விஷப்பாய்ச்சல்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

ஸ்ரீனி.


முட்களின் சுழற்சியில் முதுமையின் வரவுகள்
காரணம் உறைக்கும் விஞ்ஞானம்
முறைகளை மாற்றும் வழி தொியாமல் விழிக்கும்
ஞாயிற்றின் கதிர்களுக்கு இத்தனை அாிப்புத்தன்மை !
இளங்காலை பொழுதுகளில் இதமாய் பரவும்போதும்,
மண்டையை பிளக்கும் மத்தியான நேரங்களிலும்,
விளங்காது நமக்கு அதன் விபாீதம்!
கைகளிலும், கால்களிலும்,
கண்களிலும், தோள்களிலும்,
விநாடிகள், நிமிடங்கள், நாட்கள், வருடங்கள்,
படர்ந்து, படர்ந்து, பரவிப்பரவி,
வயது என்னும் எண்ணிக்கையை நமக்கு அறிமுகம் செய்யும்.
கதிர்களின் கண்காணிப்பில்
செங்கற்களாய் செல்களை கொண்டு
உடற்கட்டிடம் எழுப்பப்படும்.
விழிகளுக்கு பார்வையை அறிமுகம் செய்யும்
வீச்சின் வீாியத்திற்கேற்ப வண்ணங்கள் மாறுபடும்
செடிகளுக்கு உணவினை சமைத்துத்தரும்
தொலைந்து போனவர்களுக்கு வழிகாட்டும்
காட்சிப்பொருளின் காரணமாய் விளங்கும்
இன்னும் எத்தனை எத்தனை ஆராதனைகள்
ஆனால்,
குடத்திலிட்ட விளக்கல்ல இது
ஏற்றுவதற்கும் அணைப்பதற்கும்,
உயிாின் தோற்றம் முதல் இதன் அாிப்பு ஆரம்பம்
மண்ணில் புதையும் வரை விடாது.
விண்கல மாடுகளில் விஞ்ஞான ஏர் பூட்டி
வேறு கிரக நிலங்களை உழுது
வரும் சந்ததியை வாழவைக்க முயல்வது இருக்கட்டும்
இருக்கும் நிலையில் நம்மை இறக்காமல் செய்ய
இனியேனும் வழிமுறைகள் செய்வோம்
பார்வையால் செலுத்தப்படுவதை விட்டு
பகுத்தறிவால் செயல்படும் முறைகள் செய்தல் வேண்டும்
வித்தியாச கருத்துக்களுக்கு இனியேனும் இடம் கொடுப்போம்
இதனை உணரும் நாளன்று
வீச்சினை விட்டு நாம் வெகு தூரம் சென்றிருப்போம்.
ஏற்றுக அறிவெனும் சக்தி..

I

Series Navigation