மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue


ஹெச்-ஐ-வி எனப்படும் எய்ட்ஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் பிரயோசனம், எய்ட்ஸ் கிருமி வலுப்பெறுவதால், குறைந்து கொண்டே போகின்றது. ஆனால், மனிதர்களின் உடலில் இருக்கும் ஜீனே எய்ட்ஸ் நோய்க்கு மாற்றாக இருக்கும் என அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த கண்டுபிடிப்பு ஹெச்ஐவிக்கும் எய்ட்ஸ்க்கும் புதிய சிகித்சைகளுக்கு வழிகோலும் எனவும் இவர்கள் கருதுகிறார்கள்.

மனித உடலில் இருக்கும் ஒரு ஜீனான CEM15இன் செயல்பாடுகளில் குறுக்கிட, ஹெச்-ஐவி வைரஸ் கிருமி Vif என்ற ஒரு புரோட்டானை உருவாக்குகிறது.

ஆனால், இந்த புரோட்டான் ஹெச்ஐவி வைரஸிலிருந்து நீக்கப்பட்டுவிட்டால், மனித உடலில் இருக்கும் CEM15 ஜீன் வெற்றிகரமாக ஹெச்ஐவி வைரஸை தடுத்து நிறுத்திவிடுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

பென்ஸில்வேனியா பல்கலைக்கழகமும், லண்டனின் கிங்ஸ் காலேஜ் மருத்துவப்பிரிவுகளும் இணைந்து செய்த ஆராய்ச்சியில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஏற்கெனவே, அறிவியலறிஞர்களுக்கு Vif புரோட்டானே ஹெச்ஐவி வைரஸ் பல்கிப்பெருக முக்கிய காரணம் என தெரியும். ஆனால் இதற்கும் முன்பு வரை, அதன் சரியான வேலைப்பாடுகள் அறிந்து கொள்ளப்படாமல் இருந்தன.

இந்த ஆராய்ச்சியில் பணிபுரிந்த பேராசிரியர் மாலிம், ‘விஃப் என்ற புரோட்டானின் வேலையை தடுக்க முடிந்தால், மனித உடலில் இருக்கும் cem15 ஜீனை வெற்றிகரமாக வேலை செய்ய விட முடியும். அப்படி செய்ய முடிந்தால், ஹெச்ஐவி கிருமியை பரவவிடாமல் தடுக்க முடியும் ‘ என்று கூறுகிறார்.

ஹெச்ஐவி போன்ற ஒரு வைரஸ் ஒரு செல்லை தாக்கும் போது, அது அடிப்படையில் அந்த செல்லில் இருக்கும் அடிப்படை உயிர்வேதியியல் இயந்திரத்தை கைப்பற்றி, அதனை பல வைரஸ்களை உருவாக்கும் இயந்திரமாக ஆக்குகிறது.

இந்த வைரஸ்கள் பிறகு வெளியேறி இன்னும் பல செல்களைத் தாக்கி அவைகளையும் இது போல வைரஸ்களை உருவாக்கும் இயந்திரங்களாக ஆக்கி சுழற்சியை உருவாக்குகின்றன.

எதிர்கால ஆராய்ச்சி, இந்த வைரஸ் உருவாக்கும் விஃப் புரோட்டானை தடுக்கும் பொருட்களின் மீது தொடரும்.

இன்றைய ஹெச்ஐவி மருத்துவம், பல மருந்துகளின் கூட்டுக்கலவையாக, இந்த வைரஸின் பலவேறு வாழ்க்கை நிலைகளைத் தாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த மருந்துகள் இந்த வைரஸ் முழுவதுமாக உடலிலிருந்து மறைவதற்கு இட்டுச் செல்பவை அல்ல.

பாதிக்கும் மேற்ப்பட்ட வியாதியஸ்தர்களில் இது இந்த மருந்துகளை பிரயோசனமில்லாததாகவும் ஆக்கி விட்டன.

பேராசிரியர் மாலிம், தனது வேலை மூலம் இன்னும் 10 வருடங்களுக்குள் புதிய சிகித்சைகள் உருவாக்கப்படலாம் என்று கருதுகிறார்.

இந்த ஆராய்ச்சி நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது

Series Navigation

செய்தி

செய்தி