மொரீஷியஸ் பலாப்பழக்கறி

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue


தேவையான பொருட்கள்

அரைக்கிலோ பன்றிக்கறி

1 கிலோ பலாப்பழம் உரிக்காதது (அல்லது அரைக்கிலோ பலாப்பழங்கள் உரித்தது)

1 நடுத்தர வெங்காயம் தூளாக வெட்டியது

1 தேக்கரண்டி நசுக்கிய பூண்டு

1 தேக்கரண்டி நசுக்கிய இஞ்சி

1 மேஜைக்கரண்டி தைம் இலைகள்

2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி

3-5 பிரியாணி இலைகள்

3 மேஜைக்கரண்டி எண்ணெய்

250 கிராம் நன்றாக நறுக்கிய தக்காளி

4 மேஜைக்கரண்டி கரம் மசாலா (அல்லது மெட்ராஸ் கறி பவுடர்)

செய்முறை

1. பன்றிக்கறியை ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

2. பொரு பெரிய கத்தியின் இருபுறமும் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்

3. பலாப்பழத்தை இரண்டாக வெட்டுங்கள். அதனை மீண்டும் இரண்டாக வெட்டுங்கள். இப்போது பலாப்பழங்களை பிரித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள். இந்த பலாப்பழங்களை 1 இஞ்ச் துண்டுகளாக வெட்டிகொள்ளுங்கள். இந்த துண்டுகளை குளிர்ந்த நீரில் போட்டு வையுங்கள். இல்லையேல் பழுப்பு நிறம் வந்துவிடும்

4. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி ஊற்றி சூடாக்கவும். இதில் பன்றிக்கறி துண்டங்களைப் போட்டு நன்றாக பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.

5. இத்துடன் இஞ்சிப்பூண்டு, தைம் இலைகள், வெட்டிய வெங்காயம், 250 கிராம் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும்

6. தக்காளி நன்றாக வெந்து பன்றிக்கறியுடன் நன்றாக கலக்குவரை வேகவிடவும்.

7. அதிகமாக வேகவிட்டுவிடாமல் அவ்வப்போது சூடான தண்ணீர் ஊற்றி கறுக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

8. இப்போது பலாப்பழ துண்டுகளைச் சேர்க்கவும். இத்துடன் கறிபவுடரை சேர்க்கவும். 1 மேஜைக்கரண்டி கொத்துமல்லி, பிரியாணி இலைகள், ஒரு கோப்பை தண்ணீர் கலந்து பலாப்பழ துண்டுகள் நன்றாக வேகும் வரைக்கும் வதக்கவும். பலாப்பழம் வேகாமல் இருந்தால் சிறிதளவு சுடுநீர் ஊற்றி இன்னும் வேகவிடலாம்.

9. நன்றாக வெந்ததும், தனியே எடுத்து அதன் மீது கொத்துமல்லி இலைகளைத் தூவி சாதத்துடன் பறிமாறலாம்.

Series Navigation