மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

தமிழ் நெஞ்சன்.


இப்போது மும்பையில் மீண்டும் மராத்திய இனவாதம் தலையெடுத்துள்ளது.மும்பை நகரம் உட்பட மாநிலமெங்கும் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கட்டாயம் மராத்தி இடம் பெற வேண்டும் ; அதுவும் பெரிய எழுத்தில் இருக்க வேண்¢டும் ‘ என ராஜ் தாக்கரே விதித்த கெடு அதன் விளைவுகளில் ஒன்று. மும்பை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்திய மக்களின் நலன் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் நிலை அவசர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப்போராடும் நோயாளியின் நிலையை ஒத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ‘மராத்தி பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் வேண்டும்; அந்த மாநிலத்தின் தலை நகரமாக மும்பை இருக்க வேண்டும் ‘ என்று ‘ சம்யுக்த்த மகாராஷ்டிர சமித்தி ‘ போராடியது. போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் நூறுக்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்று கலவரத்தை அடக்க அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசு முயன்றது. ஆனால் போராட்டம் அடங்கவில்லை. கடைசியாக மராத்தி பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் தராவிட்டால் இந்தியாவே சிதறுண்டு போகும் என்று உணர்ந்து அரசு ஒப்புக்கொண்டது.
இத்தகைய போராட்டத்தின் மூலம் பெற்ற மும்பையில் இன்று மராத்தி மொழியைக்கேட்பது சொற்பம். வட இந்தியர்களின் அளவு கடந்த குடியேற்றத்தினாலும் ஆதிக்கத்தினாலும் எல்லாம் இந்தி மயம் ஆனது.. மராத்தியர்கள் சிறுபான்மையினர் ஆனார்கள்¢. மேலும் வட இந்தியர்கள் மாநிலத்தின் உட்பகுதிகளிலும் குடியேறத்தொடங்கியதால் புனே, நாசிக், சத்தாரா, நாக்பூர் ஆகிய உள்நகரங்களுக்கும் இந்தி மயம் பரவியது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசினால் பொது இடங்களில் இளக்காரமாகப்பார்க்கப்படக்கூடிய நிலைமை உருவானது. மராத்திய மக்களின் இளைய தலைமுறையினர் மராத்தியில் பேசுவதைத்தவிர்த்து இந்தி பேசுவதை ஸ்டைலாக நினைக்கத்தொடங்கினர்.மராத்தி மீடிய பள்ளிக்கூடங்கள், மராத்தி நூலகங்கள் ஆகியன படிப்படியாக மூடப்பட்டு வந்தன.இந்தி சினிமாவின் ஆதிக்கத்தால் மராத்திய சினிமா அழிவின் விளிம்புக்கே போய்விட்டது. ரயில்வே உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்பு, வணிகம் ஆகியவற்றில்¢ மராத்தியர்களின் பங்கு மிகவும் குறைந்து போனது.

இந்த இடத்தில் இந்திக்காரர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இந்தி பேசும் வட இந்தியர்களுக்கு சில சிறப்பு குணங்கள் உண்டு. அவர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள நாட்டை தங்கள் அப்பன் வீட்டுச்சொத்தாக நினைத்துக்கொள்கிறவர்கள். தாங்கள் எங்கு வேண்டுமானாலும் போய்க்குடியேறலாம். அரசியல் சட்டமே அனுமதி கொடுத்து விட்டது. யாரையும் எதையும் மதிக்கத்தேவையில்லை. இந்தி ‘ராஷ்ட்ர பாஷா’¢. அதைக்கற்றுக்கொள்ளாதவர்கள்/ பேசாதவர்கள் தேச விரோதிகள். இத்தகைய தேச விரோதிகள் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் போன்ற சிந்தனைகளுக்கு அவர்களிடம் பஞ்சம் இல்லை. இவர்களுடைய அரசியல்வாதிகளோ மற்ற இந்திய அரசியல்வாதிகளை விட நூறு மடங்கு மோசமானவர்கள். இந்திக்காரர்கள் எங்கு போனாலும் ரயிலில் தான் போவார்கள். அதுவும் பயணச்சீட்டு எடுக்காமல் தான் போவார்கள். மெத்தப்படித்த இந்திக்காரனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் குடியேறுகிற இடத்தில் கொஞ்ச நஞ்சமுள்ள சட்டம் ஒழுங்கும் காணாமல் போய்விடும். கூடவே மிதமிஞ்சிய மதவெறியும் சாதி வெறியும் சுரண்டல் உணர்வும் எங்குமே அவர்களை சோடை போக வைக்காதவை. அவர்கள் இருந்து வருகின்ற பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சமூக வளர்ச்சி ஆகியவற்றில் நாட்டிலேயே மிகவும் பின்தங்கியவை. ஆனால் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருப்பதால் இந்தியாவின் மத்திய அரசு, தேசிய அரசியல், ராணுவம் , நீதித்துறை, பொருளாதாரம், அதிகார வர்க்கம், கல்வித்துறை, ஊடகங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவர்களாக/ கட்டுப்படுத்தும் சக்தி உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தி பேசாத மக்களுக்கு இது மிகப்பெரிய துரதி¢ர்ஷ்ட்டம். முன்னர் இந்த துரதி¢ர்ஷ்ட்டம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களின் தலையில் விடிந்தது. பின்னர் பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் தலையில் விடிந்தது. இப்போது மராத்தியர்களின் தலையில் விடிய ஆரம்பித்துள்ளது.எதிர்காலத்தில் நம் தமிழ் பேசும் மக்களின் தலையிலும் விடியலாம்¢¢. சென்னை, புதுவை, கோவை ஆகிய நகரங்கள் மும்பையின் திசையில் தான் போகின்றன. இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் தொகைப்பெருக்கம் ஓரளவுக்கு கட்டுப்படத்தொடங்கியுள்ளது. ஆனால் இந்தி மாநிலங்களின் நிலைமை நேரெதிரானது. இதுவரை உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோரும் பிகாரிலிருந்து அரைக்கோடிக்கும் மேற்பட்டோரும் வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறியுள்ளனர். இவர்களில் யாரும் மற்ற மாநிலங்களை காப்பாற்றுவதற்காக போகவில்லை. எதிர்காலத்தில் இந்த வெளியேற்றம் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் இந்திக்காரர்களின் ஆதிக்கம் இப்போது இருப்பதை விட அதிகரித்து மற்ற மக்கள் பாதிப்பு அடையக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

பெங்களூரு நகரம் தமிழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஓசூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டால் நாற்பத்தைந்து நிமிடங்களில் மெஜஸ்டிக் சர்க்கிள் பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் தமிழர்கள் தான் பெரும்பான்மையினர்.ஆனால் இன்றைக்கு பெங்களூரில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் இந்தி பேசாத மக்களுக்கு இருக்கும் உரிமைகள் இவ்வளவு தான்.
ஆனால் இந்திக்காரர்களின் நிலைமையே வேறு. கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த அளவு கடந்த முறையற்ற குடியேற்றத்தினால் மும்பையில் இந்திக்காரர்கள் பெரும்பான்மையினர் ஆயினர். இட நெருக்கடியும் தூய்மையின்மையும் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் பெரிதானது. மும்பையில் இருக்கும் சமூக விரோதிகளில் என்பது சதம் பேர் இந்தி பேசும் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசைகளைப்போடுவது. லஞ்சம் கொடுத்து லைசென்ஸ் வாங்கியோ அல்லது சட்ட விரோதமாகவோ ஒரு தொழிலைத்தொடங்குவது. முறையாக லைசென்ஸ் பெற்று வரி, வாடகை ஆகியவற்றை ஒழுங்காகச்செலுத்தி ஒழுங்காக தொழில் செய்யும் மராத்தியர்களுக்குப்போட்டியாக குறைந்த லாபம் வைத்து தொழில் நடத்துவது, சம்பாதித்த பணத்தில் பாதியை சிவப்பு விளக்குப்பகுதியில் சூறையாடிவிட்டு மீதியை உத்தரப்பிரதேசத்துக்கோ பிகாருக்கோ அனுப்பி வைப்பது. ஏதாவது பிரச்சினை என்றால் மும்பையில் இருக்கும் இந்தி அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொள்வது. இது தான் இந்திக்காரர்களின் ‘ தொழில் திறமை’.
மராத்தியர்களிடம் இல்லாத ‘ தொழில் திறமை’. இவையல்லாமல் மராத்திக்காரர்களின் கோபத்தைக்கிளறிய இன்னும் சில பிரச்சினைகள் உண்டு.மும்பையில் குஜராத்திகளாலும் மார்வாடிகளாலும் நடத்தப்படும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் (பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள் இவர்கள் வசம் தான் உள்ளன) அசைவம் சாப்பிடுவோர் குடிபுக அனுமதி இல்லை என்ற பெயரில் மராத்திகளுக்கு இடம் மறுக்கப்பட்டு வந்தது.தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்காகவே இருக்கும்¢ இந்தி சினிமா மராத்திக்காரர்களை கீழ்நிலைப்பணியாளர்களாகவும் மராத்தி மொழியை அத்தகையவர்களின் மொழியாகவும் தொடர்ந்து சித்தரித்து வந்தது (ஓரிரண்டு படங்களில் தமிழர்களும் அப்படி சித்தரிக்கப்பட்டுள்ளனர்). அப்புறம் இந்த ‘ சத் பூஜா’. ‘சத் பூஜா’ பிகாரிலும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் விழாவாகும். மும்பையில் மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் விழாக்களைக்கொண்டாடுவதைப்போல் அல்லாமல் ‘சத் பூஜா’ கொண்டாட்டத்தை இந்திக்காரர்கள் ‘ அரசியல் பவர் ‘ காண்பிப்பதற்கு பயன்படுத்தினார்கள். தங்கள் ஊர் அரசியலையும் அரசியல்வாதிகளையும் உள்ளே கொண்டு வந்தார்கள். இவை யாவும் மராத்திக்காரர்களின் இன, மாநில மற்றும் மொழி உணர்வினை வெகுவாகச்சீண்டி விட்டது. இந்த உணர்வினை ராஜ் தாக்கரே தன் அரசியல் வளர்ச்சிக்கு சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்கிறார்.

இப்போது மும்பையில் மக்கள் தொகையில் இந்திக்காரர்களே அதிகம். மராத்தியர்கள் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு.மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திக்காரர்களின் விகிதம் நாற்பது சதத்துக்கும் மேல் என்று கணிக்கப்படுகிறது. பிரச்சினை வெடித்ததற்கு ஒரே ஒருவர் காரணமாக அமைந்தார். அவர் ராஜ் ஹன்ச் சிங். மும்பை மாநகராட்சி உறுப்பினர். இவரது நோக்கம் மும்பை மாநகராட்சியில் ஆட்சி மொழியாக இருக்கும் மராத்திக்கு சமமாக இந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து பெறுவது. பிறகு மகாராஷ்டிராவில் மாநில ஆட்சி மொழியாக இந்தியை ஆக்குவது. படிப்படியாக எல்லா மாநிலங்களிலும் இந்திக்கு மாநில ஆட்சி மொழி அந்தஸ்து பெறுவது. 2030ல் சென்னை மாநகராட்சியிலும் தமிழகத்திலும் தமிழுக்குச்சமமாக இந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கிடைக்க வைப்பது. இவர் மும்பை மாநகராட்சியில் ஒரு பிரேரனையை கொண்டு வந்தார். உடனே பிரச்சினை வெளிப்படையாக வெடித்தது.

மகாராஷ்டிராவில் இந்திக்காரர்களின் ஆதிக்கம் பெருகியதற்கு உள்ள காரணங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று இந்தி சினிமா உலகின் தலைமையகமாக மும்பை நகரம் இருப்பது. இரண்டு இந்தி மொழியை எழுதப்பயன்படுத்தப்படும் தேவநாகரி எழுத்து முறையே மராத்திய மொழிக்கும் எழுத்து முறையாக இருப்பது.இதனால் இந்திக்காரர்களுக்கு மராத்தி தெரியாவிட்டாலும் மராத்திக்காரர்களுக்கு இந்தி தெரியும். இது இந்திக்காரர்களுக்கு வசதியாகிவிட்டது.
1960 களில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு எதிராக பால் தாக்கரே போராட்டம் நடத்தினார். அவரது சிவசேனைக்கட்சியினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு இட்லிக்கடைகளை கூட அடித்து நொறுக்கினார்கள். அரசு வேலை வாய்ப்பு, வணிகம் ஆகியவற்றில் தென்னிந்தியர்கள் மராத்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி இந்தக்கலவரம் நடந்தது. ஆனால் இப்போது இந்திக்காரர்களை பகைத்துக்கொண்டால் தேர்தலிலும் அரசியலிலும் லாடம் கட்டி விடுவார்கள் என்பதால் பால் தாக்கரே முதலில் வாய் திறக்கவில்லை. அவர்களை அனுசரித்துப்போய் ஓட்டு வாங்க எண்ணினார்.உத்தரப்பிரதேசம் உருவான நாளை வட இந்தியர்கள் மும்பையில் கொண்டாடுவதற்கு கூட ஆதரவு தந்தார். இப்போது அவருக்கும் வழியில்லாமல் போய்விட்டது. மராத்தியர்களின் ஆதரவை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் அவரது கட்சி இறங்கியுள்ளது.

இந்தப்பிரச்சினையில் அவ்வப்போது தமிழகமும் சீண்டப்படுகிறது. ” சென்னையிலே போய் இந்தியில் பேசினால் விட்டு விடுவார்களா? தமிழகத்திலே போய் இந்தியைப்பரப்பு, தமிழர்களை முதலில் இந்தி படிக்கச்சொல், தமிழகத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இந்தியை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்,
தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்பட்டதற்கு சென்னையிலே போய் ‘சத் பூஜா’ கொண்டாடி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது தானே? ” போன்ற கருத்துக்கள் அனைத்திந்திய அளவில் தமிழர்கள் மீது வெறுப்பை வளர்க்கும் வகையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு எந்த தமிழக அரசியல்வாதியும் வாய் திறந்து பதில் சொன்னதாக காணோம். இவர்கள் வாய் திறப்பதிலிருந்து யார் தடுத்தது என்று தெரியவில்லை.இந்தியாவின் தென்கோடியில் உள்ளது தமிழகம். மொழி, பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றில் மராத்தியர்களை விடவும் தமிழர்கள் இந்திக்காரர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். உண்ணும் உணவில் கூட வெளிப்படையான வேறுபாடு உண்டு. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதிகம் அடி வாங்கியவர்கள் தமிழர்களே. இலங்கையில் குறைந்தது எண்ணூறு ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஈழத்தமிழர்கள் இன்று அடி வாங்கிக்கொண்டு உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையில் இருந்து அடித்து துரத்திய சிவ சேனைக்கு இன்று தமிழகத்தில் கிளைகள் உண்டு. மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் சிவ சேனையின் வலுவான தளங்களாக உள்ளன.எல்லாவற்றுக்கும் மேல் தமிழர்கள் மும்பையில் விழா கொண்டாடும் போது அரசியல் செய்ய எந்த தமிழக அரசியல்வாதியையும் அழைப்பதில்லை.


tamilnenjam2008@gmail.com

Series Navigation

author

தமிழ் நெஞ்சன்.

தமிழ் நெஞ்சன்.

Similar Posts