பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

எச்.முஜீப் ரஹ்மா‎‎‎‎‎‎ன்


பி‎‎‎ன்நவீனத்துவம் மரணித்து மரணகுழிக்குள் சென்றபின் பின்னை பின்நவீனத்துவம் என்ற கோட்பாடு அறிமுகம் ஆகிறது.ஜெர்மானிய தத்துவவியலாளர் ரவ்வல் செல்மான் புதிய ஒரு கோட்பாட்டிற்க்கு அறிமுகம் குறிக்கிறார்.அந்த கோட்பாட்டின் பெயர் தான் நிகழ்த்தலியம் எனும் பெர்பார்மாட்டிசம் ஆகும்.அவர் தனது கட்டுரை ஒன்றில் அதாவது நிகழ்த்தலியம் அல்லது பின்நவீனத்துவத்தின் முடிவு என்ற கட்டுரையில் பின்நவீனத்துவத்தின் முடிவுக்கான காரணxகளை பட்டியலிட்டார்.மேலும் பிரிட்டிஷ் அறிஞர் ஆலம் கிபே பின்நவீனத்தின் மரணமும் அதற்கு அப்பாலும் என்ற கட்டுரையில் சமூக மாற்றxகளையும் நிகழ்வுகளையும் காரணம் காட்டி பின்னை பின்நவீனத்துவம் தோன்றுவதற்கான காரணxகளை சுட்டிக்காட்டுகிறார்.

பின்நவீனத்துவம் மரணித்து விடும் என்று பின்நவீனத்துவ உபகோட்பாடுகளான ரிகர்சனிசம்,நியோயிசம்,ரீமாடனிசம் போன்றவை குறிசொல்லிய விதம் முக்கியமானதாகும்.விமர்சன பின்நவீனத்துவம் என்ற கோட்பாடு கூட பின்நவீனத்துவத்தின் குறைகளை சுட்டிக்காட்டியது.தமாஷாக சொல்வதென்றால் 9/11 ல் அமெரிக்காவின் இரட்டை டவர் தாக்கப்பட்டபோது பின்நவீனத்துவம் மரணமடைந்தது.1990 க்கு பிந்தைய நாட்களிலும் 2000 க்கு பிந்தைய காலத்திலும் உருமாற்றம் கொண்ட டெக்னாலஜியின் மாற்றம் ஆசிரியர் பிரதியின் உறவையும் ஆசிரியரின் இருப்பையும் உறுதி செய்ததன் விளைவாக பின்னை பின்நவீனத்துவம் தோன்றிவிட்டது என்று சொல்லலாம்.

பின் நவீனத்துவத்தின் பார்வையில் தன்னிலை என்பது அர்த்தகுவியலாகவும் சுழலுக்கு ஏற்ப அர்த்தxகளை உற்பத்தி செய்கின்றது என்பது மாத்திரமே.தன்னிலையின் அர்த்தம் என்பது குறிகளாகவும் குறிப்பிட்ட சூழலில் விரிந்து பரவும் அர்த்தமாகவும் காணப்பட்டது.எனவே தான் வேற்றுலக தன்னிலை ஆகவும் அது உருமாற்றம் கொண்டது.தொடர்ந்து அர்த்தxகளை உற்பத்தி பண்ணும் திறனுடையதாக மாத்திரம் தன்னிலை அடையாளம் காணப்பட்டதால் பின்நவீனத்துவம் அர்த்தபரவல்,கட்டவிழ்த்தல்,ஒத்திபோடுதல் போன்ற கருவிகள் வழி அர்த்தxகளின் நீட்சியை தன்னிலையின் மேல் சுமத்தியது.இந்த இயந்திர விமர்சனமானது பண்பாட்டு தளத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்ததன் விளைவாக நிகழ்த்துதல் என்னும் கருதுகோளுக்கு முக்கியத்துவம் அளித்தது.நிகழ்த்துதல் என்பது நிச்சயமாக புதிய நிகழ்வோ அல்லது தெரியாத நிகழ்வோ அன்று.ஆஸ்டினின் பேச்சு செயல்கோட்பாடானது சொல்வதுபோல மொழியில் செயல்பாடு என்பது தன்னளவில் அது உறுதியளியளிப்பது மாத்திரமே ஆகும்.இந்த நிலையில் தான் கலைநிகழ்வு என்பது நவீனத்துவ அவந்தகார்டு செயலில் புதியதை படைக்கும் நிகழ்வு ஆகவும் வாழ்க்கும் கலைக்குமான எல்லையின் இடைவெளியாக,பின்நவீனத்துவத்தில் தன்னிலைக்கும் கலைசூழலுக்குமான உறவாக நிகழ்த்துகலையாக காணப்பட்டது.ஆனால் நிகழ்த்துதல் என்பது இxகே வேறு அர்த்தம் கொண்டது.நிகழ்த்துதலின் அம்சம் என்பது அடிப்படையாகவோ,தன்னிலையின் சூழலிலோ கொண்டது அல்லாமல் தன்னிலையை புனிதமாக நிகழ்த்தும் போது வாசகரோ அல்லது பார்வையாளரோ மனத்தளவில் புனிதமானதாக உணரவேண்டும்.இந்த புனித உருமாற்றதில் தன்னிலை பொருள் அர்த்தகுவியலாக இல்லாமல் மேனிலை அர்த்த கட்டமைபு இல்லாமல் ஒரே அர்த்தம் கொண்டதாக தெளிவாக ஒரு அர்த்ததில் அடையாளம் கொண்டு இறையியலுடன் தொடர்பு கொண்டு அன்பு,காதல்,பாசம்,நம்பிக்கை,ஆனந்தம் என்ற புதிய விரிவு பெறும்.

பின் அமைப்பியல் அல்லது எதிர்கோட்பாட்டியம் அல்லது மினிமலிச இலக்கிய திறனாய்வாளர்கள் புனித தன்னிலை என்ற கோணத்தில் தன்னிலையை காணவேயில்லை.நாப் மற்றும் மைக்கேலின் எதிர்கோட்பாடு அய்க்கியம் அல்லது தனித்தனியற்ற அடிப்படை என்ற கருத்து வாயிலாக ஆசிரியரின் நோக்கம்,வாசகர்,பிரதி என்ற மூன்று அடிப்படை விளக்கம் மையபடுத்தப்பட்டது.இந்த இணைவு கோட்பாட்டிற்க்கு எதிரானது.நாப்,மைக்கேலின் கருத்துப்படி கோட்பாடு என்பது விளக்கவியல் செயல்பாடுகளை கொண்டதல்ல மாறாக நிலையான கருத்துகொண்டு மற்ற எல்லா அர்த்தxகளை உள்ளும்,புறமும் தகவமைத்து கொண்டதாக அல்லாமல் ஆசிரியரின் நோக்கம் எது என்று காணவும்,வாசகனிடத்தில் பிரதி எவ்விதமான உறவு கொண்டிருக்கிறது என்பதை காணவும்,பிரதியின் நித்திய அர்த்தம் எதுவாக இருக்கும் என்பது மாத்திரமே அன்றி குழப்பxகளை உருவாக்குவதல்ல.ஆசிரியர்,குறி,வாசகர் என்ற அய்க்கியம் மறைமுகமாக ஆனால் தன்னிலையின் தன்மையினை காட்ட உதவுகிறது.குறியியல் அர்த்தxகள்,விளக்கவுரைகள் தன்னிலையின் அர்த்தத்தை காணமல் அதன் புனித தன்மையை உணராமல் தன்னிலையின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது.தன்னிலையின் செயல்பாடானது நம்பிக்கையை ,மற்றமையை,தன்னிலையின் நம்பிக்கை செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும்.எதிர்கோட்பாட்டு தன்னிலைகள் எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதாக வாசகருடன் தொடர்பு கொண்டவராக அடிப்படை தனித்தனியே விலகிரிருப்பவரல்லாமல் நிகழ்த்துத்துதலை மேற்கொண்டவண்ணம் இருக்கும்.பண்பாடும்,கருத்தியலும் தன்னிலையை ஆக்கிரமித்துக்கொண்டதன் விளைவாக தன்னிலையின் உண்மை நிலை தெரியாமல் போய்விட்டது.கோட்பாடு பண்பாட்டு பன்மியத்தையும்,கருத்தியலையும் அர்த்தம் கண்டு அதற்கு விளக்கம் கொடுப்பதினால் தன்னிலையை கோட்பாடினால் அறிய முடியாமற் போனது.

அமெரிக்காவின் எரிக் ஹான்ஸ் உருவாக்கிய ‘உருவாக்க மானுடவியல்’ என்ற துறை மூலம் நாப்,மைக்கேல்லின் எதிர்கோட்பாடு உருகொண்டது.உருவாக்க மானுடவியல் நிகழ்த்தலியத்துக்கு ஆன்மீக அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்தது.ரெனே ஜிராடுவின் விக்டிமெசெசன் (சாட்சி)கோட்பாடு கூட ஜெனெரட்டிவ் (உருவாக்க)ஆந்தரோபோலஜியின் வழியாக மினிமலிச மொழி கோட்பாட்டின் மூலம் பல விடயxகளுக்கு உத்வேகம் அளித்தது.உருவாக்க மானுடவியலின் மைய விசயமே போன்மை நெருக்கடியாகும்.வரலாற்றுக்கு முற்பட்ட மொழியறிவற்ற போன்மை மனிதர்களின் மொழியானது ஒருவித குறிமாற்றத்தை விளக்கியது.சுருக்கமாக சொல்வதானால் மனித மொழி செயல்பாடானது புனித தன்னைலையை உருவாக்குவதே ஆகும்.ஹான்ஸ்,நாப்,மைக்கேல் ஆகியோர் பல குரல்களிலும் சொல்லும் முக்கிய செய்தி ஆன்மீகத்தின் எழுச்சி ஆகும்.தெரிதாவின் வித்தியாசம் என்ற கருத்தினை ஹான்ஸ் ஆன்மீக குறி செயல்பாடு என்றதும் பின்னை பின்நவீனத்துவ சமூகம் அன்புக்கும் ஆன்மீகத்துக்கும் அளிக்கின்ற முக்கியத்துவம் போன்றவை நிகழ்த்தலியம் என்ற புதிய கோட்பாட்டிற்க்கு ஆதரவு அளித்தன.

புதிய வரலாறியம்(நியூ ஹிஸ்டோரிசிசம்) பல வகையிலும் பெர்பார்மாட்டிசம் எனும் நிகழ்த்தலியத்துக்கு ஆக்கம் கொடுத்துள்ளது.ஸ்டீபன்ன் கிரீன்பிளாட்டின் சுய அலxகாரம் என்னும் கருதுகோள் நிகழ்த்தலியத்தை உருவாக்க வல்லதாக திகழ்ந்தது.பல நிகழ்த்தலிய செயல்பாடுகளே நிகழ்த்தலியம் உருவாக காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.இலக்கியத்திலும்,குறிப்பாக திரைபடத்திலும் நிகழ்த்தலிய செயல்பாடுகள் 1990 க்கு பிந்தைய காலத்தில் அதிகம் வெளியாயின.ருஷ்யாவின் விக்டர் பெலிவின் சிறுகதைகளும்,அவரது ‘புத்தனின் சிறுவிரல்’ நாவலும் லூட்மிலாவின் ‘சந்தோசமான மரணச்சடxகு’ என்ற நாவலும், ஜெர்மானியில் இxகோ சுலூட்சியின் ‘எளிய கதைகள்’ என்ற நாவலும் நிகழ்த்தலிய செயல்பாடுகளுக்கு சிறந்த உதாரணxகளாகும்.திரைபடத்தை பொறுத்தவரை ஆஸ்கர் பரிசுபெற்ற அமெரிக்கன் பியூட்டி மற்றும் கோஸ்ட் டாக்,டானிஸ் படமான தி இடியட்ஸ் மற்றும் செக்,ஜெர்மானிய,பொகிமிய திரைபடம்கள் பலவும் நிகழ்த்தலிய செயல்பாடுகளாகும்.

பல்வேறு பண்பாடுகளில்,வகமைகளில்,வித்தியாசஞ்களில் தன்னிலையின் நிகழ்த்தலிய செயல் என்பது ஆன்மீக குணஞ்களை கண்டடைதலாகும் என்பது நிகழ்த்தலியத்தின் மைய சரடாகும்.அமெரிக்கன் பியூட்டி,தி இடியட்ஸ்,ரிடன் ஆப் தி இடியட்ஸ் அண்ட் லோனர்ஸ் போன்ற படஞ்களில் மைய பாத்திரஞ்கள் ஊமைகளாகவோ அல்லது ஊனமுற்றவர்களாகவோ இருக்கிறார்கள்,அமெரிக்கன் பியூட்டியின் கதாநாயகன் பிரக்ஷாதமாக திவலாகிறான்.தி இடியட்ஸ் மற்றும் சமூக உறுப்பினர்கள் உள்நோக்கத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் களாகிறார்கள்.இந்த ரிடன் ஆப் இடியட்ஸ் படத்தில் எளிய மனமுள்ள மையபாத்திரம் மனநலபாதுகாப்பகத்தில் தஞ்சமடைகிறான்.லோனர்ஸ் படத்தில் தினவாழ்வை மறந்த மனிதர்களின் நீண்ட போரட்டம் வெகுஅழகாக தொழிற்பட்டிருக்கிறது.

நிகழ்த்தலியத்தை பொறுததவரை முதலில் அது பின் நவீனத்துவத்தில் நிகழ்த்துதலை திறம்பட நடத்தியது.நிகழ்த்தலியமாக அது மாறிய பின் முக்கியமாக ஜந்து குணாம்சஞ்களை கொண்டிருக்கிறது.
1.முடிவான இருப்பல்லாது அதிகாரபூர்வமற்று ஏற்கனவே இருப்பவை புதிய கோணத்தில் புதிதாக கடந்து செல்லவல்லதாக சடஞ்கோ,கொள்கையோ உருமாற்றம் கொண்டு அனுபவத்தில் வரலாற்றை திரும்ப கொண்டு வருவது போன்று தன்னிலை அமைதல் வேண்டும்.
2.புனித தன்னிலையின் குறி அமைப்புகளுக்கும் [அதாவது தன்னிலை,குறி,பொருள் ஆகியவற்றுக்கிடையிலான உறவு] மிதக்கும் அர்த்தxகளுக்கும் ஆன வேறுபாடு முதலியவை சமூக ஊடாட்டத்தில் தொடர்பு கருவியாக இருக்க வேண்டும்.குறியின் செயல்பாடு நம்பிக்கையை ஏற்படுத்தவல்லதாக இருக்கவேண்டுமே ஒழிய குறியியல் விளக்கxகளுக்கோ அல்லது பொருட்கோளலியலுக்கோ வழிகோலுவதாக அமைதல் கூடாது.தன்னிலை எளிமையானதாக ஊமையாக,நாயகதன்மை கொண்டதாக அமைதல் ஒழிய சந்தேகம் கொண்டதாக,அணி அலxகாரம் கொண்டதாக இருக்க கூடாது.
3.முடிவற்ற அர்த்தஞ்களை ஒத்திபோடும் தன்மைக்கு முடிவு கட்டும் நிலை அமைய பெற்று இருக்கவேண்டும்.
4.அபவுதிகம் எதிர்மனநிலையை உருவாக்காது நம்பிக்கையை ஏற்படுத்தவல்லதாக அமைதல் வேண்டும்.வெறுமை,தனிமை,அவநம்பிக்கை போன்றவை களையப்பட்டு மனோதத்துவத்திலோ அல்லது புனைவின் சட்டகஞ்களில் அன்பு,அய்கியம்,பேரானந்தம் என்ற நிகழ்த்துதலை உருவாக்க வேண்டும்.
5.தஞ்சமளிக்கும் குணம் வரப்பெற்ற நிகழ்த்துதலில் பெண்மை தனித்த அன்புடைய மாந்தராக ஆகும் போது பாலின கட்டவிழ்ததலோ அல்லது பாலின வேறுபாடுகளோ முக்கியத்துவம் பெற்றதாக மாறாது.

பின் நவீனத்துக்கும் நிகழ்த்தலியத்துக்குமான முக்கிய வேறுபாடு என்பது தன்னிலை,பொருள்,குறி பற்றியதே ஆகும்.பின் நவீனத்துவம் எல்லாவற்றுக்கும் முடிவு கட்டியபோது நிகழ்த்தலியம் மனிதனை மீண்டெடுத்தது.அன்பை,ஆன்மீகத்தை,நம்பிக்கையை உருவாக்கியது.இந்த இடம் அற்ற பின் நவீனத்துவம் மரணித்து விட்டது.காரணம் மனிதம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.


Series Navigation