மீட்டும் இசை / மோட்சம் / மயக்கம்
Published March 22, 2007 • By
தாஜ்
தாஜ்
மீட்டும் இசை.
———————
உயிர்ப்பாய் துடித்தெழும்
கணமெல்லாம்
விழித்திரை விளிம்பில்
பட்ஷிகள் பட்டுப் படபடக்க
கபாலப் பொந்தில்
உருக்கொண்டு அதிரும்.
எந்த காட்டுக்குள்
கட்டுண்டாலும்
சிட்டுகளின் எச்சமேனும்
உச்சத்தில் தெறிக்க
தழைக்கும் ராக பிம்பம்
விட்டு விட்டு இழையும்
மின்னலாய் மேனி தழுவ
கவிழ படரும்.
*****
மோட்சம்.
————–
லோகப் பாசியில்
அடியெடுக்கும் தோறும்
வழுக்கல்தான்
சகஜத்திற்கு சர்க்கஸ் செய்தாலும்
விழுமிடம் கிளிகளாய் இருக்கு
முலைகொத்திப் பாம்பு
கண்களில் வளர
மோட்சமேது மேட்சம்.
****
மயக்கம்.
————-
அணைந்த ஒளியை
எண்ணி நொந்தப்படி
இருளில் தேடினேன்
வெற்றுக் கண்களுடன்
மண்ணும் பொன்னென
கற்களும் மிணுக்க
மரங்களும் மலையானது
வெள்ளை தேவதையென
ஒரு குட்டிச் சுவரோடு
ஒட்டிக்கிடக்க
உயிர்த்தது மின்சாரம்.
******
– தாஜ்..
satajdeen@gmail
www.tamilpukkal.blogspot.com