அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

சுந்தரக் கண்ணன்


முன்னோடிகளற்ற புதிய எழுத்துப் பாணி அசோகமித்திரனுடையது. பிரக்ஞை பூர்வமான எளிமை, தாமரையிலை நீர்த்தன்மை,காயப்படுத்தாத எள்ளல் இவையே அவருடைய தனித்தன்மை. வாழ்வின் மீதான அக்கறை , கவலை, மனிதாபிமானம், அன்பு, முதிர்ச்சி, பக்குவம், மற்றுக் உலக இலக்கியத்தில் அவர் கொண்டிருக்கிற தேர்ச்சி, அதன் நேரடி அனுபவம் ஆகியவை அவருடைய படைப்புகளுக்கு ஒளியும் கனமும் சேர்க்கின்றன. எனவேதான் எளிதே போல் தோன்றும் அவருடைய எழுத்துப் போக்கு எவருக்கும் கை வராததாகிறது.

” அசோகமித்திரன் 77 ” நூல் அவரைப்பற்றிய 22 கட்டுரைகள் கொண்டதாகும். அவற்றினை பிரபஞ்சன், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன் , நகுலன், விட்டல்ராவ், கே எஸ் சுப்ரமணியன், சூர்யராஜன், ஜெயமோகன், ஞானி, சு வேங்கட்ராமன் , திலீப்குமார், தமிழவன்,சிங்கப்பூர் ரெ.பாண்டியன், அரவிந்தன், ஜ“ முருகன், ஆனந்த் நடராஜன், செந்தூரம் ஜெகதீஸ், ஆர் பி ராஜநாயஹம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சுப்ரபாரதிமணியனின் ” கனவு ” இதழ் 1994 ம் ஆண்டு வெளியிட்ட ” கனவு = அசோகமித்திரன் விமர்சன மலரில் ” இடம் பெற்ற கட்டுரைகளும், மற்றும் சில கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலின் வெளியீட்டு விழா திருப்பூரில் ஞாயிறன்று மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் வரவேற்புரை வழங்கினார். வழக்கறிஞர் ரவி தமிழிசைப் பாடல்களைப் பாடினார்.
கலை இலக்கியப் பேரவை தலைவர் வி டி சுப்ரமணியன் ” அசோகமித்திரன் 77 ” நூலை வெளியிட தாய் தமிழ் பள்ளி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் முத்துசாமி வெளியிட்டார்.
நூலைப்பற்றி ஆர் பி ராஜநாயகம், சுப்ரபாரதிமணியன் உரையார்றினர்.
“கனவு ” வெளியிட்ட ” மெய்ப்படும் கனவுகள் ” என்ற திருப்பூர் கவிஞர்கள் 31 பேரின் கவிதைகள் அடங்கிய நூல் குறித்து பேராசிரியை புவனேஸ்வரி விமர்க் கட்டுரை வாசித்தார். தாண்டவக்கோன், சுபமுகி, ஜெயபால் , சிவதாசன், ஜோதி, பக்குதீன் அலி அகமது, மூர்த்தி
ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். ஜோதிகுமாரின் ” வறுமையின் கனவு”, ராகுல் நகதாவின், ” தூரம் அதிகமில்லை “., கார்த்திகேயனின், ” கந்தல் ” ஆகிய குறும்படங்கள் வெளியிடப்பட்டன.

” அசோகமித்திரன் 77 நூலை சென்னை அமிர்தா பதிப்பகம்
வெளியிட்டுள்ளது விலை ரூ 90.

செய்தி :issundarakannan7@gmail.com

======================================================

Series Navigation

சுந்தரக் கண்ணன்

சுந்தரக் கண்ணன்