வேத வனம் விருட்சம் 22

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

எஸ்ஸார்சி


வேத வனம்
விருட்சம் 22

கதிரவன் கருணை பொழிக
மழையோன் நன்மை தருக
இந்திரனொடு ஆசானும்
நன்மை கொணர்க
காலடி கொண்டு அளக்கும் மால்
செம்மை அருள்க
பிரம்மனுக்கு வணக்கம்
காற்று தேவனுக்கு வணக்கம்
உணரும் கடவுள் அவனே
கண்கண்ட தெய்வம் அவனே
நியாயவான்
சத்தியவான்
காற்றுக்கடவுள்
அவன் வந்து
என்னைக்காக்கட்டும்.
என் ஆசானைக்காக்கட்டும்
என்னை
என் ஆசானை
அவன் வந்து காக்கட்டும்.
அமைதி அமைதி அமைதியே நிலவுக.


நான் யார்
துருவும் வினா
மெய் த்தடம் பயிலுதல்
தவம்
பிரம்மச்சரியம்
சுயக்கட்டுப்பாடு
இவை கொணரும் ஆன்ம பந்தம்.

அது நீ யே ஆகிறாய்
யானே அப்பிரம்மமாகிறேன்
மாவாக்கியங்கள்
பிரம்மத்தை தெளிவாக்கும்.

என்றுமுள பிரம்மம்
மனதிற்குள் மனம்
உயிருக்குள் உயிர்
செவியுள் செவி
கண்ணினுள் கண்
நாவுள் நா.
சுயஞ்சோதி
ஒயாமல் ஒளி பொழிவோன்

அன்னைக்கருவுக்குள்
குழவியாய்
பொறுமையொடு
ஒயாமல் முனைவோனுக்கே
வசப்படும் அது.

கரும்புச்சாற்றில் சீனி
பரவி
இனிப்புச்சுவையோ
சீனி முற்றும்
விரவி.
பிடிபடா ஆன்மா பிரபஞ்சம்
பரவி
நின்னிலும். அதுவே முழுதும்
விரவி.

இது இல்லை
அது இல்லை
பின் அதுவொடு
இதுவுமாய் இல்லை
ஏதுமாய் இல்லை
என்னென்பேன்
என்றுமுளதை
சொல் ச்சோரும்
சொல்லிலடங்காச்
சோதிச் சுயம்பேயது. – விசார பிந்து உபநிசத் 1-6


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி