பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

ஏகலைவன்


பெரியாரைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்ட நூல்களில, பத்தாண்டுகளுக்கு முன் குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் ‘ என்ற நூல் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூலுக்கு எதிர்விணையாக விடுதலை க. ராசேந்திரன், அ. மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை போன்ற எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட்டனர். ரவிக்குமார், பெரியாரை தலித் விரோதியாகச் சித்தரித்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்தில் மார்க்ஸியப் பெரியாரியப் பொதுவுடைமைக் .கட்சி மா நாட்டில் பேசிய போது, பெரியாரை தங்கள் வழிகாட்டிகளில் ஒருவராக அறிவித்துள்ளார். இதிலிருந்து ரவிக்குமாரின் பெரியார் விரோதப் போக்கிற்கு திருமாவளவனின் ஆதரவு கிடையாது என்பதை அறியலாம். தற்போது ம. வெங்கடேசனின் ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘ என்ற நூலை அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் வெளியிட்டுள்ளது. ஃபார்வார்டு பிளாக், கம்யூனிஸ்டு கட்சியைப் போலவே ஒரு முற்போக்கு கட்சி. ஆனால் அதன் தமிழகக் கிளை பிற்போக்குத் தனமானது என்ப்து ஆய்வாளர்களின் முடிவு. அதற்கு காரணமே பொன். முத்துராமலிங்கத் தேவர் தான். தென் மாவட்ட சாதிக் கலவரங்களின் பின்னணியில் பொன். முத்துராமலிங்கத் தேவர் இருப்ப்தை அறிந்த பெரியார் அவரைக் கைது செய்யுமாறு த

மிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இப்போது, எந்த பெரியாரிய அமைப்பினரும், சாதிக் கலவரங்களுக்கு காரணமான எந்த சாதிக்கட்சித் தலைவரையும் கைது செய்யுமாறு தமிழக அரசைக் கேட்க மாட்டார்கள். பெரியார், செல்வாக்குமிக்க பசும்பொன். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்யுமாறு கேட்டதில் உள்ள துணிவையும், நேர்மையையும் இந்தப் பின்னணியில் நாம் புரிந்து கொள்ளலாம். காந்தியடிகள் மீது சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு விமர்சனம் உண்டு. எனினும், இவர்கள் காந்தியடிகளை நேசித்தவர்கள். அது போலவே, பெரியாரை விமர்சித்த சமகாலத் தலைவர்கள் யாரும், அவரை இப்போது ம. வெங்கடேசன், ரவிக்குமார், சின்னக் கருப்பன் போன்றவர்கள் விமர்சிக்கும் பொருளில் விமர்சிக்கவில்லை. தலித்தியவாதிகள், திராவிட இயக்கத்தின் குறைகளை நீக்கிய தனித்துவமான தலித் அரசியல் நடத்துவதை யாரும் விமர்சிக்க உரிமையில்லை. ஆனால், திராவிட இயக்க எதிர்ப்பு சங்பரிவார ஆதரவாக மாறினால் தலித் என்பதற்காக அவர்களை விமர்சிக்காமல் விடமாட்டோம். சங் பரிவாரத்தின் சதியை உதாரணத்துடன் விளக்குகிறேன். தமிழ் நாட்டில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ் தேசியத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களைப் பிரிப்பதில் தனித்தமிழ் தீவிரவாதிகளில் ஒரு சாராரும், தெலுங்கு இன தீவிரவாதிகளில் ஒரு சாராரும் ஈடு பட்டனர். தமிழ் நாட்டில் தெலுங்கு தீவிரவா

தத்துடன் செயல் பட்ட திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு பா.ஜ.கவுடன் இணைக்கப் பட்டது. தலித்களுக்கும, பிற்பட்டோருக்கும் உள்ள முரண்பாட்டையும், தலித் அமைப்பினரிடம் உள்ள உள் முரணபாடுகளையும் பயன்படுத்திய சங்பரிவாரம் கனிசமான தலித் தலைவர்களை தனக்கு ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டது. தடா பெரியசாமி, வை. பாலசுந்தரம் என இந்த விபீடணர்களின் பட்டியல் நீள்கிறது. திராவிட இயக்கம் தன் பணபலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி தன் மீதான விமர்சனங்களுக்கு உரிய பதில் சொல்லும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. அதனால் தான் பன்முனைத் தாக்குதல்களைச் சந்திக்கிறது. திராவிடர் கழகம் Periyar.org என்ற புதிய இணையத் தளத்தை விரைவில் துவங்க இருக்கிறது. அதிலாவது, திராவிட இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும், பெரியார் மீதான விமர்சனங்களுக்கும் உரிய பதில் அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். —-மின் அஞ்சல்: egalaivan@gmail.com வலைத் தளம்: egalaivan.blogspot.com

Series Navigation

ஏகலைவன்

ஏகலைவன்