பிரிவுகள்
கணேஷ் குட்டி

பிரிவுகள்!!!!
காலத்தின்
கட்டாயங்களில்
இந்த பிரிவுகளுக்கு தான்
நம்மிடம் இருந்து பிரிவுகள் இல்லை!!!
கல்லூரி படிப்பிற்காக
குடும்பத்தினரிடம் இருந்து பிரிவு!!!
கல்லூரி வளாகத்தில்
கிடைத்த வேலைக்காக
கல்லூரி நண்பர்களிடம் இருந்து பிரிவு!!!!
அன்னிய தேசத்திலும்
அன்னியமாய் தோன்றமால்
பழகிய நண்பர்களிடம் இருந்து பிரிவு இப்போது!!!
விழியோரத்தில்
கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தாலும்
மனதை தேற்றிக் கொண்டேன்
பிரிவுகள் பல உறவுகளை கொடுக்கும் என்று!!!!
***
ganeshkutty76@yahoo.com