முட்டை சப்பாத்தி சுருள்

This entry is part [part not set] of 6 in the series 20000423_Issue

ஆர் சந்திரா


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : இரண்டு கோப்பை

முட்டை : நான்கு

கேரட் துருவல் : ஒரு கோப்பை

பச்சை மிளகாய் : இரண்டு

வெங்காயம் : ஒன்று

எலுமிச்சை பழம் : ஒரு பாதி

கொத்துமல்லித்தழை : சிறிது

உப்பு: சிறிது.

செய்முறை:

1. வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை மூன்றையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. இவற்றுடன் கேரட் துருவல், உப்புத் தூவல், எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து வைத்துக் கொள்ளவும்

3. கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து, சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.

4. சப்பாத்திகளை ஒவ்வொன்றாக தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் லேசாக வாட்டி எடுத்துக் கொள்ளவு.

5. ஒரு முட்டையை உடைத்து ஒரு கப்பில் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.

6. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி முட்டையை முழுவதும் ஊற்றவும். (அல்லது பாதி முட்டையும் ஊற்றலாம். ) அதன் மேல் சப்பாத்தியை வைத்து, மிருதுவாக அமுக்கவும். முட்டைபரவி சப்பாத்தியின் கீழ் பாக முழுதும் பரவி ஒட்டிக் கொள்ளும்.

7. சப்பாத்திய்ன் மேல் பாகத்தில் லேசாக எண்ணெயைத் தடவி, முட்டையுடன் சேர்த்து சப்பாத்தியைத் திருப்பிப் போடவும்.

8. இப்போது சப்பாத்தி பாகம், தோசைக்கல்லின் மீதும், முட்டை பாகம் மேலேயும் இருக்கும்.

9,. சப்பாத்தி லேசாகச் சிவந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். சப்பாத்தி பாகம் கீழும், முட்டை பாகம் மேலும் இருக்கும்படி வைக்கவும்.

10. உடனே காரட் துருவல் இரண்டு தேக்கரண்டி எடுத்து முட்டையின் மேல் பரப்பவும்.

11. சூடாகவே சப்பத்தியைச் சுருட்டவும். காகிதக் கைகுட்டையில் பாதி பாகம் சப்பாத்தி உள்ளே இருக்கும்படி வைத்துச் சுருட்டவும்.

பின் குறிப்பு : விருப்பமானால், கோழி மாமிசத்தை வேகவைத்து, உதிர்த்து கேரட் துருவலுடன் சேர்த்துக் கொள்ளலாம். சாப்பிடவும் எளிது. செய்யவும் எளிது.

(பின் பின் குறிப்பு : காகிதக் கைக்குட்டையைச் சாப்பிட வேண்டாம். அது வெறுமே கையில் பிடித்துக் கொள்ளத் தான்.)

Series Navigation