விஸ்வநாதன் ஆனந்த்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ரஜித்


29 அக்டோபர் 2008ல் நடந்த அகிலஉலக சதுரங்கப் போட்டியில்
விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற வெற்றியை ஒட்டி இந்தக் கவிதை

அகில உலக
சதுரங்கப் போட்டி
29 அக்டோபர் 2008

இன்றுதான்
ஆழி அடங்கிப்போனது
உன் ஆட்காட்டி விரலுக்குள்

பத்திரிக்கைப் பக்கங்களில்
தொலைத் திரைகளில்
வலைப் பக்கங்களில்
தட்டுமிடமெல்லாம்
தலைப்புச் செய்தியாய் நீ

எட்டுக் கண்டங்களை
பதினெட்டில் வென்றவன் நீ
ஆஸ்காரின் நாயகனாய்
நான்கு முறை நீ

மூளையின்
முக்கோடி நரம்புகளையும்
முடுக்கி முடுக்கி நீ
எடுத்துவைத்த அடியை
வணங்கி நிற்கின்றன
வல்லரசுகள்

தமிழனின் பெருமைக்கு
மொழியாகத் தமிழ்
விழியாக நீ
இந்தியனின் பெருமைக்கு
மலையாக இமயம்
மனிதனாக நீ


Series Navigation

ரஜித்

ரஜித்