வேதவனம் -விருட்சம் 6

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

ராமச்சந்திரன் சுந்தரேசன்


விவாதித்துக்கிட்டுவதா
விடை
தர்க்கித்துப்பெறுவதா
தடம்

இனிப்பும் கசப்பும்
இத்தோடுசரி
தேட எதுவுமில்லை விடு

முடித்துக்கொள்
யார் குறுக்கே
நிற்கிறார்கள்

காணக்கிட்டா
மறைந்தே உறையும்
ஆன்மீக அனுபவ
யோகமது
நன்மைக்கும் தீமைக்கும்
நடுவாய்

சென்ற காலத்தும்
செல்லாநின்ற
எக்காலத்தும்
சிறைப்படா அதுவே
நித்தியானுபவ
ஒங்காரம். கடோபநிசத் 14

ஆன்மா
உறையும்
ஆசனத்தில்
உடலே
உருள் தேர்

புத்தியென்பதோர்
அச்சாணி
மனம் கடிவாளம்
ஐம்புலனும் புரவி
தேடுபொருளாகும்
செல் தடம். கடோபநிசத் 18

பாசம் விலங்கு
நற்புகழை
நாடவும் விடுமா
என்றுமுய்யும்
நற்புகழ்
அறிஞனின் தேட்டம்
எளிதில் முடியும்
சுகங்களிடை
சிக்குவிப்பதே
அறிவின்மை.

தம்மைத்தாமே
வியந்து ஞானியாய்
போட்டக் கணக்கு
குருடனை
வழி நடத்தும்
மற்றுமொரு
குருடனோடொக்குமே “ 10-12
கேட்டவை தோற்கக்
கற்றவை தோற்கும்
பெற்ற ஞானமும் தோற்கும்
ஔயாது
முனைவோன் மட்டுமே
எட்டுவான் சிகரம் “ 23

பஞ்சபூதங்கள்:
ஆக்கிய கூடே
ஐம்புலன்கள்
மனிதமனமோ
புலன்களின் உச்சம்
மானுடப் புத்தியோ
மனத்தின் உச்சம்
உள்ள யாவைக்கும்
உச்சமே ஆன்மா “111/10

எழு
விழி
அறி
தேர்
தொடர் “ 111/14

ஒலியறியா
உணர்வறியா
உருவறியா
அழிவறியா
சுவையறியா
நுகர்வறியா
தொடக்கமிலா
முடிவுமிலா
மாற்றமிலா
என்றுமுள
பேரிருப்பை
அறிய
மரணம் அறுமே. “ 111/15

எல்லோரும் கேட்பதில்லை
கேட்ட எல்லாருக்கும் எட்டுவதில்லை
எட்டிய எல்லாருமே
சொல்ல வருவதில்லை. “ 11/7

Series Navigation

ராமச்சந்திரன் சுந்தரேசன்

ராமச்சந்திரன் சுந்தரேசன்