வேரை மறந்த விழுதுகள்
சித. அருணாசலம்
பேரைச் சொல்லப் பிறந்தவன்
பெரிதாய் ஏமாற்றி விடக்
காரை விழுந்த பற்களுமாய்க்
கைத்தடி மூன்றாவது காலுமாய்
தாரை தாரையாய்க் கண்ணீர்
ததும்புகின்ற கண்களுமாய்
குறைகளோடு ஒன்றிப்போன நிலையில்
குற்றுயிராய் இங்கே பெற்றோர்கள்,
வேரை மறந்த விழுதுகளால் – வாழ்வை
வெறுக்கின்ற நிலையைப் பெற்றார்கள்.
chidaarun@yahoo.com