வசந்த மாளிகை

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

ஆ. மணவழகன்


மூன்று கால்;
மூவாயிரம் ஓட்டை;
ஓட்டைக்கு ஒரு நிலவு;
நிலவிற்கு ஒரு அருவி;
அருவிக்கு ஒரு குளம்;
மூலையில் ஒரு முருகன் படம்;
நாட்காட்டி மாட்ட,
நான்கு சுவரில் ஒன்றுகூட இல்லை;
வந்து பாருங்கள் இதுதான்
எங்கள் வசந்த மாளிகை!

ஆனால்,
எங்கள் கனவுகளோ
எதிர்கால இந்தியாவைப் பற்றி!

***

ஆ. மணவழகன்
e-mail : a_manavazhahan@hotmail.co

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்