புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

திலகபாமா


(படம் இடமிருந்து வலம்: அ. சிவக்கண்ணன், திலகபாமா, கே. நாகராஜன், சு.வேணுகோபால்,மு.செல்வா)

மதுரை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டமும் மதுரை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து சென்ற புதன் கிழமை (1.2.06) புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கை சிம்மக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தின. ‘புதுமைப் பித்தனும் அவருக்குப் பிறகும் ‘ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் பேராசிரியர் அ. சிவக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நாலக அலுவலர் கே. நாகராஜன் முதல் நிலை நூலகர் ந. பாண்டுரங்கன் பேராசிரியர் தி.சு நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.ஜே. பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார். புனைகதை எழுத்தாளர் சு. வேணுகோபால் கவிஞர் திலகபாமா ஆகிய இருவரும் திறனாய்வுரை வழங்கினர். சு. வேணுகோபால் தனது திறானாய்வுரையில் புதுமைப் பித்தன் கலகக் காரராக விளங்கியதையும் , தமிழ் மரபின் சாராம்சங்களை உள்வாங்கி வளர்ந்ததையும் , தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்களை அவற்றின் சகல பரிமாணங்களுடன் எடுத்துக் காட்டியதையும் சுட்டிக் காட்டினார்.

கவிஞர் திலகபாமா தனது திறனாய்வுரையில் ,புதுமைப் பித்தன் வாசகர் சமநிலையைக் குலைக்காதவர்.கதைகளுக்குள் பெண் மனமாக மாற முயன்றிருக்கின்றார்.அவரது கதை மாந்தரில்வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்

கவிஞர் அழகு பாரதி கருத்தரங்க உரைகளுக்கிடையே இசைப் பாடல்களைப் பாடினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேளாலர் அ . கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றச் செயலர் பேராசிரியர் முனைவர் பா. ஆனந்த குமார் திறனாய்வுரை வழங்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து பாரதி , புதுமைப் பித்தன் எழுத்துக்கள் சமூக மேன்மைக்கும் இலக்கிய படைப்பாக்கத்திற்கு வழி காட்டுவதாகக் குறிப்பிட்டார். திருநகர் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு. செல்வா நன்றி கூறினார்

mathibama@yahoo.com

Series Navigation