ரோஸா லூசி பார்க்ஸ் (1913-2005)

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


அக்டோபர் மாதம் 30, 2005. அன்று அம்மையார் ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இயற்கை எய்தினார். தமிழர்களுக்குத் தெரிய வேண்டியவரா இவர் ? ஆம். காந்தியடிகளை எப்படிக் கொண்டாடுகின்றோமோ அப்படி அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மார்ட்டின் லூதர் கிங்கினைக் கொண்டாடுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பி அரசாங்கத்தின் செவிகளையும், புலன்களையும் தம் பால் திருப்பச் செய்தவர் மார்ட்டின் லூதர் கிங். எங்கெங்கிலும் காந்தி ரோடு, காந்தி மார்க்கெட், காந்தி நகர் என்று நாம் கொண்டாடுவதைப் போல மார்ட்டின் கிங் பார்க், கிங் ரோடு, கிங் பொலிவேர்ட் என்று அமெரிக்காவில் அனைத்து நகரங்களிலும் இருப்பது வழக்கம். ஆனால் ரோஸா பார்க்ஸ ?.

ஒரு வெள்ளையனுக்கு பேருந்தில் எழுந்து இடம் கொடுக்க மறுத்து, ஒரு சமுதாய மாறுதலுக்கு வித்திட்டவர் ரோஸா. 1913 ல் அலபாமாவில் பிறந்த அவர் பள்ளி படிப்பை அலபாமாவில் முடித்தார். கணவர் ரேமாண்ட் பார்க்ஸுடன் அனைத்து நிறத்து மக்களுக்கும் உண்டான மாண்ட்கோமரி முன்னேற்ற சங்கத்தில் துணைவருடன் செவ்வனே செக்ரடெரியாக பணி புரிந்தார். இளைஞர்களுக்குத் துணை புரிந்தார்.

டிசம்பர் 1, 1955. அன்று நகரப் பேருந்தில் பயண்ம் செய்து மற்ற நிறங்களுக்குண்டானஸ பயண சீட்டில் அமர்ந்திருந்தார். அன்று இந்தியர்களில் நகரங்களில் இருந்தால் அப்படித் தான் பயணித்திருக்க முடியும். வெள்ளையர் பயண இருக்கைகள் காலியாக இல்லாததால், இரு வெள்ளையனுக்கு இடத்தைத் தருமாறு ரோசாவுக்கு பேருந்து ஓட்டுனர் கட்டளையிட்டார். முடியாது என்று மறுத்ததால் போலீஸ வந்து கைது செய்தது. எதற்காக ? என்று போளிஸ்காரரிடம் கேட்ட போது ‘தவறு என்று நினைக்கின்றேன் ‘ என்று பதில் வந்தது. அப்போதையக் கால கட்டம் அப்படி. ரோசாவினைக் கைது செய்த நிகழ்ச்சி அனைவரையும் தட்டி எழுப்பி சுமார் 1 வருடத்திற்கு அனைத்து கறுப்பின மக்களும் பேருந்துக்களைப் புறக்கணிக்க, நகரில் நகராட்சியில் பணி புரிவோர் எண்ணிக்கை குறைந்தது. குப்பைகளை நகரில் அகற்றுவோரில்லை. வெள்ளைக்காரர்களின் வீடுகள் இருக்கும் இடங்கள் சுத்தமாக இல்லை. நகரமே வெகுண்டு நீதி மன்றங்களில் தடை மேலே தடையாக ரோசாவின் மீது விழ, சுப்ரீம் கோர்ட் வரைப் போராடி அவருக்கிழைத்தது தீமை ! என்று அனைத்து மக்களையும் உணர வைத்தார். அவர் தனக்கிழைக்கப்பட்டத் தீமையினைப் போராடிமையால் மார்ட்டின் கிங் துணை கொண்டு அனைத்து மக்களையும் தட்டி எழுப்பக் காரணமானார். அவர் தைரியத்தைக்கண்டு மற்றவரும் பின்பற்ற தீமைகளைத் தட்டிக் கேட்கும் சமுதாயம் உருவானது.

வாழ்க்கை ஆனால் அலபாமாவில் கடுமையாக, மிரட்டல்களால் அல்லல்களுக்கு ரோசா உண்டானார். பிறகு குடும்பத்துடன் வடக்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெட்ராய்ட் நகரில் மிச்சிகன் மாகாணத்தில் குடி பெயர்ந்தார். பிறகு 75 வயது வரை பல்வேறு நகரப் பதவிகளில் செவ்வனே பணி புரிந்தார். 1987 ல் இளைஞர்களுக்காக கல்வியளிக்கும் தொண்டு நிறுவனத்தினை நிறுவினார். அமைதிக்கும், சுதந்திரத்திற்கும் வழி தோன்றியாக வாழ்ந்து இவ்வருடம் அக்டோபர் மாதம் மறைந்தார். நவீன யுகத்தின் மனித உரிமைகளைக் காப்பாறிய அம்மாவாகக் கருதப்படுகின்றார்.

அமெரிக்க பிரெஸிடண்டின் சுதந்திர மெடல் 1996 அவருக்குக் கிட்டியது. அவர் இவ்வுலகத்தினை விட்டு மறைந்த போது அவர் நினைவாக அரசாங்கமே மவுன அஞ்சலி செலுத்தி உடலுக்கு அரசு மரியாதைகளுடன் மேலுலகம் அனுப்பி வைத்தது.

எனது சக நண்பியிடம் கேட்டேன். கண்ணில் நீர் தழும்ப எங்களை யார் என்று புரிய வைத்து, ஒன்று பட்ட அமெரிக்காவினை எழுப்பக் காரணமான catalyst அவரின் தைரியம், சுய மரியாதை ஆகியவை தங்களை எப்பவும் சொந்தக் காலில் அனைவருடன் ஒற்றூமையாக வாழ வைக்கும் என்றார். நம்மிடையே காந்தியின் தென் ஆப்ரிக்க ரயில் பயண நிகழ்ச்சி போன்று அலபாமா பஸ் நிகழ்ச்சியும் அமெரிக்காவின் இதயங்களில் எப்போது ஓடுகின்றது என்பதைப் புரிந்து கொண்டேன்.

தமிழர்கள் எங்கிருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டியது ரோசாவின் தைரியம். நெஞ்சை நிமிர்த்தி தன்னிலை தாழ்த்தாமல் மற்றவரையும் இகழாமல், பணியாமல் ஒற்றுமையுடன் சிநேகத்துடன், வாழ்நாள் முழுவதும் அவரைப் போலச் சுதந்திரமாக வாழ வேண்டும். கண்ணதாசன் பாட்டில் ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ! ‘ என்று தமிழர்களுக்குக் கூறியதை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காண்பித்தவர் ரோசா அம்மையார்.

தமிழில் தொகுப்பு: வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

kksash@aol.com

பின்குறிப்பு

ரோசாவின் பிரபலமான சொற்களும், அவரின் சிலப் புகைப்படங்களும் !

Series Navigation