முப்பெருவெளியின் சங்கமம்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

த. ஆரோக்கிய சேவியர்


என் அலுவலக கண்ணாடிச் சுவர்கள் வழியே
பரந்து விரிந்து இருக்கும்
சமுத்திரத்தைப் பார்க்கிறேன்

பொதி சுமந்த கழுதைகள் போல
கப்பல்கள் அணிவகுத்து
காத்துக்கிடக்கின்றன
சுமை நீக்கி சுமை ஏற்ற

நீரில் கோடுகள் வரைந்து
விரைந்து செல்கின்றன
மின்விசைப் படகுகள்
தனித் தனித் தீவுகளாய்
மிதக்கும் கப்பலில் இருந்து
கனகச்சிதமாய் கடத்துகிறது
கரை வர விரும்புவர்களை

விண்ணையும் கடலையும்
ஒன்றினைக்கும் மழை
மெல்லக் கரை நோக்கி
நகர நகர ஒவ்வொரு
கப்பலும் மாயமாய் மறையும்

முப்பெருவெளியின் சங்கமமே
நீ இவ்வுலகிற்கு உணர்த்தும்
செய்திகள் ஏராளம்

தினம் தினம் என்
வார்த்தைகளை உன்னில்
தான் நான் தேடுகிறேன்


saxsun@gmail.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்