வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கண்ணப்பு நடராஜ்


வீதியோரத்தில்

பொய்த்துவக்கு ஏந்தியபடி

வெருட்டிக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன்

கோடையில் பூமி

சூாியக் குளியலில் குளித்துக்கொண்டிருந்தது

பச்சையாடையில் மரங்கள் நிறம் பூண்டு

பூாித்துப்போய் பூத்துக் கிடந்தனஸ

பச்சையாய் மனிதர்கள்..

பாடசாலைக்குப்போகும் வீதியில்

விடுதலையை முகர்ந்துகொண்டிருக்கும்

சின்ன மலர்கள்..

மூன்று வெண் ஒக்கிட்டுக்கள் போல்

பொம்மைக்குட்டிகள் குந்தியிருந்தன,

நடைபாதைக்கு வந்துவிட்ட

பாதையோரத்து மஞ்சள் மலர்கள்

வெள்ளைமலர்கள்

விலையற்ற மலர்கள் அவை,

விற்பனைக்கு

அந்த மலர்களை அடுக்கிவைத்து

விலைபேசும் மழகைள்,

7வயதுக்குக் குறைந்த

நடைபாதைக்கு வந்துவிட்ட

செல்வச்சிறுவர்கள்

தெருவோரத்துப்பூக்களை விலைபேசும்

வீட்டுப்பூக்கள்,

என்ன விலை ?

1 பூ 5 யூரே சென்ற்,

வெள்ளைப் பூ 2

மஞ்சள்பூ 1

விலை

15யூரே சென்ற்..

பின்னர்

விலைபேசத்தொடங்கி

4 பூவைப்பெற்றுக்கொண்டேன்…

பூக்களைப் பூக்களே விற்பதால்

அந்தத்தெருவோரத்துப் பூக்களுக்கு என் மார்பிலும்

வீட்டுச்சுவாில் தெய்வப்படத்திற்கு அருகே

மாியாதையும் கிடைத்தது!

பாடசாலை விடுதலையைத் தொடக்க

பாடசாலைமணிக்கு ஓய்வு கொடுக்க

திறப்புகள் கலகலக்கும் கொண்சியேஸ்,

ஆய்வுகளைப்படித்துப் படிப்பிக்கும்,

கற்கக்கஷ்டப்படும் மாணவர்களைக்கரையேற்றும் உளவியல் குழந்தைகளோடு

கூடியிருந்து புதிர்கள் அவிட்டு,

முகத்தில் சிாிப்புவரம்புகள்கொண்ட

அவன் சிாிப்பு அச்சை சுமந்து வந்தான்

பார்;க்கின்ற ஒவ்வொருவரையும்

சிாிப்பில் வார்த்தான்…

இரட்டைச்செல்வங்கள்

கயிறடித்து விளையாட

அதைக் கைதட்டிக் களிப்பில் கனக்கும்

தம்பதிகள்,

பாரம்பரீய அலகைப் பகுத்துப் பார்க்கும்

விஞ்ஞர்னப் போராசிாியனின்

;குளோன’; குஞ்சுகள்;

பூத்தால்

கனிந்தால்

யார் மார்;பிலும் மலட்டுப்பால் சுரப்பதில்லை ….

;இந்தக் கோடைப் பொழுது மட்டும் இப்படி ஒரு பொிய விடுதலைக்கு முன்

கொழுத்த மனிதர்களின் கழுத்தில் காலில் நெஞ்சில் விற்றமின்னை விதைக்க…

பூவைச் சுமந்தபடி பணக்காரநாட்டில் ஒரு நாளைக் கடந்தேன்….

—-
yknataraj@wanadoo.nl

Series Navigation