மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

வஹ்ஹாபி


மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …
வஹ்ஹாபி
கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் ‘அறிவு ஜீவிகள்………?!’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html) வெளியாகி இருந்தது. அதில்,
“இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்”
என்று கடிதம் எழுதிய ஹமீது ஜா· பர் என்பார் யாரைப் பற்றியோ குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார். ‘இஸ்லாம் என்றால் என்ன பொருள்?’ என்பதை அவராவது சொல்லித் தந்திருந்தால் அவரது கடிதம் முழுமை பெற்றிருக்கும்.
போகட்டும்.
“எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?”
என்ற கேள்வியை அவர் திண்ணையில் முன்வைத்திருக்கிறார். ‘சொன்னால் பிழையாகும்’ என்ற அய்யப்பாடோ ‘சுருட்டி மறைக்க’ வேண்டிய கட்டாயமோ எனக்கில்லாததால் அவருடைய கேள்விக்கு பதில் – மிக்குயர்ந்த டிக்’ஷனரியான அல்குர்ஆனிலிருந்து:
‘வ-ஹ-ப’ என்ற வேரடி வினையிலிருந்து பிறந்த சொல் ‘வஹ்ஹாப்’ என்பதாம். பார்க்க: 003:008, 006:0084, 014:038, 019:049, 019:050, 021:072, 021:090, 026:021, 029:027, 038:30, 038:043.
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]” 003:008.
“அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா?” 038:009.
“என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்.” 038:35.
[…] குறிகளுக்குள் உள்ளவை அரபுமொழி உச்சரிப்பாகும். இங்கு ‘வஹ்ஹாப்’ என்பவன் யார் என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.
இனி, ‘தெரியவில்லை’களில் பட்டியலிடப்பட வேண்டிய பெயர் எதுவென முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பு.

***

அடுத்து, ஓட்டைப் பானை எதுவெனெ இனங் கண்டு கொள்ளக் கூடிய இன்னொரு கூடுதல் பொறுப்பையும் திண்ணை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“சமாதிகள் தரைமட்டமாக்கப் படவேண்டும்” என்ற தன் தலைவரின் கட்டளைக்கானத் தாரகைச் சான்றுகளைத் திண்ணையில் வைத்து, (http://www.thinnai.com/?module=displaystory&story_id=806022413&format=html) எல்லாப் பானைகளிலும் ஒருவர் நீர் வார்க்கிறார் – ஓட்டைப் பானை உட்பட.
முக்கால்வாசி கருகிப் போன பின்னரும் தம் சமாதிக் காதலைக் கைவிட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.
தானாகப் புலம்பிக் கொண்டிருக்கட்டும்; ஆனால், புலம்பலுக்கு ஏன் “நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகள்” என்ற பொய்ப் பெயர்?
சிறியதென்று ஏமாறிப் போனேன். பானையின் ஓட்டை இவ்வளவு பெரிதா?
oOo
to.wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி