முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue


ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது.

இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அது ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே. அவர் 430 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார்.

இந்த இருவருமே உலகத்தின் எந்த தலைசிறந்த பேட்ஸ்மேன்களிடமும் பயத்தை உருவாக்க வல்லவர்கள்.

வார்னே 430 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், முரளிதரன் அவருக்கு மூன்று வருடங்கள் இளையவராக இருக்கும்போதே 400 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருப்பது, வெகு விரைவில் வார்னேயை தாண்டிச்சென்று விடுவார் என்று நம்ப இடமளித்திருக்கிறது.

29 வயதாகும் முரளிதரன், ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதற்குள் 600 விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது.

கோர்ட்னி வால்ஷ் அவர்களது 519 டெஸ்ட் விக்கெட்களே உலக ரெக்கார்டாக இருந்து வருகிறது. இதுவும் நிச்சயமாக முரளிக்கு எட்டக்கூடியதே. இதற்காகவே, கேப்டன் ஜெயசூர்யாவும் முரளிதரனை அதிக அளவு ஓவர்களை வீச அழைக்கிறார் போலும்.

இவரது டெஸ்ட் தகுதியே ஒருமுறை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது என்பதை இந்தச்சாதனைகள் மறக்கடிக்ககூடும்.

1995-96இல் முரளிதரனின் பந்து வீச்சு ‘பேய்த்தனமானது ‘ என்று ஆஸ்திரேலிய அம்பையர் டாரல் ஹேர் கூறி அந்தப்பந்தை நோ-பால் என்று கூறினார். 1999இல் ரணதுங்கா தலைமை தாங்கியபோது, அம்பையர் ராஸ், முரளிதரனின் பந்தை தூக்கிப்போடுவது என்று கூறினார்.

ஆனால், பல பரிசோதனைகள் செய்து பார்த்து, முரளிதரனின் பந்து வீச்சு அவரது வலது கையின் உள்ள ஊனத்தினால் தூக்கி எறிவது போலத்தோன்றுகிறது என்று கண்டறிந்தார்கள்.

‘பலர் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள். அதனால் என்னை விளையாட்டிலிருந்து வெளியேற்றிவிட முயல்கிறார்கள் ‘ என்று அவர் ஒரு முறை கூறினார்.

கண்டி டெஸ்டுக்கு முன்னர், ஒருமுறை ஒரு இன்னிங்க்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அது இலங்கை இங்கிலாந்தை தோற்கடித்த 1998 ஓவல் மைதானப்போட்டியின் போது.

அந்த மேட்சில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது தலைசிறந்த ஆட்டத்தை அப்போது காண்பித்தார்.

தையல்கடைக்காரரின் மகனான முரளிதரன், செயிண்ட் அந்தோணி கல்லூரியில் இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தர்.

14 ஆம் வயதுவரை மீடியம் பேஸ் பந்து வீசிவிட்டு, பள்ளிக்கூட கோச்சின் அறிவுரைப்படி ஸ்பின் செய்ய ஆரம்பித்தார்.

‘பேட்ஸ்மேன் கூட்டுக்குள் செல்லும்போது அவர்களது பாதுகாப்பை உடைக்க அது எனக்கு உதவுகிறது. அதே போல, அவர்கள் வெகு வெறியோடு விளையாடும்போது அவர்களை தவறுசெய்யவைக்கவும் தூண்டுவேன் ‘ என்கிறார்.

உண்மையிலேயே முரளிதரன் கிரிக்கெட்டின் மன விளையாட்டு வீரர்தான்.

Series Navigation