மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

ஞாநி


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

வணக்கம்.

முன்னரே நான் மஞ்சுளா நவநீதன் என்ர பெயரில் எழுதும் நபருக்கு பதில் எழுதி என் சக்தியை வீணடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன். எனினும் அந்த நபரின் விஷமம் முற்றுப் பெறுவதாக இல்லை.

அக்கினிபுத்திரனின் பேட்டி தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரைக் கடிதத்தில், காலச்சுவடுபோல தீம்தரிகிடவும் பிராமணர்களால் நடத்தப்ப் படும் பத்திரிகை என்றும் ஞாநி பிராமணன் என்ற பொருள்படும்படியும் எழுதியிருக்கிறார். நான் பிராமணன் அல்ல.சாதி, மதம் இரண்டையும் நிராகரித்துவிட்டு பகுத்தறிவு- மனித நேயம் அடிப்படையிலான தனி மற்றும் பொது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். எனவே என்னை எந்த சாதிக்காரனாகவும் சித்திரிப்பது விஷமத்தனமானது. அவதூறானது. இதற்காக மஞ்சுளா நவநீதன் உடனடியாக பகிரங்க மன்னிப்புகோராவிட்டால்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். இணைய தளத்தில் கருத்துக்களுக்கு இடம் தரலாமே அன்றி தனி மனிதர்கள்மீது விஷமத்தனமான அவதூறுகளுக்கு இடம் தரலாகாது.

ஞாநி

19-9-2002

Series Navigation

ஞாநி

ஞாநி