுதம் பெரியவர்கள் படிக்கும் இதழ் என எங்களுக்கு
தடை செய்யப்பட,டாய்லெட்டில் போய் குமுதம் படிப்பேன்!தொடர் கதை படிக்கும் பழக்கம் குமுதம் ஏற்படுத்தியதுதான். இந்த டாய்லெட்-குமுதம் உறவும் கொஞ்ச நாளில் பிடிபட்டு,விசாரிக்கப்பட்டு..கண்டிக்கப்பட்டு..பிறகு?!
இங்கனயெ படிச்சுத் தொலை!
விடுமுறையில் அம்மாவின் ஊருக்கு சென்றால் அங்கே மாமாவின் புத்தக அலமாரி ஒன்று உண்டு.தன் காலத்து தொடர் எல்லாம் பைண்ட் பண்ணி வைத்திருப்பார்.
பொ.செல்வன் இங்கேதான் எனக்கு அறிமுகம்.அமரர்.தேவன்,கல்கி,தி.ஜ.ர.,ஜெயகாந்தன்,பெர்ரி மேஸன், போன்றவர்களுடனும் எனக்கு அறிமுகம் இந்த
அலமாரியினால் தான்!
நானும் பிடித்த தொடர் எல்லாம் பைண்டு பண்ணி ஏகமாக வைத்து இருந்தேன்.ஹாஸ்டல் போனவுடன் வீட்டில் இடம் அடைக்கிறது என்று வீசைக்கு போட்டு விட்டனர்!!அந்த ஒளிவதற்கு இடமில்லை கிடைக்கவே இல்லை!நானும் மூர் மார்கெட்,லஸ் ஆழ்வார் எல்லாம் தேடியாச்சு!இதுபோல் பல
தொடர்கள்.என்னதான் புஸ்தகமாக படித்தாலும்,அந்த பைண்ட் சுகம் அலாதி!அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் இது!நம்ம பைண்ட் புத்தகம் எல்லாம் எந்த பூந்திக் கடையில் பக்கோடாவும்,காராச்சேவும் கட்டிப் போனதோ!
சோகமடா!
அது சரி…அக்கா மாருடன் உடன் பிறவா தம்பி என்ன அரட்டை…?
அக்கா,படத்துல அவெங்கே ஏங்க்கா பாட்டு படிக்கிராங்கே?
அதுவா அவேங்களுக்கு காதல் வந்திருச்சுல்லே அதான்!
காதல் வந்தா பாட்டு படிக்கணுமா?காதல்ன்னா என்ன அக்கா?
போடா தம்பி உன் அம்மா திட்டும்!
இப்பொ தெரிந்ததா குழந்தை ஏன் டியூஷன் ட£ச்சரிடம் கேட்டது என்று!
அப்போ பின்னாடி போடறேங்களே ம்மியுஜிக்கு…?
அதுவா..அவேங்கே ஒளிஞ்சு ஒளிஞ்சு வாசிக்கிராங்கே!
ஸ்ரீனி
kmnsri@rediffmail.com
- தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்
- அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்
- சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை
- சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4
- கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
- பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்
- நட்சத்திரத் திருவிழா – 2007
- கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு
- யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்
- மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம் “மாதவி” அரங்கேற்றம்
- வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
- கடிதம்
- படிக்காசு
- அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…
- கவிதை மொழி – ஒரு கருத்தாடல்
- கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14
- இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”
- சிவாஜியை வரவேற்போம்
- அன்புடன்…..
- ‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’
- காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !
- வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
- ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
- இணக்கம்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- மாத்தா-ஹரி அத்தியாயம் 18