மலரில் ஏனோ மாற்றம் ?

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

டி மோஹனலட்சுமி


மெளனமாய் பேசுகின்றேன்
கண்களால் சிரிக்கின்றேன்
கனவுகளுக்காய் உறங்குகிறேன்
கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன்

இரவும், நிலவும்
எனக்காய் மட்டுமே
வருவதாய் மயங்கிப் போகிறேன்..

கால்கள் பின்ன
நடக்கிறேன்,
ஒரே பெயரை
நா திகட்ட
உச்சரிக்கிறேன்..

பூக்களோடும், பறவைகளோடும்
மட்டுமே சினேகம்
கொள்ள பிரியம்
இப்போதெல்லாம்..

என் வீட்டு பூக்களை விட,
என் முகம் ஒளிர்வதாய்
சொல்லிச் செல்கிறாள்
என் உயிர்த் தோழி..

பார்ப்பவை அனைத்துமே
அழகாய்த் தோன்றுவதன்
அதிசயம் என்ன ?

எனக்குள் நிகழ்வது
ராசயன மாற்றம்,
சொல்கிறார்
அறிவியலாய் வாழ்வை நோக்கும்
அறிவாளி.

பருவ மாற்றம்,
மறுக்கிறார்
அனுபவத்தால் வான் அளக்கும்
அனுபவசாலிி.

பூவுக்குத் தெரியாதா,
தன்னுள் பூகம்பம்
மகரந்தம் கொண்டு வந்த
வண்டினால் என்று.

*********
MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation