முன்னோடி

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

ஜோதிர்லதா கிரிஜா


காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம்
கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்:
மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட
காளிக்கே எமது பாராட்டாம்!

பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட பெருந்தீங்கை
என்றைக்கோ தொடங்கிவைத்த பரமசிவன்தான்
இன்றைக்கும் இருந்து வரும் ஆணாதிக்க முன்னோடி! – இவர் காளியை
வென்றதாய் ஆகாது சிறப்பாய் ஆட்டமாடி!
————————————————-
jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா