முதல் சினேகிதி

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

வசீகர் நாகராஜன்


என் அரிசியும் உன் பருப்பும்
கூட்டாஞ்சோறாய் பொங்கிட

பல்லாங்குழியும் பம்பரமும்
பண்டமாற்றாய் பரிமாறிட

தோட்டத்தில் பல் புதைத்து
முளைத்திடுமா என பந்தயமிட

விரல் குவித்து பின்சட்டை பிடித்து
வீடெங்கும் ரயில் சுற்றி வந்திட

எவருக்கும் தராத உன் பிரிய பொம்மை
என் வீட்டு கொலு அலங்கரித்திட

கனவில் கண்ட பேய்க் கதைகள்
கண்கள் அகல விரியப் பேசிட

கவலை மறக்க கதைகள் பேச
புன்னகை பூக்க பரிவாய் கேட்க

மீண்டும் நீ
வருவாயோடா தோழி ?

VNagarajan@us.imshealth.com
வசீகர் நாகராஜன்

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)