வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


E. Mail: Malar.sethu@gmail.com

நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்வர்கள் ஆசிரியரும், பெற்றோரும் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறது கோத்தாரிக் கல்விக்குழு. “மாத்ரூ தேவா பவ; பித்ரு தேவா பவ; ஆச்சார்யா தேவோ பவ” என்கிறன்றன வேதங்கள். மாதா, பிதா, குரு ¦த்ய்வம் என்கிறன்றனர் ஆன்றோர்.ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒரு சமூகம் உருவாக முக்கியமா¡னவர்கள் என்பதனை இக் கூற்றுக்கள் வலியுறுத்துகின்றன.

ஒரு நல்ல ஞானாசிரியனால்தான் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர். நிறைமொழி மாந்தராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும். நல்லாசிரியா¢ன் இலக்கணத்தை நன்னூலார்,

“நிலம் மலை நிறைகோல்

மலர்நிகர் மாட்சியும்

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மையும்

உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியனே”

என்று நவில்கின்றார்.நன்னூலார் கூறும் நல்லாசிரியர்க்குரிய பண்புகள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திலங்குகின்றன.

கற்கும் சூழல்

வளர்ச்சி¨யும் நடத்தையையும் புறம்பேயிருந்து கட்டுப்படுத்தும் பலவித காரணிகளே சூழ்நிலை எனப்படும். நமது பண்பாட்டின் மீது பலவகைத் தாக்கங்கள் நகழ்வதால் பள்ளிச் சூழலும், குடும்பச் சூழலும் நலிவடைந்து வருகின்றன. ஒரு குழந்தைக்கு நற்பண்புகளை வளர்க்கும் பொறுப்பில் குடும்பச்சூழலும், கற்கும் பள்ளிச் சூழலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இச்சூழல்கள் சீர்கெட்டால் குழந்தையின் வளர்ச்சியும் வாய்ப்பும் தடைப்படுகின்றன. அதனால் மாணவர்கள் நற்பண்புகளைப் பெற்று உயர்வடையும் நற்சூழல்களை பள்ளிகளே அமைத்துத் தரவேண்டும்.

சூழ்நிலைக்களம்

குடும்பம், சுற்றுப்புறம், சமுதாயம், பள்ளி, அரசு முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் வளர்ச்சிநிலைகள் அமைகிறது. மாணவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவக் கூடிய திட்டமிடப்பட்ட சூழ்நிலைக்களமாகப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குடும்பம்-பள்ளி

குடும்பமும் பள்ளியும் மாணவர்களுக்குத் தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும்போதுதான் மாணவர்கள் கல்வியில் நல்ல அடைவினைப் பெற இயலும். இவை இரண்டும் மாணாக்கரது வளர்ச்சிக்கு உதவும் இன்றியமையாதகாரணிகளாகும். ஒரு குழந்தையின் பண்பு அதன் ழுடும்பத்தின் பண்பு. குடும்பத்தின் பண்பு அதன் சமூகத்தின் பண்பு. சமூகம் காலம் காலமாகச் சேகரம் செய்த பண்பை குழந்தைக்கு அளிப்பது குடும்பம். குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகள் நற்பண்புகளைப் பெறமுடியாது என்பர் அறிஞர்.

ஆசிரியர்

ஒரு நாட்டின் பருமை அதன் பரப்பு,மலைகள், காடுகள், கழகங்கள், ஆயுதச் சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததன்று. ஆனால் அ·து
அந்நாட்டின் பள்ளிகளின் நிலையையும் ஆசிரியர்களின் தன்மையையும் பொறுத்ததாகும் என்று ஜே.எப்.பிரெளன் கூறுகிறார்.

ஆசிரியர்-மாணவர் உறவு

ஆசிரியர்திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுறக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும்.

பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல், செய்யக் கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக்கற்றல் என்பதற்கிணங்க கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிர தனித்துக் காணப்படவில்லை.

குருகுல முறைக் கல்வியில் ஆசிரியரும் மாணக்கனும் தந்தை மகன் உறவு என்ற நிலையில் நடந்து கொண்டனர். மாணவனாக ஒரு சிறுவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஆசிரியர் தமது குடும்பத்துள் ஒருவனாகக் கருதித்தன்மகனிடம் அன்பு செலுத்துவது போன்று இவனிடமும் அன்பு செலுத்தவேண்டும். இதேபோன்று மாணாக்கனும் ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து அவருக்கான பணிவிடைகள் பலவற்றைச் செய்யவேண்டும்.

ஆசிரியரது இருக்கக்குக் கீழ் இடத்தில் உள்ள இருக்கயையில்தான் மாணாக்கர்கள் உட்காரவேண்டும். அவர் கூறுவதை மறுத்துப்பேசக் கூடாது.காலையில் ஆசிரிர் துயிலெழுவதற்குமுன் எழுந்து இரவில் அவர் உறங்கிறயபின்னரே மாணாக்கன் உறங்கப்போக வேண்டும். ஆசிரியரது மனைவி பிற குடும்பத்தினர் ஆகியோரிடமும் மாணாக்கன் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பண்டைக்காலத்தில் நிலவிவந்த ஆசிரியர் மாணவர் உறவினை அறிஞர் சந்தானம் குறிப்பிடுகிறார். நன்னூலார்,

“அழலின் நீங்கான்அணுகான் அஞ்சி

நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு”

ஆசிரியா¢டம் மாணவர் நடந்து கொள்ளவேண்டும். அழலில் தீக்காய்வார்போன்று ஆசிரியர் மாணவர் உறவு இருத்தல் வேண்டும் என்கிறார் நன்னூலார்.

தற்போது ஆசிரியர் மாணவர் இடையே உள்ள உறவு குறைந்து வருகிறது. இதற்குச் செய்தித்தாள்,தொலைக்காட்சி ,திரைப்படம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கனின் ஆளுமையும் ஒரு காராணமாகும். இத்தகு சூழலில் மாணவர்கள் அயல்மொழிப் பண்பாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு நமது பண்பாட்டை மறந்து விடுகின்றனர்.

இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவுமேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.

1,அன்பு காட்டுக:

அன்பே உலகில் வலிமையானதாகும். இயந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பளிள்கிகு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர்.தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாதுபோய்விட வாய்ப்புள்ளது.பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில ஆசிரியர் பா¢வுடன் அன்பு காட்டவேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்றபோது அமை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்புவழியில் திருத்தவேண்டும்.ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில்செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்றுஅன்பு காட்டி, தந்தைபோன்று அணைத்துப்பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல்கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.

2,அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்:

அறவுத்திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீதுமட்டும் தனிக்கவன் செலுத்துதல் கூடாது அறிவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களைமேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத்திறன் குறைந்தவர்களுக்குஅறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.

அறவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால்அம்மாவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும்போது அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர்மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.

3,மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்:

ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் பேன்றவர்களாக இருத்தல்வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும்போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும்போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையைஅடையும்.

மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப்போல் கருதி மகிழ்ச்சியடைதல்வேண்டும். மாணவர்களைப் பாராட்டவேண்டும். அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர். இருவரது உறவும் மேம்பாடடையும். அவர்களது வெற்றியை அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்குகொண்டு மகிழவேண்டும்.

5,மாணகளை ஊக்கப்படுத்துதல்:

அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பர் பொ¢யோர். ஒவ்வொரு மாணவனிடத்திலும் ஒரு திறமைமறைந்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல்வேண்டும். “ஊக்கமே அக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் சுவாமி விவேகானந்தர். திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள்அதிகம் விரும்புவர்.

6,மாணவர்களின் தவறுகளைக் களைதல்:

தவறு செய்வது மனித இயல்வு. பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பொ¢தாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது.தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல்வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலமம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பொ¢தும் மதிப்பார்கள்.

7,தேர்வுமுறையில் மாற்றம்:

நாம் தற்போது நடைமுறைப்படுத்திவரும் தேர்வுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருதல் வேண்டும். இத்தேர்வுமுறையால் ஆசிரியா¢டம் மதிப்பெண் கூடுதலாகப் பெறுவதற்காகச் செயற்கைத் தமைமையுடன் பழகும் நிலை உள்ளது. இன்றைக்கு நடைமுறையில் உள்ள தேர்வுமுறை மாற்றப்பட்டால் ஆசிரியர் மாணவர் உறவு மேம்படும். இல்லையெனில் தேர்வு குறித்த அச்சமே மேலோங்கும்.

8,ஆசிரியர் மாணவர் விகிதம்:

பண்டைக் காலத்தில் ஆசிரியா¢டத்தில் குறைந்த மாணவர்களே கல்வி கற்றனர். அதனால் அனைத்து மாணவர்களையும் நன்கு கவனித்து கல்வியுடன் பண்பாட்டையும் அவர்களுக்குக் ஆசிரியர்கள் நல்கினர். இன்றைய நிலையில் ஆசிரியர் ஆசிரியர் மாணவர் அளவு விகிதம் அதிகம். இன்று ஒரு வகுப்பில் குறைந்தது அறுபது அல்லது ஐம்பது மாணவர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு சூழல்களில் இருந்து வருவதால் வல்வேறுபட்ட மனறிலைகளில் உள்ளனர். ஆசிரியரும்அனைவரையும் நன்கு கவனிக்க இயலாமல் பேய்விடுகிறசூழ்நிலை ஏற்படுகிறது. மாணவர்களுக்கு உரிய காலத்தில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கின்றது. அதனால்இருவா¢டையேயும் நல்லுறவு ஏற்படாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் ஆசிரியர்-மாணவர் விகிதம் சா¢யான அளவில் இருத்தல் வேண்டும். அவ்வாறிருந்தால் ஆசிரியா¢டம் மாணவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகா¢த்து உறவும் மேம்படும்.

8.பள்ளியுடன் இணைந்த விடுதி:

மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் உயறவுமேலோங்கிக் காணப்படும். ஏனெனில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் தங்கி இருக்கும் காலஅளவு கூடுதலாக உள்ளது எனலாம். மாவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களை நல்வழியில் செலுத்த ஆசிரியர்களால் முடிகிறது.

9,மேம்பட்ட கற்பித்தல் திறம்:

நாள்தோறும் புதிய செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் விரும்புவர். தாம் உணர்ந்ததை மாணவருக்கும் கற்பிக்கும் கற்பித்தல் திறமுடையவராக ஆசிரியர்கள் விளங்குதல் வேண்டும். இவ்வாறான மேம்பட்ட கற்பித்தல் திறம் ஆசிரியர் மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் ஆசிரியர் மாணவர்களிடையே சாதி, மத, இன, மொழி வேறுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்துதல் வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் உறவு:

மாணவர்களிடத்தில் நற்பண்புகள் மேலோங்க பெற்றோர்- ஆசிரியா¢டையேயும் நல்ல உறவுவேண்டும். இவர்களின் நல்லுறவு மாணவர் கல்விச் சூழ்நிலைச் சீர்கேடுகளை அகற்றும் அருமருந்தாக அமைகிறது. மேலும் ஆசிரியர், மாணவா¢டையே உள்ள அந்நியத்தன்மை போக்க உதவுகிறது. பெற்றோர்-ஆசிரியர் நல்லுறவு ஆசிரியர்-மாணவர் உறவை மேம்பட வைக்கிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் காரணிகள் எவையென இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, அவற்றுள் சில:

1, ஆதாரக் கல்வி மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.

2, மாணர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் உறவு மேலோங்கி உள்ளது.

3, எல்லோராலும் விரும்பப்படும் ஆசிரியர்களால்மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த முடிகிறது.

4,ஆசிரியர் மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு சிறந்து விளங்குகிறது.

5, ஆசிரியா¢ன் மேம்பட்ட கற்பித்தல் திறம் மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது. எதிர்காலத்தில் பரபரப்பான இயந்திரச் சூழலில் பெற்றோர் கவனத்தைக் குழந்தைகள் இழப்பார்கள். சமயச் சான்றோர் பார்வையையும் இழப்பார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களை வேறுபாதையில் அழைத்துச் செல்வதற்கு முனைப்போடு செயல்படுவார்கள்.இதன் பின்புலத்தில் ஆசிரியர் ஒருவரே இருப்பார். அவரே அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிஞர் க.ப.அறவாணன் கூறுவது சிந்திக்கத்தக்கது.

பெற்றோரும் குழந்தைகளும்:

ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிரியர்கள் பெற்றோர்களே ஆவர். பெற்றோர்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். இன்றையச் சூழலில் பெற்றோர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.அடிப்படைப்பண்புகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் பண்பாளர்களாக உருவாக முடியும்.

இன்றைய நிலையில் தரைப்படங்கள் குழந்தைகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழியில் வாழப் பழக்குதல் அவசியம். அப்போதுதான் எதிர்கால இந்தியா வளமானதாக நலமானதாக அமையும்.

குடும்பச்சூழல்:குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்வதோடு அவர்களை அன்புடன் நடத்தவும் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் குழந்தைகள் முன்னர் சண்டையிடுதல் கூடாது. அவ்வாறு சண்டையிட்டால் பெற்றோர் குழந்தைகளிடையே நல்லுறவு ஏற்படாது பகைவளரும். தங்களின் குறைகளைக் குழந்தைகள் முன்பு கூறுதல் கூடாது. அப்போதுதான்குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் குறித்த நன்மதிப்பு ஏற்படும்.

அன்பு காட்டல்:

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் முழுமையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றன. அன்பும் பாசமும் கிடைக்கப்பெறாத நிலையில் தவறான வழிக்குச் செல்கின்றனர். நல்ல அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்படும் குதுந்தைகள் நல்ல பண்பாளர்களாக உருவாகின்றனர். அது கிடைக்கப்பெறாத நிலையில் குழந்தைகள் முரட்டுத்தனமாக மாறும் நிலை ஏற்படுகிறது. தங்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும் பெற்றோரையே குழந்தைகள் விரும்பும். இதனால் பெற்றோர்- குழந்தைகள் உறவு மேம்பாடடையும்.

குழந்தைகளைத் தனித்துச் செயல்படவிடுதல்:

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் தொ¢யாது என்று எண்ணிவிடக் கூடாது. தற்காலத்தில் குழந்தைகள் மிகவும் அறிவுக் கூர்மைஉடையவர்களாக விளங்குகின்றனர். குழந்தைகள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகின்றனர். குழந்தைகளைத் தனித்துச் செயல்பட விடுதல்வேண்டும். அவர்களுக்குப் பெற்றோர்கள் நல்ல அறிவுரைகளை வேண்டுமானால் வழங்கலாம். அதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லுறவு ஏற்படுவதோடு குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையும் ஏற்படும். குழந்தைகளின் வேலைகளை அவர்களே செய்யப்பழக்கப்படுத்த வேண்டும்.அவர்களே சிறந்த பெற்றோர் ஆவர்.

பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தைத் திணித்தல் கூடாது:

குழந்தைகள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் விரும்பியதை பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தல் வேண்டும். குழந்தைகளிடம் அன்பு காட்டி நிறையச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுதல் கூடாது. மேலும் தாங்கள் விரும்பியதைக் குழந்தைகள் செய்யவேண்டும் எனத் தங்களின் ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்களைக் கட்டாயப்படுத்துவதும் கூடாது. குழந்தைகள் விருப்பத்திற்கு உடை உள்ளிட்டவற்றை வாங்க பெற்றோர்கள் அவர்களுக்கு உதவிடல் வேண்டும். அவ்வாறு செய்வதால் பெற்றோர்-குழந்தை உறவு நன்கு வலுப்பெறும். மேலும் கல்விகற்கும் விருப்பத்தில் அவர்கள் விரும்பியதையே தேர்வு செய்திட அனுமதித்தல் வேண்டும். இதைத்தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து குழந்தைகளை வற்வுறுத்துவதால் மாணவப் பருவம் குழந்தைகளுக்கு வேதனை நிறைந்ததாக மாறுகிறது என்று உளவியில் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தைகள் தங்களின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றும் பெற்றோரையே மிகவும் நேசிக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் தோழனாக இருத்தல் வேண்டும்.

பெற்றோர்கள் நல்ல ஆலோசகர்களாக இருத்தல் வேண்டும்:

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆணையிடுபவராக இருத்தல் கூடாது. மாறாக அன்பு, பாசம் காட்டிப் பழகுதல் வேண்டும்.அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத்தேர்வுசெய்வதற்கு நல்ல ஆலோசகராகப் பேற்றோர்கள்இருக்கவேண்டும், நல்ல ஆலோசகராக இருந்து வாழக்கைப் பாடத்தைப்பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கோடுக்கவேண்டும். அப்போது பெற்றோர்-குழந்தைகளிடையே உறவு மேம்படும்.

நல்ல சூழலை உருவாக்குதல்

சூழ்நிலையே மனிதனை உருவாக்குகிறது. “குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளப்பினிலே” என்பர். நல்ல சூழல்கள் நற்குணங்களமையப் பெற்ற நல்ல பண்பாளர்களை உருவாக்குகிறது என்கிறார் அறிஞர் எமர்சன். நல்ல சூழலில்வளரும் குழந்தைகள்தான் நாட்¦ற்கும் வீட்டிற்கும் பெருமை தேடித்தரும். அதனால் குழந்தைகள் நல்ல முறையில் வளர பெற்றோர்கள் நற்சூழலை உருவாக்கிகக் கொடுக்க வேண்டும். அத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் இறுதிவரை தமது பெற்றோருடன் நல்லுறவு கொண்டு வாழ்வர்.

சந்தேகித்தல் கூடாது

சந்தேகம் வாழ்வின் சந்தோஷத்தைக் கெடுக்கும் என்பர். குழந்தைகளின் செயல்களைச் சந்தேகத்துடன் பார்த்தல் கூடாது. அவ்வாறு செய்ளூம் பெற்றோரைக் குழந்தைகள் வெறுத்து ஒதுக்கும். குழந்தைகளின் மீது முழுநம்பிக்கை வைத்து அவர்களின் செயல்பாடுகளுக்குப் பெற்றோர்கள் அறிவுரைகளைக் கூறி உதவியாக இருத்தல்வேண்டும்.

பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்

குழந்தைகளுக்கு ஒன்றும் தொ¢யாது என்று இன்றைய சூழலில் பெற்றோர்க பல் நி¨ன்கின்றனர். மேலும் பெறுப்பாக நடந்து கொள்ளத்தொ¢யாது என்றும் அவர்கள் எதனையும் செம்மையாகச் செய்யமாட்டார்கள் என்றும் கருதுகின்றனர்.அ·து தவறாகும்.குழந்தைகளுக்குச் சிறிய சிறிய பொறுப்புக்களைக் கொடுத்தல் வேண்மு, அவ்வாறு கொடுத்தால்தான் குழந்தைகளுக்கு எந்தச் செயலை ¦ப்படிச் செய்தால் நலம் பயக்கும். என்றறிந்து கொள்வர். பெறுப்புக்கள் அளிக்கும் ¦ப்றறோர்கள் குழந்தைகளின் மனதில் உயர்ந்து நிற்பர். எதிர்காலத்தில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காத றந்குடிமகனாகவும் உயர்வர். குழந்தைகளுடனான பெற்றோரின் உறவும் வெள்ளத்தனைய உயரும்.

மேலும் குடும்பப் பிரச்சனைகளைக் குழந்தைகளுக்குத் தொ¢யாமல் வளர்க்கக் கூடாது. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை ழுழந்தைகளிடம் பேசவேண்டும். இதனால் குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாக மாறுவதுடன் பெற்றோர்களின் இன்பதுன்பத்தில் பங்கேற்று இறுதிவரைப் பெற்றோருடனானஉறவைப் பேணுவர்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக் கூடாது

மற்ற குழந்தைகளோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது.

மற்ற குழந்தைகளுடன் பேற்றோர்கள் தங்கள் குழந்தையை ஒப்பிடக் கூடாது. அதுமட்டுமின்றி தங்களுடைய குழந்தையின் சகோதர சகோதா¢களுடனோகூட இவ்விதம் ஒப்பிட்டுப் பேசுதல் கூடாது. இது குழந்தைகள் மனதில் அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக போறாமை எண்ணத்தை உருவாக்கும். மேலும் குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மை வளர இடம் கொடுத்துவிடும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது போட்டி மனப்பான்மை ஏற்பட்டு குழந்தைகள் வளர்ந்தபின் பெற்றோரைத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆகவே தங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளை ஒப்பிடும் வடிக்கத்தைக் கைவிட்டு குழந்தைகளிடையே நல்லுறவை மேம்பாடடையச் செய்தல் வேண்டும்.

மாணவப்பருவத்தில் சா¢யான உறவு வேண்டும்

குழந்தைகளின்மீது பெற்றோர்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். எனினும், மாணவப் பருவத்தில் பெற்றோர் குழந்தைகள் உறவு வலுவுடையதாக அமைதல் வேண்டும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பது தவறு. அவர்களுக்கு ஒல்லும் வகையறிந்து உதவவேண்டும், இதனையே, “அவனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று புறநானூறும்,

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்”

என்று திருக்குறளும் நவில்கின்றன. மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா? அவர்களுடைய கல்வித்தரம் எவ்வாறு உள்ளது? என்பதையெல்லாம் கண்காணித்து அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவவேண்டும். மாணவப் பருவத்தில் தமது பெற்றோர்கள் தமக்கு உதவிய உதவிகளை மனதில் குழந்தைகள் வைத்திருக்கும். பெற்றோர்கள்மீது மா¢யாதை கொள்ளும். பெற்றோர்கள் தர்கள் குழந்தைகளிடம் மாணவப் பருவத்தில் சா¢யான உறவை அமைத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் வயதான காலத்தில் குழந்தைகள் பெற்றோரைப் புறக்கணிப்பர். பயத்தின் மூலமும் குழந்தைகளுடன் உறவினை ஏற்படுத்துதல் கூடாது. அது மகிழ்ச்சியற்ற வாழ்வை உருவாக்கும் என்பர் உளநல மருத்துவர் ருத்திரன்.

குழந்தைகளின் பிரச்சனைகளைக் கேட்டறிதல்

பள்ளியிலும், வெளியிலும் பல்வேறு வகையில் தாக்குறும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமாவது கூறவேண்டும் என நினைக்கும். குழந்தைகள் தமது பெற்றோரையே முதலில் அதற்குத் தேர்ந்தேடுக்கும். குழந்தைகள் தங்களுடைய பிரச்சைனைகளைக் கூறும்போது பெற்றோர் அக்கறையுடன் அதனைக் கேட்டு அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு உதவவேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகள் பெற்றோரை பலமடங்கு மதித்துப் போற்றுவர். இதற்கு மாறாக அவர்களது பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமலிருந்தால் குழந்தைகள் தவறானவர்களின் வழிகாட்டலுக்குச் சென்றுவிடுவர். பெற்றோருக்கும் மா¢யாதை தரமாட்டார்கள்,.அதனால் குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளைக் கூறும்போது காதுகொடுத்துக் கேட்கவேண்டும்.

குழந்தைகளைப் பாராட்டுதல் வேண்டும்

பாராட்டை விரும்பாதோர் உலகில்இல்லை எனலாம். ஒவ்வொருவரும் பாராட்டத் தொ¢ந்து வைத்திருக்க வேண்டும். இது மனித உறவை மேம்படுத்த உதவும் என்பர்அறிஞர்.குழந்தைகள் நல்லன செய்யும்போது அவர்களைப் பாராட்டுதல் வேண்டும். பாராட்டினால் குழந்தை கெட்டுவிடும் எனத் தவறாகச் சிலர் நினைக்கின்றனர். பாராட்டு செடிகளுக்கு விடும் நீரைப் போன்றது. குழந்தைகளைப் பாராட்டும் நேரத்தில் பாராட்டினால் அது அவர்களின் ஆற்றலைவளர்க்கும். குழந்தைகளும் தங்களது பெற்றோரை நன்கு மதிக்கும். உறவும் மேம்படும்

உளவியல் அறிஞர்களின் கருத்துக்கள்

குழந்தைகளை ஆராய்ந்து பெற்றோர்-குழந்தைகளின் உறவு மேம்பட சில காரணிகளை உளவியல் அறிஞர்கள் கூறுவதிலிருந்து சுட்டிக் காட்டலாம். அவ்விதம் நடப்பின் பெற்றோர்-குழந்தைகள் உறவு §ம்படுவதுடன் பயனுள்ளதாகவும் மாறும்.

1. குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து அவர்களைக் கண்காணித்தல் வேண்டும்,

2. குழந்தைக்கு உரியதை வாங்கிக் கொடுத்துவிட்டு அதனைச் சொல்லிக் காட்டக் கூடாது.

3, குழந்தைக்கு இடம், பொருள், காலம் அறிந்து செயல்பட எடுத்துச் சொல்லுதல் வேண்டும்,

4. சகோதர, சகோதா¢யைப் பாராட்டி குழந்தைகளைக் குறைகூறக் கூடாது.

5,பெற்றோர்கள் குழந்தைகளின் சிறிய தவறைப் பொ¢துபடுத்திப் பேசுதல் கூடாது.

6. சக்திக்கும் மீறி பெற்றோர்கள் எதையும் குழந்தைகளுக்குச் செய்தல் நலம் பயக்காது.

7. தாய், தந்தை மனவேற்றுமைகளைக் குழந்தைகள் முன் காட்டலாகாது.

8. பெற்றோர்கள் தம் உணர்வுகளைக் குழந்தைகள் மீது காட்டக் கூடாது.

9. குழந்தைகளிடம் பெற்றோர்கள் அன்பு, கண்டிப்பு, பாசம் காட்டிப் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு செய்தால் குழந்தைகள்-பெற்றோர்கள் இடையே உறவு மேம்படும். அது ஆக்கமானதாகவும் அமையும் உறவுகள் மேம்பட உயர்வுடன் சிந்திப்போம்.

Series Navigation