வே.சபாநாயகம்.
‘நாற்பதுகளில் நமது சுதந்திரத்துக்கு முன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஆட்சியை வஞ்சி நாட்டின் பொற்காலம் என்பார்கள். அதற்கு ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம், மின்சார வசதி தவிர, கலையுலகிலும் திருவிதாங்கூர் முன்னணியிலிருந்தது. என்பதும், மூன்றுபோக நெல் விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு, நாஞ்சில்நாடு ‘திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம்’ எனப் பெயர் பெற்றதும், விமர்சையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இசைவிழா நிகழ்ச்சிகள் திருவிதாங்கூர் வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப் பெற்றதும் இதெல்லாம் நடை பெற்றது. நாற்பதுகளில் என்று எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதோடு திருமணம் செய்து கொள்ளாத ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜாவின் ஒழுக்கம், தெய்வபக்தி, அவர் தினமும் காலையில் பத்மநாபசாமி கோயில் தரிசனத்துக்குச் செல்லும் நேரம் பார்த்து, கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம் என்கிற நேர ஒழுங்கு – எனும் செய்திகளும் பிரமிப்பை அளிப்பவைதாம்.
திவான் சர்.சி.பி யும் பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்தவர் என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய முப்பதுபேர் கொண்ட மந்திரிசபை செய்ய முடியாததை, தனி ஆளாக நிர்வகித்த சிறந்த நிர்வாகி அவர் என்பதும், அளந்துதான் சிரிப்பவரான அவர் He was a ‘no nonsense’ man என்பதாலேயே அவருக்கு இடது வலதுசாரி அரசியல் கட்சிகளிடையே விரோதிகள் இருந்தனர் என்பதும் எமக்குப் புதிய செய்திகள்தாம், ஆனால்அவரது இந்தப் பெருமைகளை எல்லாம் குலைக்கிறமாதிரி பின்னால் நிகழ்ந்தவற்றைக் கேட்கத்தான் கஷ்டமாக இருக்கிறது. அவருக்கும் ‘அம்மை ராணி’க்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக வதந்தி பரவியதும், அதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியால் இரவோடிரவாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும்,
அதற்குப் பின்னர் அவர் திருவிதாங்கூர் திரும்பவே இல்லை என்பதும், அவருக்கு எதிராகநடந்த கிளர்ச்சிக்கு மறுநாள் தம்பனூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தலைப்பாகையுடன்நின்றிருந்த, கைதேர்ந்த சிற்பியால் உருவாக்கப்பட்ட அவரது நிர்வாகியை இழந்தது பெரிய சோகம். திருவனந்தபுரத்தை விட்டு அவர்போவதற்கு முன் மகாராஜாவுக்கு எழுதிய கடைசிக் கடிதம், ‘ it is impossiblefor me
tofunction here as one of several Ministers,….By temperament and training, I am unfit for compromises; being autocratic and over-decisive, I don’t fit into the present environment’ -அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது.
மேலும் அவர் ‘The man with a silver tongue’ என்று பெயர் பெற்ற சீனிவாச சாஸ்திரிக்கு இணையான ஆங்கிலப் புலமை மிக்கவர் என்பதும், பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அவரது ஆங்கிலத்தில் மோகம் என்பதும் அறிய அவரது பெருமை மேலும் உயர்கிறது.
– தொடர்ச்சி அடுத்த
கடிதத்தில்.
E-mail:
Blog :
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1
- நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !
- விமர்சனக் கடிதம் – 4
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்!
- நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு
- ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
- உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்
- கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி
- கி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )
- மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)
- வாணிமஹால்
- சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்
- கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்
- தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்
- வேத வனம் -விருட்சம் 39
- கனவுப் பெண்ணின் புன்னகை
- பேசும் மௌனங்கள்…
- முத்துக் குளியல்
- அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?
- கண்ணீர்ப் பிரவாகம்
- விளம்பரம்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1
- பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்
- நல்லது … கெட்டது.
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1
- ஹேண்டில் பார்…
- அவன்
- மென்மையான உருளைக்கிழங்குகள்