வேத வனம் விருட்சம் 30

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

எஸ்ஸார்சி


காண்போன்
காட்சி
காண்பொருள்
இவை இடை
எழு பிரிவினை ஒய
பிரம்மத்தை
ஒயாது தியானி
எங்கும் நிறை
தன்னொளி அது.

நான் என்பது ஏது
ஒயாது கேள்
உன் வசமுள்ள
ஞான வாள் கொண்டு
நான் என்பதை வீழ்த்து

உபநிடத வார்த்தை
குரு தரும் அருள்
ஆழ்ந்து வசமாக்கு

அறிவு நாசூக்காய் விலங்கிடும்
போய் விடாதே மோசம்

பரிபூரண பிரக்ஞை நீ
என்றுமுள ஆன்மா நீ
தெளிவுகொள்
ஆனந்தமாய்
சுற்றித்திரி இக்கணம்.

நீ மாறிலி
நீ அழிவிலி
ஆன்ம அரசாங்கத்து
அமர் உன்னதம் நீ
எங்கும் நிறை
என்றும் உறை
பரிபூரணன் நீ
மெய் அது நீ
அச்சம் அகன்ற ஆன்மம் நீ
வீரக்குழந்தாய்
ஆனந்ததில் திளை
உந்திப்பற நீ இக்கணம்.

புனித குருவே
என் அவித்தை விலக்கிய
உமக்கு வனக்கங்கள்
நின் கருணைக்
கொ¦டையே
பிரம்மத்தின் எப்போதும் நிறை
பேரின்பம்
என் குழப்பங்கள் ஒய
அய்யங்கள் மாய
அச்சம் தவிர்த்திட்ட
ஆன்மாவே ஆகிறேன் யான். – ஆனந்த பிந்து உபநிசத் 12-16


essarci@yahoo.com

Series Navigation