பெயரின் முக்கியத்துவம் பற்றி

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

மலர்மன்னன்


பெயரின் முக்கியத்துவம் பற்றி ஒரு புதிய ஆதாரத்தைத் தேடியெடுத்துக் கொண்டுவந்து திண்ணையில் கடை பரப்பியிருக்கிற, இப்னு பஷீர் , முகமதியர்களிடையே “முகமதியம்,’ ‘முகமதியர்’ என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு ஆதரவு இல்லை என்று எழுதப் பட்டிருப்பதாகக் கூறுகிறார். பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான ‘பாப்புலர்’ என்பதன் சரியான பொருள் “பிரபலம்’ என்பதாகும். “ஆதரவு’ என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் “ஸப்போர்ட்’ என்பதாக இருக்க வேண்டும். முகமதியம், முகமதியர் என்ற பெயர்கள் முகமதியரிடையே பிரபலமாக இல்லை என்றுதான் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர்களிடையே எதிர்ப்போ மறுப்போ ஆதரவின்மையோ இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. முகமதியர் அல்லாதோர் அவ்வாறு பயன்படுத்தலாகாது என்று முகமதியர் கருதுவதாகவும் அவர் கூறவில்லை. மேலும், இன்னொரு விஷயம்: ” அல்லாதான் ஏக இறைவன், அவனது இறுதி தூதர் முகமதுவைத் தவிர எவருமில்லை’ என்று அவர்கள் பாராயணம் செய்யும் மறைநூல் உறுதிபட அறிவிக்கிறது. முகமதிய தேசங்களில் அல்லாவைவிட அவனது தூதரை மறுத்துப் பேசினால் கொடிய மரண தண்டனை நிச்சயம். தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டு, அவன் நம் இறைத் தூதரை இழிவாகப் பேசினான், அதனால் கொன்றுவிட்டேன் என்று சொல்லிஎளிதாகத் தப்பித்துக் கொண்டுவிடலாம். காவல் துறையின் வேலையையும் நீதிமன்றத்தின் நேரத்தையும் மிச்சப்படுத்தியதற்காக அரசாங்கமே அந்தக் கொலையாளிக்கு நன்றி சொல்லும். சமீபத்தில் பாகிஸ்தானில் இப்படித்தான் நடந்தது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு சக தொழிலாளியை இரு முகமதியத் தொழிலாளர்கள் அடித்துக் கொன்றுவிட்டு, அவன் தங்களின் இறைத் தூதுவரை இழித்துப் பேசியதாகப் கூறித் தப்பித்துக் கொண்டனர்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வரைகூட அவரது உருவம் வரையப்படுவதற்கு எவ்வித ஆட்சேபமும் இருந்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் அவரது சித்திரம் எங்காவது வெளிவந்தாலே, அகில உலகத்தையும் நம் முகமதிய சகோதரர்கள் ரணகளமாக்கி விடுகிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் எங்கெங்கோ யார் யாரோ உயிர்ச் சேதம், உடல் ஊனம், பொருட் சேதம் என முகமதியரின் கோபாவேசத்திற்கு பலி கொடுக்க வேண்டியதாகிறது ( ஐரோப்பாவில் ஒரு டச்சுப் பத்திரிகை அவர்களின் தூதரை கேலிச் சித்திரமாக வரைந்ததால் அதற்கு பெங்களூரில் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டனப் பேரணி நடத்திய முகமதிய சகோதரர்கள் வழி நெடுகிலும் கடைகள் மீது கற்களை வீசிக் கொண்டும் சாலை ஓரம் இருந்த வாகனங்களைக் கொளுத்தியவாறும் சென்றார்கள். குவீன்ஸ் ரோட் எனப்படும் ராணியார் சாலையின் ஓரம் சட்டப்படி நிறுத்தக் கூடிய இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் மகளின் புத்தம் புதிய காரும் அவளுக்குச் சொந்தமான ஒரு ஸ்கூட்டரும்கூட அப்போது தீக்கிரையாயின! ).

வேறெந்தச் சமயத்தினரையும்விட முகமதியர்கள் தம் இறைத் தூதர் மீது உணர்ச்சி பூர்வமாக மிகுந்த அச்சமும், பணிவும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர். அவர்களின் மறை நூலில் அவராக முதலில் ஒரு வாசகம் தம்முள் இறங்கியதாகச் சொல்லிவிட்டுப் பிறகு , அதற்கு முரணாக வேறொரு வாசகத்தை அறிவித்து, முன்பு சொன்னது சாத்தான் தந்திரமாகத் தம்மிடம் வந்து காதில் ஓதியது, அது வேண்டாம், இப்போது சொல்வதுதான் இறைவன் சொல்வது என்று அவர் சொன்ன போது கூட அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம் இறை தூதர் மீது விசுவாசமும் நம்பிக்கையுமுள்ளவர்கள் முகமதியர்கள். தங்கள் இறைத் தூதரை அவர்கள் வணங்குவதில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமே ஆகும். வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். “எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல’ என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் “ஹிட் லிஸ்ட்’ பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்