புலம்பெயர் வாழ்வு 13

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

இளைய அப்துல்லாஹ்



இங்கு எமது வீடுகளின் கோடிக்குள் இருக்கும் மூன்று சாமானகள் அம்மிகுளவி, ஆட்டுக்கல், உரல் உலக்கை.
உரல் மர உரலும் இருக்கிறது, கல் உரலும் இருக்கிறது. எம தூரில் உரல் குடையுறதில் மணியண்ணை பிரபல்யம். மணியண்ணையை உரல் மணியம் என்று தான் ஊரில் உள்ளவர்கள் அழைப்பார்கள்.
அவர் காடுவளிய போய் நல்ல முதிரை மரமாகப் பார்த்து அறுத்துக் கொண்டு வந்து அளவான அழகான மஞ்சள் உரல்களை செய்து தருவார். ஒருநாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது உரல் குடைவது ஒன்றும் பெரிய விசயமில்லைப் போல இருந்தது. மணியண்ணை வீட்டில் மழு முதிரைக் கத்தி, பட்டை விலக்கப்பட்ட குத்தி, உரல் கேதுவதற்கு அடையாளமிடப்பட்ட குத்தி என்று பல தினுசுகளில் இருக்கும்.
லண்டனில் எனது நண்பரொருவர் பெரிய வியாபாரி. அவர் இறக்குமதி செய்யாத சாமானே இல்லை. இலங்கை உப்ப, மிளகாய், பிலாப்பழம், அதன் கொட்டை, றம்புட்டான், கதலி, கப்பல், இதரை வாழைப்பழம், இலங்கை கயிறு, முதலை மார்க் மண்வெட்டி, ஊர் கொல்லர்கள் அடிக்கும் கத்தி, இலங்கை சுண்ணாம்பு நீர் கொழும்பு வெத்திலை, பேப்பர் என்ற அவர் கை வைக்காத பொருட்களை இல்லை.
இறுதியாக அவரை சந்தித்த பொழுது அவர் யோசித்துக் கொண்டிருந்தார் நல்ல உரல் உலக்கையை சிலோனில் இருந்து கொண்டு வர வேண்டும்.
உண்மையில் எமது தமிழ் மக்கள் என்று சென்றாலும் இலங்கை ருசியை தேடி செல்வது வழமை. இலங்கை பொருட்களை அதன் ருசியில் உண்தபற்கு சரியான விரும்பம் எனமது மக்களுக்கு அதற்கு தேவையான சட்டி முட்டி சாமான்களும் தங்களோடு வைத்திருப்பதில் பெருமை கொள்பவர்கள். சும்மா சொல்லக் கூடாது.
வறுத்த செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம் உப்பு, தேங்காய்பூ போட்டு உரலில் சம்பல் இடித்தால் அதன் ருசியே தனிதான்.
உரலில் இடித்த சம்பலும் பாணும் பக்கட் பண்ணி எனது தமிழர் கடைகளில் விற்கிறார்கள்.
ஒரு தமிழ் கடையில முதிரை மர உரல் கிடந்தது. விலையை கேட்டேன் உரல் முப்பது பவுண் உலக்கை பதினைந்து பவுண் குத்துமதிப்பாக இன்றைய இலங்கை விலை 8,325 ரூபாய்கள்.

——————-

புலம் பெயர் நாடுகளில் கோயில்குளம், கலியாணவீடு, சாமத்திய வீடு, பல்லு கொழுக்கட்டை அவித்தல், காது குத்துதல், பிறந்தநாள் விழா, அறுப கலியாணம், தேர், தீர்த்தம், அரங்கேற்றம் என்று தமிழர்கள் ஒன்று சேர்வதற்கு மிகவும் விரும்புவார்கள்.
வெள்ளைக்காரர்கள் ஒன்று சேருவதற்கு கால நேரம் தேவையில்லை ஒரு இல் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எமது ஆண்கள் பெண்கள் உடுத்துபடுத்து ஒன்று சேர்வதற்கு இப்படியான விழாக்கள் மிகவும தேவையாக இருக்கிறது. தமிழர்கள் எங்கு சென்றாலும் சம்பிரதாயங்களை விடாமல் காப்பாற்றுபவர்கள் என்ற புகழ் இருக்கிறது.
ஆனால் இந்த சாமத்திய வீடு விசயத்தில் எமது பெண்பிள்ளைகள் மிகவும் வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.
பிள்ளை குமர் ஆனால் மணவறை மஞ்சத்தில் உட்கார வைத்து பார்க்கா விடில் பெற்றோருக்கு பத்தியப்படாது. இது வளர்ந்து வரும் இளைய தலை முறை பெண் பிள்ளைகள் மத்தியில் புலம் பெயர் நாடுகளில் பெரும் எரிச்சலான ஒரு விடயமாக மாறி வருகிறது.
லண்டனில் இரண்டு தந்தையர்கள் என்னிடம் புலம்பினார்கள். எ;கடை பிள்ளைகள் சாமததிய சடங்கு செய்ய வேண்டாம் என்றே சொல்லி விட்டார்கள். அப்படி மீறி செய்தால் தாங்கள் வீட்டை விட்டே போய் விடுவோம் என்று உறுதியாகவே சொல்லி விட்டார்கள்.
ஏற்கனவே ஒரு பெண் பிள்ளைக்கு பெரிதாக சாமத்திய வீடு கொண்டாடி மகிழ்ந்திருந்த பெற்றோருக்கு வந்து விழுந்தது இடி.
குமர்பிள்ளை பள்ளிக்கூடம் போக அங்கு அவளின் வகுப்பு மாணவிகள் எல்லோரும் அவளைச் சுற்றி கேலி பண்ணியிருக்கிறார்கள் “என்னடீ ஆநளெநள வாறதுக்கு கூட விழா கொண்டாடுவீர்களாடீ? அன்று முழுக்க வகுப்பில் கேலியும் கிண்டலும் தான். மனமுடைந்து போன பிள்ளை முதன் முதலில் குமராகி பள்ளிக்கூடம் போனபோது தனது வகுப்பில் கொடுக்க கொண்டு போன “ரொபி சொக்லட்” எல்லாத்தையும் ஊத்தை வாளியில் போட்டுவிட்டு அழுதிருக்கிறாள். வீட்டுக்கு வந்து கதவை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தவள் கைகளை பிளேட்டால் வெட்டி தற் கொலைக்கு முனைந்திருக்கிறாள். பின்னர் அவள் காப்பாற்றப்பட்டாள்.
அங்கு பிறந்த, வளர்ந்த பிள்ளைகள் இந்த சம்பிரதாய சடங்குகளுக்குள் தங்களை திணித்துக் கொள்ள தாயாராகவே இல்லை. வேண்டாம் என்றே மறுத்து விடுகிறார்கள். உண்மையில் எனக்குள்ளேயும் அந்தக் கேள்வி எழுந்த வண்ணமே இருக்கிறது. ஆநளெநள ஏன் தான் விழா?

——————

25 வருடங்களுக்கு முந்திய சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ஊரில் பேர் சொல்லும் படியான பணக்காரர் அவர். அவரின் ஒரே மகள், அவள் ரஜனி.
ரஜனி அவர்களிலும் சாதியில் குறைந்த ராஜன் என்கின்ற ஒரு பெடியனை காதலித்து விட்டாள். அப்பாவுக்கு தெரிந்து அவா சந்நதம் கொண்டு விட்டார். எங்கள் கண் முன்னால் ரஜனியின் அம்மா குழற குழற ரஜனியை ஒரு ப+வரச மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து விட்டார் அப்பா. அழகான ரஜனியை அன்று அலங்கோலமாக பார்த்தேன்.
அதன் பின்னர் ரஜனி காதல் பற்றி மூச்சு விடவே இல்லை. பிறகு இருவரும் அப்பாவுக்கு பயந்து வேறு யார் யாரையோ திருமணம் முடித்து வாழ்கிறார்கள்.
ரஜனியின் சித்தப்பாவின் மகன் லண்டனில் சந்தித்தேன் எதேச்சையாகத் தான் மிகவும் கவலையோடு இருந்தார். என்னைச் சந்தித்த போது அவரின் கவலைகளை என்னொடு பகதிர்ந்து கொண்டார். உங்ளுக்குச் சொன்னால் என்ன. என்ரை பொடிச்சி நேற்று ஒரு குண்டைத் தூக்கி போட்டிருக்கிறாள். “என்ன?” என்றேன்
“நான் பிறந்த எங்கடை ஊரில் சம்பந்தம் பேசினேன். அவன் ஒரு பட்டதாரி பொடியன் குடி, சகரட் இல்லை. தூரத்தில் எஙகடை சொந்தமும் கூட அவன் இப்ப இலங்கையிலை இருக்கிறான் நல்ல பிரயாசக்காரன்.
உவன் பொட்டையிட்டை கேட்டன். அவள் சொல்லுறாள்……
அப்பா… ஊரோ உலகமோ எனக்கு nரியாது என்ரை பாட்னரை செலக்ட் பன்ற உரிமை எனக்கு இருக்குது. அவர் லண்டனிலையோ அல்லது யாழ்ப்பாணத்திலையோ எண்டது இல்லை விச்சனை. என்ரை ரேஸ்ட்டுக்கு வரவேணும். எனக்கெண்டு ஒரு ரசனை இருக்கு. அம்மா உங்கடை காலுக்குள்ளை இருக்கிற மாதிரி என்னாலை இருக்க முடியாது. அதோடை வாறவன் எனக்கு பொருந்துவானா இல்லையா எண்டு அவனோடை ஒரு வருஷம் வாழ்ந்து பாத்துத்தான் முடிவு எடுப்பன். மனிசனுக்கு இடியை இறக்கியிருக்கிறாள் மகள்.
புதிய தலைமுறை இப்படித்தான் சிந்திக்குது. ஆயிரம் காலத்துப்பயிரை, பூமியிலேயே சரியாக நிச்சயிக்க தயாராகிறது எமது தலைமுறை (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

————–

இன்னொரு வரைத் துன்புறுத்துதல் அல்லது தங்கியிருத்தல் என்பத வெள்ளைக் காரர்களிடம் இல்லாதது. அவர்கள் சிறுவயதில் இருந்தே இன்னொருவரிடம் தங்கியிருப்பது அற்ற ஒரு மனநிலையை பிள்ளைகளுக்கு ஊட்டிவிடுகிறார்கள்.
பிள்ளைகளும் ஒன்பதாம் பத்தாம் வகுப்பு பருவத்தில் இருந்து ஓய்வு காலங்களில் தனியாக முகுஊஇ பெற்றோல் ஸ்ரேஸன், மளிகைக்கடை போன்ற இடங்களில் வேலை செய்து பணம் சேகரித்து தமது Pழஉமநவ அழநெல யாக பாவிப்பார்கள்.
எதிலும் தானாக முடிவெடுக்கும் பழக்கம், தானக வேலை செய்வது போன்ற விடயங்களை எமது தமிழ் பிள்ளைகளும் பழகி விடுகிறார்கள்.
ஒரு அப்பா சம்பாதிக்க 10 பேர் உட்கார்ந்து சாப்பிடும் இங்கைய பழக்கம் அங்கு இல்லை.
ஒரு பெண்பிள்ளை தனிய வீட்டை விட்டு வந்துவிட்டாள். தனது நண்பர்களோடு ஹொஸ்ரலில் இருக்கிறாள்.
“அம்மா அப்பா தினமும் சண்டை. என்னால் வீட்டில் இருக்கவே முடியாது. எனக்கொரு தம்பி இருக்கிறான். அப்பாவுக்கு அம்மாமேல் சந்தேகம். அம்மா அழகு. அதனால் அம்மா வெளியில் போனாலே அப்பா ரென்ஸனாகிவிடுவார். அதனால் இப்பொழுது அப்பா நிறைய குடிக்கிறார். அம்மா தேவாலயத்துக்கு போகிறா. இருவரும் ஒருவரை சண்டைதான் . எனக்கு இந்த நெருக்கடிக்குள் இருக்க விருப்பமில்லை. சிறிய வயதில் இருந்து அம்மா அப்பாவின் அரவணைப்பு, அன்பு எனக்கு கிடைக்கவில்லை. தம்பி தான் பாவம்” என்று அவள் சொன்னாள்.
அனேகமான தமிழ்குடும்பங்கள் உழைப்பு, பணம், நெருக்கடி என்றே சுற்றி சுழலவதால் அன்பு பாசம் இல்லாமலே, அற்று போய் பிள்ளைகள் பெற்றார்கள் என்ற உறவுமுறை அறந்து போன குடும்பங்களாகவே இருக்கின்றன. இது காலப்போக்கில் தமிழ் சமூகத்தில் இருந்து வேறுபட்ட தமிழ் பெயருடைய ஐரோப்பியர்களைத் தான் மிச்சமாகத் தரும்.

——————

சாத்திரம், காண்டம், சூனியம் செய்வதற்கு காலடி மண் எடுப்பது, தலை முடி எடுப்பது, உடுப்பை எடுப்பது என்று எமது புலம் பெயர் தமிழர்கள் தமது சித்து விளையாட்டை விட்டு வைக்கவில்லை. வாழ்வின் பல உழைச்சல்களோடு வாழப்வர்களுக்கு காண்டமும் சாத்திரமும் தான் ஆறுதல்.
டொலரில், பவுண்ஸ்ஸில், ஈரோவில் என்று பணம் கறப்பதற்காக இலங்கை இந்தியாவில் இருந்து வரும் சாத்திரிமார்கள் பல தந்திரங்களை கையாள பாவம் மக்கள் அவர்களுக்கு பின்னால் திரிவது தவிர்க்க முடியாததாகிறது. ஏதாவது ஒரு பலன் கிடைக்குமோ என்ற நம்பாசைதான்.
அழகான பெண்ணை வசியப்படுத்த காலடிமண், தலைமுடி, என்று கொண்டு பொய் சாத்திரியிடம் கொடுத்த ஒரு மையனைத் தெரியும். சாத்திரி அதனை வாங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்து விட்டார். இங்கிருந்து வெள்ளைத்தூள் ஒன்றை தபாலில் அனுப்பிவைத்தார். அந்தப் பிள்ளை வேறொருவருடன் ததிருமணமாகி சென்றுவிட்டது. மண் எடுத்து கொடுத்தவர் இன்னொருவரிடம் சென்று கேட்டார் ஏன் பலிக்கவில்லை. அவர் சொன்னார் கடல் கடந்து வரும் போது பலிக்காது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வேப்பங்குழை தே அலைந்தார். விசாரித்த போது அவரது மனைவிக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அதனை விரட்ட குழை தேவையென்றும் சொன்னார்.
மார்கழிமாதம் லண்டனில் பனி கொட்டோகொட்டென்று கொட்டுகிறது. வேம்பை கண்ணால் காணவே கிடையாது. அப்படி இருந்தாலும் இந்தப் பனிக்கு இலை எலலாம் உதிர்ந்திருக்கும். எங்கே போவத என்று கலங்கித்தான் போனார். அவர் வேறு ஏதாவதை பாவித்து பேய் விரட்ட முடியுமா என்று பூசாரிடம் கேட்கச் சொன்னேன்.
பூசாரியை இலங்கையில் இருந்து ஸ்போன்ஸர் செய்து அழைத்திருந்தார். நான் சொன்னேன் ஒரு வழிதான் இருக்கிறது வேப்பங் குழையையும் mail இல் அழைப்பிக்கலாம் தானே. வேறு வழி தெரியவில்லை எனக்கு.

இளைய அப்துல்லாஹ்

anasnawas@yahoo.com

Series Navigation