சக்கரியா
மலையாளமொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது.
மலையாளம் என்பது என்ன? மூன்றே கால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளீயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாக கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.
ஆனால், பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மலையாளம் இரண்டாவது மொழியாகவே இருக்கிறது. மழலையர் பள்ளியில் முதலில் கற்பிக்கும் அரிச்சுவடி மலையாளமல்ல; ஆங்கிலம் தான்.சரஸ்வதி பூஜைக் காலத்தில் குழந்தைகளை எழுத்தறிவிக்க உட்காரவைத்து ‘ஹரிஸ்ரீ’ என்று எழுதவைப்பது பத்திரிகைகளும் பிற நிறுவங்களும் நடத்தும் சூடான வியாபாரம். ஆனால் மறுநாள் அந்தக் குழந்தை ஏ.பி.சி.டி ஐ நோக்கியே திரும்புகிறது.
சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால் அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு
இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்கவேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.
அதே சமயம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே. சட்ட மன்ற விவாதங்களின் மொழி
மலையாளம். மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான் – சமஸ்கிருதத்திலோ அரபியிலோ
லத்தீனிலோ அல்ல. சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே. நாடகங்கள் மலையாளம். கதையும் கவிதையும் நாவலும் மலையாளம். அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.
ஆனால், பாலவாடி முதல் மலையாளையின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?
‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக் கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.
சராசர் மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில்,
வழியில்,கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க; தொலைக்காட்சி பார்க்க; புரோகிதனின் சொற்களைக் கேட்க
எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற
கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகிறது.
இந்த விஷயத்தில் மலையாளி திருப்தியடைந்தவனே. இவ்வளவு காரியங்களை நிறைவேற்றும் மலையாளத்தை அவன் இரண்டாவது
மொழியாகவேனும் படிக்க முடிகிறதே. பேச்சு மொழி பிறப்பிலேயே வாய்த்து விடுகிறது.
ஆனால், இதற்கு அடுத்த தளத்தில்தான் மலையாளி மலையாளத்தைப் பற்றிப் பரிதவிக்க நேரிடுகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி,
இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா – இவற்றை விட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.
அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்;
இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகலை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.
அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் புத்திஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை
நூற்றாண்டுக் கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும்
ஒரு அகதியாக்கி விட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள்,
புத்திஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.
சராசரி மலையாளி நோஞ்சான் ஆனான். அவன் அவர்களுடைய இரையும் அடிமையும் ஆனான். அவனுடைய மலையாளம் வெற்றுப் பை ஆனது. மலையாளம் அவனுடைய இதயத்தின் மொழியாக இருந்தது. ஆனால் வாழ்க்கையை உருவாக்க அவனுக்கு உதவாத மொழியாக ஆனது.
காரணம், கேரளத்துக்குள்ளே மலையாளிகளுக்கு விருப்பமான ஒரு பொருளாதார நிலை இல்லாமற் போயிற்று. அரசியலால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் தொழிற்சாலைகளையும் பொருளாதார முயற்சிகளையும் திட்டமிட்டுக் கவிழ்த்தன. விவசாயியை பூர்ஷ்வா என்று சித்தரித்து அவனை மண்ணைக் கவ்வச் செய்தன. உண்ணும் அர்சி முதல் பூஜைக்கான பூக்கள் வரை – அவ்வலவு எதற்கு? தென்னைகளின் நாடான கேரளத்திலுள்ள கயிறு தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நார் கூட – அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்க வேண்டிய நிலையை உருவாக்கின. அரசு ஊழியர்களின் முறைகேடுகள் பொதுச் சேவைத் துறைகளை அலங்கோலமாக்கின. அமைச்சர்கள், அதிகாரிகளின் கையாலாகாத்தனம் கேரளத்தை ஒரு ஆட்சியிலிருந்து இன்னொரு ஆட்சியை நோக்கிக் காற்றுப்போன பந்தைப்போல உதைத்து எறிந்திருக்கிறது.
மலையாளிக்கு கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது என்று புரிந்து விட்டது. மலையாளத்தால் தன்னுடைய
பிள்ளைகளுக்குப் பயனில்லை என்று புரிந்து விட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்து விட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்றும் புரிந்து விட்டது. மலையாளம் மூலம் பயனடந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் இடமில்லை என்பதும் புரிந்து விட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.
பெரும்பானமை மக்களுக்குச் சோறு போடும் மொழியாக இல்லாமற் போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறு போடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் மட்டுமே. ( இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகி விட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’
தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையை தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா
என்றும் எனக்குத் தெரியாது.
- குடும்பதின வாழ்த்துக்கள்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
- இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்
- ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்
- கோட்டாறு பஃறுளியாறான கதை
- நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)
- கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
- “கடைசி பேருந்து”
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்
- தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- National Folklore Support Centre
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..
- ‘உலக தாய்மொழி நாள்’
- பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்
- வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
- இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்
- FILMS ON PAINTERS
- எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்
- “பாலைவனத்தில் பூக்களைத் தேடி”
- செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்
- தீயாய் நீ!
- ஒரு நாள் உணவை…
- பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?
- யுவராசா பட்டம்
- “தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8
- சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்
- கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!
- லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு
- கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி
- வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
- மலையாளம் – ஓர் எச்சரிக்கை
- பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
- முடிவென்ன?
- புலம்பெயர்ந்த கனடா
- காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !
- ஒரு தாய் மக்கள் ?
- புலன்கள் துருத்தும் உணர்வுகள்
- பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்