This entry is in the series 20100718_Issue

குலசை சேகர்


ஐயா!

இவ்வார திண்ணையில் புதிய மாதவி தமிழ்ச்செல்வனுக்கு அளித்த பதிலின் இவ்வாறு கூறுகிறார்.

“அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் எழுதியிருக்கும் “சவுந்தர்யலாகிரி” நூலின் 75வது பாடல் திருஞானசம்பந்தரை ‘திராவிடசிசு’ என்று அழைக்கிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இன வரலாற்று ஆய்விலும் திராவிடர் தமிழர், திராவிட தேசம், தமிழ் தேசம் என்ற பார்வையிலும் மிகவும் ஆணித்தரமான ஓர் அடையாளமாகி இனவரலாற்றை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறது.’’

இத்துடன், 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானுஜர், நம்மாழ்வாரின் திருவாய்மொழியைத் ‘’திராவிட வேதம்’ என்றழைத்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


குலசை சேகர்…

Series Navigation