எச்.பீர்முஹம்மது
என் உலர்ந்த உடல் எலும்புக்கூடாக
ஆகி விட்டது
என் கையின் குழிந்த பகுதிகளை
அண்டங்காக்கைகள் அலகால்
கொத்துகின்றன.
இந்த வினாடி வரை கடவுள் எனக்கு
உதவ வரவில்லை
அவரது பணியாளனுக்கு நேர்ந்த
அவலத்தைப் பார்த்தாயா,
அண்டங்காக்கைகளே,
நீங்கள் என் எலும்புக்கூட்டை தேடுகிறீர்கள்.
என் சதைகள் அனைத்தையும் உண்டுவிட்டார்கள்.
ஆனால் என் விழிகள் இரண்டையும் விட்டுவிடுங்கள்.
என் நேயத்திற்குாிய இறைவனை அவற்றினால் பார்க்க நினைக்கிறேன்
எல்லாவற்றையும் இழந்துவிட்ட உடலுக்கு கண்கள் மட்டுமே எஞ்சுவதில்லை.
உயிரற்ற சடப்பொருளாகி விட்ட உடலுக்கு கண்களை தக்க வைப்பது என்ற உள்ளுணர்வு ஓரத்தில் வைக்கப்படுகிறது.
பாபாபாீது என்று எல்லோராலும் அழைக்கப்படும் செய்குபாீது உத்தீன் கஞ்சிஷாகர் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பஞ்சாபில் பிறந்தார். இவருடைய தந்தையார் காசி சாஹிப். இவருடைய பரம்பரை ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தது. சாஹிப் துறவியாய் வாழ்ந்தவர். அரண்மனை வாழ்வின் பகட்டோ. லாகூர் நகரத்து மகிழ்ச்சி மிக்க போக வாழ்வோ அவர்மீது கவனம் கொள்ளவில்லை. இறையியலை ஆழ்ந்து கற்பது தான் அவருடைய ஆர்வம்.
காசி சாஹிப்புக்கு மூன்று மகன்கள். இசூத்-தீன், பாீத்மசீது, நஜிப்-உத்-தீன். இதில் பாீத்மசீது ஜிஸ்திய்யா தாீக்காவின் தலைவர் என்ற முறையிலும் சூபி என்ற முறையிலும் ஷெய்கு-பாீத்-உத்தீன் கஞ்சி ஷாகர் என அழைக்கப்பட்டார். கஞ்சி ஷாகர் என்றால் சர்க்கரை கருவூலம் என்று பொருள்.
பாீது இளமை காலத்தில் பல்வேறு நபர்களிடம் ஆன்மீக கல்வியை கற்றார். அவாின் ஆன்மீக அனுபவம் அவரை ஒரு அனுபூதவாதியாக மாற தூண்டலாக இருந்தது. அன்றைய காலத்தில் பாரசீகமே இஸ்லாமிய இலக்கியத்திலும், தத்துவத்திலும் சிறந்ததாக இருந்தது. ஒரு வகையில் சூபிசத்தின் தோற்ற வழியும் அதுவே. பாபா பாீது பாரசீக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். குறிப்பாக ரூமி, ரபிஇப்னு, கைஸம் போன்றோர்களின் நூல்களை விரும்பி படித்தார். பாரசீக இஸ்லாமிய கருத்தியலின் தாக்கம் அவாிடத்தில் மிகுந்த அதிர்வுகளை உண்டுபண்ணியது. துறவுகள் அல்லது சமய நோன்பினாின் வீடு என்பது ஏறத்தாழ ஒரு விடுதி போன்றது. அங்கு இருப்பவர்கள் கடுமையான வரன்முறைகளை கடைபிடித்து இருப்பார்கள். துறவறத்தில் அனுபூதவியலாளருக்கும் பார்வையாளருக்கும் தனித்தனியான அறைகள் இருக்கும். இரண்டாவதாக ஜமாத் கானாஸ் என்னுமிடத்தில் சீடர்கள் அனைவரும் சேர்ந்து இருப்பார்கள். மூன்றாவதாக சாவியாஸ் என்னும் சிறிய வீடுகளில் அனுபூதவியலாளர்கள் தனித்து இருப்பார்கள். துறவகத்தில் இருப்பவர்கள் மூன்று வகையினர் (1) உள்ளொளி விளக்கம் பெற்றவர்கள் (2) உடனுறைவோர் (3) பணியாளர்கள் துறவகங்களில் வாழ கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. மேலும் சமூக வாழ்வில் மூன்று வேறு வகையான கூறுகள் இருந்தன. ஆன்மீக உந்துதலுக்கான பாட்டிசைத்தல் ஒன்று மறைந்த ஆன்மீக ஞூானியின் நினைவு நாட்களை கொண்டாடுவது. மற்றொன்று உணவைப் பங்கிட்டு கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் நடத்தப்படும் கூட்டுணவு ஏற்பாடு.
துறவற வாழ்க்கை என்பது ஷெய்கு எனப்படும் அமைப்பாளரை மையமாகக் கொண்டே இயங்கி வந்தது. அவரே அவ்விடத்தின் சமூக ஆன்மீக வாழ்வியற்குாிய நெறிகளை வகுப்பவர். பாபா பாீது குவாஜா குத்புதீன் பக்தியார் காகி என்ற ஷேய்கிடத்தில் தீட்சை பெற்றார். அந்த துறவகங்களில் அன்றைய நாட்களில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வருகை தந்தனர். வாழ்வின் சிக்கல்களுக்கு தீர்வை யோசித்தனர். பிற மதங்களை சேர்ந்த யோகிகளும், ஞூானிகளும் இங்கு வந்து இறையியல் சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.
சூபிகள் தாிசு நிலங்களை பயிாிடுவதன் மூலமாகவோ அல்லது கேட்காமல் கிடைக்கும் நன்கொடை மூலமாகவோ தம் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
பாீது துறவகத்தில் சேர்ந்தபின் பக்தியார் காகியின் வழிகாட்டலில் ஒரு அனுபூதிமானுக்குாிய கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். அவரை இளமைக்காலம் குருவின் கடுமையான விதிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பக்குவமானதாக இருந்தது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் தனிமையில் இருந்து வழிபாட்டினை மேற்கொண்டார்.
சூபிகள் இந்திய நாட்டு யோகிகளிடமிருந்து சில கருத்தாக்கங்களை பெற்றனர். ஆன்மீக மலர்ச்சிக்கான சுய-புலனடக்கமே அது. இவைபோன்ற பயிற்சிகள் அனுபூத உலகில் தீட்சை பெற்றவர்களுக்கும் அவசியமானதாக கருதப்பட்டது. மூச்சுப்பயிற்சி, புலனடக்கம், நனவுலகினின்றும் என்னை விடுவித்துக்கொள்ளல், மன ஒருமைப்பாட்டை உருவாக்குதல் போன்றவை. யோகிகள் அபானனில் தொடங்கி சமானனில் (சமாதி நிலையில்) முடிந்தனர். தியானம் நம்மை ஏதோ ஒன்றின் மீது அவதானிப்பு செய்கிறது. ஆழ்ந்த மன ஒருமைப்பாடு புற எண்ணங்கள் அனைத்தும் விட்டொழிந்த வெறுமை நிலை. ஆனால் தியானம் அதைவிட உயர்ந்த நிலை. அங்கே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களும் மறையும் கால இலக்குயம் ஓயும். எல்லை ஒ எல்லையற்றது ஒன்று படும். இருப்பு நிலையும் வளர்நிலையும் ஒன்றையொன்று இணையும் தனித்த நிலையில் இருக்கும் ஒன்று. அந்நிலை மாறி உலகளாவிய ஆன்மாவின் பகுதியாக மாறும் . இதன் விளைவாக நிரந்தர அமைதி ஏற்படும். அச்சம், மனப்பதட்டம், உடல் உபாதைகள் அனைத்தும் மறையும். இதுவே எல்லா அனுபூதிமான்களும் தேடும் ஆன்மீக அனுபவமாகும். நோன்பு, தியானம் ஆகியவற்றின் வழியாக பாீது காணவிரும்பிய அனுபவமும் இதுதான்.
பாீது தம் அறைக்குள்ளே தனித்து இருந்தார். ஒவ்வொரு நாளும் அவாின் தியான நேரம் மிகுதியாகிக் கொண்டே வந்தது. பாீது சில்லா-இ-மாகுசூக் என்ற தலைகீழ: தவம் செய்தலை மேற்கொண்டார். இது தொடர்பான பல புனை கதைகள் இருக்கின்றன.
பாீது இந்திய நாட்டின் மக்களோடு மட்டுமின்றி இந்திய மயமாக்கப்பட்ட சூபிச கொள்கைகளோடும் தம்மை அடையாளம் கண்டார். அவர் மற்ற சூபிகளைப் போலவே வேதாந்தம், பெளத்தம், பக்தி இயக்கம் ஆகியவற்றின் சிந்தனைகளோடு ஒருமித்து கொண்டார்.
பாீதின் கொள்கைகள் பின்வருமாறு அமைந்தன.
(1) இறையன்பு (2) மனத்தூய்மை (3) செல்வம் மற்றும் உலகியல் முன்னேற்றத்திலிருந்து ஒதுங்கிய நிற்றல். இறைவன் மீது கொள்ளும் அன்பு மானுட சமூகத்தின் மீது கொள்ளும் அன்பாகிறது. மனத்தூய்மை பெறும் போது தன்முனைப்பு , ஆணவம், கோபதாபங்கள் அனைத்தும் விடுபடுகிறது. ஆன்மீக நிறைவேற்றத்தின் முதல் கட்டம் இறையச்சமே. இதன் மூலமே ஒருவன் தன் செயல்களை மதிப்பீடு செய்து கொள்ள முடியும். அறம், அறவாழ்வு பற்றிய ஆழ்ந்த நனவுநிலை இல்லாது போனால் அனுபூதி வாழ்வு தொடங்காது. ஒழுக்கவியல் பற்றிய உணர்வும் அனுபூதமும் இணைந்தே இயங்கும். வறுமை வாழ்வை ஏற்றல், பொருளை மறுதலித்தல், உலக நாட்டங்களிலிருந்தும் பேராசைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளல் போன்நலற்றை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உலகப்பற்று துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முடிவற்ற தளைக்கும் காரணமாகிறது. இவை மரணம் வந்தாலொழிய விலகுவதில்லை. பாீது அன்புவழியையே போதித்தார். தன் சீடர்களுக்கு வறுமையை ஏற்றுக்கொள்ளுமாறு போதித்தார். பாீது தம்முடையதாக எந்த தத்துவத்தையும் உபதேசிக்கவில்லை. சில விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தினார். ஷாீஅத் வாதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதுடன் தொடங்கிய அவர் படிப்படியாக தாீகத், ஹகீகத், மாீபத் நிலைகளை அடைந்தார். இவை அனைத்தும் பக்தியின் ஒவ்வொரு படிநிலைகளே. ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு வகையான ஒழுங்கும், கட்டுப்பாடும் தேவைப்படும். அவ்வகையான கட்டுப்பாட்டையே பாீது விரும்பினார். எல்லோர்களையும் ஒரே மாதிாியாக நடத்தினார்.
பஞ்சாபி மொழியின் முதல் கவிஞூரும் அவரே. இவாின் பாடல்ள் சீக்கிய நூலான குருகிரந்த சாகிபில் இடம் பெற்றுள்ளன. இந்திய சூபிச வரலாற்றில் பாபாபாீது குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறார்.
***
peer13@asean-mail.com
- பரிசு
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை
- செலவுகள்
- அட்டைகள்
- அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து)
- மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)
- நகுலன் படைப்புலகம்
- ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு
- அறிவியல் துளிகள்
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)
- அநேகமாக
- மாறிவிடு!
- அவள்
- அவதார புருசன்!!!
- சுற்றம்..
- நில் …. கவனி …. செல் ….
- வல்லூறு
- மானுடம் வெல்லும்!
- பாலன் பிறந்தார்
- விளக்கு – ஹெப்சிபா ஜேசுதாசன் பாராட்டு விழா அழைப்பிதழ்
- நன்றி
- ஒற்றுமை
- கிரகணம்