எச். பீர்முஹம்மது
‘அடையாளம் ஒன்று இருக்கும் போது நம்பிக்கை ஒன்று பிறந்து வருகிறது நம்பிக்கைகளற்ற அடையாளங்கள், அடையாளங்களற்ற நம்பிக்கைகள் தவிர எஞ்சுவது வேறொன்றுமில்லை நாம் நம்பிக்கையற்ற அடையாளத்துக்குள் இருக்கும் நாளே மகிழ்ச்சியானதாகும். ‘
வாழ்க்கையின் நம்பிக்கை, அடையாளம் எப்போதுமே தன்னை ஒன்றுக்கொன்று முந்தி கொள்வதாக அறிவிக்கிறது. நாம் அதற்குள் இயங்காமல் வேறென்ன செய்ய முடியும் ?
நடைமுறை வாழ்வு சார்ந்து பல்வேறுபட்ட அடையாளங்கள் இயங்குகின்றன. சாதீய, மதம், மொழி, நில, பால் போன்ற அடையாளங்கள் அங்கிங்காக ஊடு பாவுகின்றன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இவைகளிருந்து அவை எழுந்து வெளி சார்ந்து உலவுகின்றன. வரலாற்று ரீதியிலான காலத்தை நோக்கி அவையெல்லாம் பின் தள்ளலை நிகழ்த்தும் போது தனக்கான இருப்பை நிர்ணயித்து கொள்கின்றன. வரலாறு குறித்ததான பாசில் டேவிட்சனின் பார்வை வித்தியாசமாக தெரிகிறது.
‘வரலாற்றை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது ஒரு கணக்கீட்டு இயந்திரம் அல்ல, இது மனத்தையும், பிம்பங்களையும் மறக்க முடியாதபடி எடுத்து கொள்கிறது. பல்வேறுபட்ட மக்கள் கலாசாரங்களின் பதிலுறவை உடயக்கமாக எடுத்து கொள்கிறது. நுண்மையான பருப்பொருள் உறவுகளையும், இளைத்து போன பொருளாதார காரணிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. ‘
வரலாற்றின் அடையாளம் குறித்தான அவருடைய பார்வை இவ்வாறாக இருக்கிறது. மக்கள் கலாசாரங்களின் பதிலுறவாக பார்க்கிறது. ‘அடையாளம் ‘ தன்னை எப்போதுமே வரலாற்று ரீதியாக நிலைப்படுத்தி கொள்ள விரும்புகிறது. அது சார்ந்த எந்த இனமும் தன்னை வரலாற்று ரீதியாகவே பார்க்கும். இந்திய சாதீய அமைப்பாக இருந்தாலும் சரி, இலங்கை தமிழ் இனமாக இருந்தாலும் சரி தன்னை மேற்கண்ட முறையிலேயே நிலைப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. தனி மனிதன் – திரள் இரண்டும் சார்ந்த இயக்க ரீதியிலான உறவுகளே அடையாளத்தை நிர்ணயித்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. மார்க்ஸ் அதை உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் பார்த்தார். சமூக அடிக்கட்டுமானமும் (ஆஹள்ண்ஸ்ரீ நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) அதை நிர்ணயிப்பதின் காரணியாக விளங்குவதாக காண்பார். அடையாளம் குறித்ததான டெல்யூஸ் – காட்டயின் பார்வை வித்தியாசமானது. பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர்களான அவர்கள் மனித சமூகத்தை உளப்பகுப்பாய்வின் அடிப்படையில் பார்த்தார்கள் அங்கங்களற்ற உடலே (ஆர்க்ஹ் ரண்ற்ட்ர்ன்ற் ஞழ்ஞ்ஹய்ள்) மண்ணின் மீது தன்னின் வரைவை பொறித்துக் கொள்கிறது. மறு பொறித்தன் போது தன்னை பயச்சிக்கலுக்குள் உட்படுத்தி கொள்கிறது. மோதல்கள் இந்த இடத்தில் தான் ஆரம்பிக்கின்றன.
உடல் இயந்திரம் ) தன்னை எப்போதும் அலைவுக்குள் ஆட்படுத்தும். ஏங்கல்ஸின் அதிகாரம் குறித்தான பார்வையை இதனோடு பொருந்திப் பார்ப்பது அவசியமாக இருக்கும். அது ‘பிளவுபடாதது, ‘ துண்டாக்க முடியாதது. அதில் ஒட்டிக் கொள்ளும் எதுவும் தன்னை துண்டாக்கி கொள்ள முடியாது. அடையாளம் சார்ந்து இயங்கும் எதுவும் தன்னை குறிப்பீடுகள் சார்ந்து இயக்கி கொள்கிறது. இதனின் திரட்சியே பெரும்பான்மை சார்ந்த கருத்து வலுப்பெற அடிப்படையாகிறது. அங்கங்களற்ற உடல்கள் மண்ணில் பதிந்து அடையாளமாக மாறிய பிறகு தன்னை பிரதேச ரீதியாக பாகுபடுத்தி கொள்கின்றன. இந்த பிரதேசப்படுத்தல்கள் ஒன்றின் மேலாதிக்கமாக உருவெடுக்கின்றன. உலக அளவில் பிரதேசப்படுத்தல்களுக்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வந்து கொண்டிருக்கின்றன. 20-ம் நூற்றாண்டில் நடந்த ஜெர்மன் இன அடையாள நிர்ணயிப்பு போக்கு பெருந்துயரத்தை யூத இனமக்கள் மீது உண்டாக்கியது. இனவாதம் அல்லது அடையாளப்படுத்தல் தன்னை ஓர் அரசதிகார வடிவில் மேற்கொள்ளும்.
ஹிட்லர் சொன்னார் ‘ இந்த ஜெர்மனிக்கு இது ஒரு தக்க தருணம் என்று அவர்களிடம் கூறுங்கள். நான் இதற்கு பொருத்தமானவன் என்று கருதியே என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். நம் இனத்தை நிறுவுவது தவிர வேறெதுவும் இந்த நேரத்தில் செய்ய முடியாது. ‘
மேற்குறிப்பிட்ட வடிவில் தான் அடையாளம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அது மற்ற இனங்கள் மீதான நெருக்குதலை மேற்கொள்ளும் அதுமாதியே யூதவாத போக்கையும் அது இஸ்ரேலை மையமாகக் கொண்டு வெளிப்படுத்தும் அடையாள நெருக்கடியையும் விரிவாக காண வேண்டியதிருக்கிறது.
அரேபிய மண்டலம் என வரலாற்று காலத்தில் அறியப்பட்ட தற்போதைய இஸ்ரேல் பல்வேறுபட்ட இனக்குழு மக்களின் வாழ்க்கை சூழலோடு ஆரம்பிக்கிறது. கி.மு. 3500-ல் அமோரியா இனக்குழு மக்கள் தங்களின் நிறுவுதலை மேற்கொள்கிறார்கள். ஆபிரஹாமின் வருகைக்கு பிறகு யூதமதம் உருவாக்கப்படுகிறது. இதன் பின்னர் அதனை தழுவிய பல்வேறு இனக்குழுக்களை சார்ந்த மக்கள் தங்களை அதனோடு அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மோஸே என்ற தூதுவர் மூலமாக தனக்கான நியதிகளை ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதன் பிற்பாடு உலகின் பல்வேறு பகுதிகளுக்கான நகர்தலை நோக்கி தன் வாழ்வை செலுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இனம் எப்படி தன்னை வரலாற்று ரீதியாக பிளவுப்படுத்தி கொள்கிறது என காண முடிகிறது. கி.மு. 932ல் சாலமன் அரசின் மரணத்துக்கு பின் அந்த பகுதியானது இரு பிரிவாக அறியப்படுகிறது.
வடக்கிருந்த பகுதி இஸ்ரேல் என்று தெற்கிருந்த பகுதி யூதநாடு என்றும் பெயடப்படுகின்றன. வரலாற்றின் வழக்கமாக படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகள் அதையும் விட்டு விடவில்லை. பல்வேறுபட்ட கால கட்டத்திற்குள் அவை நடந்தேறின. இதன் பின்னர் அந்த இனமானது தனக்கான இருப்பிடத்தை பரவலாக்கம் (ஈண்ஸ்ங்ழ்ள்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) செய்து கொண்டது.
1862ூம் ஆண்டு மோஸஸ் ஹெஸ் என்பவரால் ‘ரோமும் ஜெருசேலமும் ‘ என்ற நூல் வெளியிடப்பட்டது. இதன் முதலாக யூத தேசியம் குறித்தான பார்வை வெளிப்பட்டது. அதற்கான திரளும் ஏற்பட்டது. புதிய இன அடையாளத்திற்கான ஒரு முன் வடிவும் இதன் மூலம் தான் வெளிப்படுத்தப்பட்டது.
1896-ம் ஆண்டில் தியோடர் ஹெர்ஸ் என்பவர் யூதநாடு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்தே யூத இனத்துக்கான தேசிய இருப்பிடம் (சஹற்ண்ர்ய்ஹப் கர்ஸ்ரீஹப்ண்ற்ஹ்) என்ற கருத்துருவம் தோன்றியது.
1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ூம் தேதி தியோடர் ஒரு மாநாட்டை கூட்டினார். சிதறிகிடந்த அமைப்புகள் அதன் மூலமாக ஒன்று சேர்ந்தன. இதன் வழியாக யூதவாதம் (ழண்ர்ய்ண்ள்ம்) உருவாக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் மூலமாக பின்வரும் செயல் திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.
1. யூத விவசாயிகளும், தொழிலாளிகளும் பாலஸ்தீனத்தில் குடியேறுவதை தக்க வழிகளில் மேம்படுத்த வேண்டும்.
2. ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும் ஏற்றாற்போல ஸ்தல மற்றும் சர்வதேச அளவில் தகுந்த அமைப்புகளை உருவாக்கி இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவது, அனைத்து யூதர்களையும் ஒன்றிணைப்பது.
3. யூத தேசிய மன உணர்வையும், உணர்வையும் பலப்படுத்துதல்.
4. யூதவாதத்தின் நோக்கங்களை அடையும் பொருட்டு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற ஆரம்ப நடவடிக்கைகள் எடுப்பது.
தொடர்ந்து பல்வேறுபட்ட நடவடிக்கைகள் இதனை சார்ந்து எடுக்கப்படுகின்றன. அவை அவர்களின் வாழ்வனுபவ வரலாற்று நீரோட்டமாக பார்க்கப்பட்டது. அக்கால கட்டத்தில் பிட்டனின் காலனியாதிக்கம் தன்னுடன் இதற்கான துணையை ஏற்படுத்திக் கொண்டது. துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டவுடன் அதற்கான உருவாக்க வரைவு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு தருணங்களில் நிர்ணயிக்கப்பட்ட இடமான பாலஸ்தீனம் குடியேற்றமாகியது. சிறுதிரள், பெருந்திரளாக மாறியது. ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் அழிக்கப்பட்டனர் அல்லது அலைக்கழிக்கப்பட்டனர். ஓர் உள் கட்டமைப்பாக அவர்களுக்கு அது தென்பட்டது.
சுய இருப்பிடமே தீவாக மாறியது வாழ்விருந்து அந்நியப்பட்ட பாலஸ்தீன் மக்கள் தங்களுக்குள்ள சுய நிர்ணய உமையை வகுத்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
பல்வேறுபட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதனை தொடர்ந்ததான ஐ.நா. சபையின் நடவடிக்கையின் பலனாக 1948 ஆம் ஆண்டு இரு பிரதேசங்கள் (இஸ்ரேல், பாலஸ்தீன்) வகுக்கப்பட்டன. அமெக்க ஏகாதிபத்தியமே இதற்கான முழு வீச்சில் இறங்கியது என்பது அறியப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.
பிரதேச கூறுபாடுகளை தொடர்ந்து இன அழிப்பு, தூய்மைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் சமகாலம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஓர் இனம் தன்னை நிறுவுவதற்கான அடையாளமாக தேசிய வாதத்தை (சஹற்ண்ர்ய்ஹப்ண்ள்ஹற்ண்ர்ய்) வைக்கிறது என்றார் எட்வர்ட் செய்த். தன்னுடைய இன்ப்ற்ன்ழ்ங் ஹய்க் ஐம்ல்ங்ழ்ண்ஹப்ண்ள்ம் என்ற நூல் ஏகாதிபத்தியத்திற்கும், தேசியவாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்கிறார். தேசியவாதம் எல்லா வித்தியாசப்படுத்த முடியாத இனங்களை வசைப்படுத்துகிறது. அது பொதுவான வரலாற்றின் கீழ் இருக்கும் மக்களின் மதம், மொழி ஆகியவற்றை அந்நியப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்வதன் வழியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான யூத இனங்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கண்டவற்றோடு நன்றாகவே பொருந்துகிறது. இனவாதம் வலுப்பெறும் போது அங்கே முதலாளித்துவமும் வலுப்பெறுகிறது. அது வர்க்க பிரிவினையை சிக்கலுக்குள்ளாக்கும். யூதவாதம் வலுப்பெற்றதற்கு பின் ரஷ்யாவில் ‘பண்ட் ‘ என்ற அமைப்பு யூத தொழிலாளர்களுக்காக இருந்தது. அது யூத தேசியத்திற்காக முதலாளி அமைப்புடன் சேர்ந்து வர்க்க போராட்டம் பற்றி கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் லெனின் பின்வருமாறு கூறினார்.
‘யூதர்களில் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாம் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். அவர்கள் நமது சகோதரர்கள் நம்மை போலவே அவர்களும் முதலாளிகளால் ஒடுக்கப்படுகிறார்கள். சோசலிசத்திற்கான போராட்டத்தில் அவர்கள் நமது தோழர்கள் யூதர்களில் நிலப்பிரபுக்கள், சுரண்டும் முதலாளிகள் ஆகியோர் இருக்கின்றனர். ரஷ்யர்களிடையே அனைத்து நாட்டு மக்களிடையே இருப்பது போல் யூதர்களிடையேயும் இவர்கள் இருக்கிறார்கள். பணக்கார ரஷ்யர்களைப் போல அனைத்து நாட்டு பணக்காரர்களை போல பணக்கார யூதர்கள், தொழிலாளிகளை ஒடுக்கவும் நசுக்கவும், சுரண்டவும், தொழிலாளி வர்க்கத்தை உடைக்கவும், கூட்டணி அமைத்து கொள்கிறார்கள். ‘
இங்கு தான் அடையாளச் சிக்கல்கள் எழுகின்றன. தன்னை ஓர் அடையாளமாக அறிவிக்க முடியாது என்பது தெகிறது. இன தூய்மைவாதம் ‘மற்ற ‘ இனத்தை பிரதேசதகர்ப்பு (ஈங்ற்ங்ழ்ழ்ண்ற்ர்ழ்ண்க்ஷ்ஹற்ண்ர்ய்)செய்வதன் மூலம் நிறுவி கொள்கிறது. மற்றதை தகர்ப்பு செய்வதன் மூலம் தன்னை மறு கட்டமைப்பு செய்து கொள்கிறது. இதனை மறுபிரதேசப்படுத்தல் (தங்ற்ங்ழ்ழ்ண்ற்ர்ழ்ண்க்ஷ்ஹற்ண்ர்ய்) என்றார் டெல்யூஸ். உடல் இயந்திரத்தின் சுழற்சியாக தன்னை இனவாதம் அடையாளப்படுத்தும். (நம் நிறம், நம் இரத்தம், நம் உடை) உடல் என்றுமே ஒருமைப்படுத்தப்படுவதில்லை. அது பல்வேறுபட்ட பதிவுகளாக தன்னை வெளிப்படுத்தி கொண்டு இயங்குகிறது. எல்லா இனங்களின் அடையாளங்களும் இதனின் நீட்சியாகவே தொடங்குகின்றன. பால்கன் பிரதேசத்தில் செர்பிய இனம், துருக்கியின் குர்திஷ் இனம், இலங்கையின், சிங்கள இனம், பிலிப்பைனின் தேசிய இன மோதல்கள், ஆப்பிக்காவின் வெள்ளை இனம், அமெரிக்காவின் இண்டியானா பிரதேசம் அல்ஜீயாவின் கறுப்பு இனங்கள், அயர்லாந்து போராட்டங்கள், இந்தியாவின் சாதீய மோதல்கள் இவ்வாறாக இனங்களும், நிலங்களும் தன்னை முந்தி கொண்டு இயங்கி வருகின்றன.
‘ஜெர்மனி ‘ன் நாஜிக்களால் யூத இனம் மற்றதாக அறிவிக்கப்பட்டபோது பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் மற்றதாக அவர்களுக்கு மாறினார்கள். பூடானில் புத்தர்கள் மற்றதாக மாறிய போது இலங்கையில் திருப்பம் சார்ந்த எதிர்மாறலாக இருக்கிறது. பல்வேறுபட்ட தீவுகளாக பதிவை நிலைப்படுத்த முடியாத அங்கங்களாக இவை சிதறிக் கிடக்கின்றன. வரலாற்றாசியர் டாயன்பீ ஒரு தடவை கூறினர். ‘பாலஸ்தீனம் மீதான யூத இனத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது நாஜிக்களிடம் அவர்கள் அனுபவித்ததை காட்டிலும் மேலாக இருக்கிறது ‘.
இங்கே தான் சிக்கல் எழுகிறது. ஓர் அடையாளம் தன்னை உருவகிக்க விரும்பும் போது முழு முற்றானதாக மாற்றிக் கொள்ள முடியாததாகும். எட்வர்ட் செய்த் இதையே தேசியவாதம், தேசியம், இருப்பிடம் என்றார் (சஹற்ண்ர்ய்ஹப்ண்ள்ம், சஹற்ண்ர்ய்ஹப்ண்ற்ஹ், சஹற்ண்ஸ்ண்ற்ஹ்). இவை மூன்றும் இயங்கியல் ரீதியாக தொடர்பு கொண்டுள்ளன.
பாலஸ்தீனின் ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், செர்பியர்களின் தூய்மைவாதங்கள் இன்னும் இன்னும் அடையாளங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி கொண்டே வருகின்றன. அடையாளங்களை மீறுவது சாத்தியாகுமா ?
***
peer13@asean-mail.com
- உண்மை பொய்யல்ல.
- மெளன குரு
- என்னுடல் மின்னுடல்
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)
- வாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )
- மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை
- காற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை
- கார்கோ கல்ட் அறிவியல் -2
- ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்
- அறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)
- கருவறைக்கு ஒரு வந்தனம்
- அவன் சிரித்தான்
- சூரிய அஸ்தமனம்.
- தேடிய அமுதம்
- கூந்தலழகி
- தமிழர் தொட்டால் சிணுங்கிகளா ?
- வாழும் இறப்பாய்…
- என்று கற்பேனோ ?
- எந்தையும் தாயும்
- மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை
- ஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை
- கார்கோ கல்ட் அறிவியல் -2
- கல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்
- இந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)
- அடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .
- பணக்காரரும் ஏழையும்
- பார்வை – கிராமிய அழகியல் மனநிலை
- அரிதார புருஷர்களின் அவதார மோகம்
- வடிகால்