“முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மாநாடு-2009”

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

சரவணன்


ஆய்வுக்கோவை வெளியீடு

ஆய்வுக்கோவை

தொடக்க விழாப் பேருரை பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள்

பத்திரிகைச் செய்தி

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாடு – 2009

தமிழகம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை ரூ அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாடு – 2009, 14.06.2009 அன்று நடைபெற்றது.
மாநாட்;டின் தொடக்க விழாவில் கே.எஸ்;.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா. டாக்டர். கே.எஸ். ரங்கசாமி ஆதுகு அவர்கள் தலைமையுரை நல்கி 141 கட்டுரைகள் அடங்கிய 848 பக்கங்கள் உடைய ஆய்வுக்கோவையினை வெளியிட்டார். ஆய்வுக்கோவையின் முதல்படியை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விழா வாழ்த்துரையினைக் கே.எஸ்.ஆர். கலை ரூ அறிவியல் கல்லூரிச் செயல் இயக்குநர் திருமதி. கவிதாசீனிவாசன் அவர்களும் முதல்வர் முனைவர் நா. கண்ணன் அவர்களும் வழங்கினர்;.
மலேசியா மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். குமரன் அவர்கள் தொடக்க விழாச் சிறப்புரையாற்றினார்;. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் தொடக்க விழாப் பேருரையாற்றினார்.
கே.எஸ்.ஆர். கலை ரூ அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. மா. கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையும் தமிழ் விரிவுரையாளர் முனைவர் இரா. குணசீலன்; அவர்கள் நன்றியுரையும் நல்கினர்;.
மாநாட்;டின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் நா. கண்ணன் அவர்கள்;; தமிழர் தம் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் உணர்ச்சிப்பூர்வமாகச் சிறப்புரையாற்றி, மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்குச் சன்றிதழ்களை வழங்கினார்.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் மொழித்துறைப் பேராசிரியர் திருமதி. றூபி வலன்ரீனா பிரான்சிஸ்; அவர்கள் இலங்கையில் தமிழ் இலக்கியம் என்ற பொருண்மையில் உரையாற்றினார்.
மலேசியா மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். குமரன் அவர்கள் மாநாடு பற்றிய மதிப்புரையினை நல்கினார்.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
கே.எஸ்.ஆர். கலை ரூ அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் இரா. சந்திரசேகரன் அவர்கள் வரவேற்புரையும் தமிழ் விரிவுரையாளர் திரு. ப. சரவணன் அவர்கள் நன்றியுரையும் நல்கினர்;.
இந்த மாநாட்டில் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்களும் தமிழறிஞர்களும்; கலந்துகொண்டனர்.


Series Navigation

சரவணன்

சரவணன்